Daily Current Affairs 02 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 02
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- சீனாவின் ‘தியான்ஹே’ எனப்படும் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்கள் ஜீன் மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
- சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளர் யாங்லிவி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம் பெறாத சீனா தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.
- ‘தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது ஏப்ரல் 29ம் தேதி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- அந்த நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டு அது விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
- இதன் அடுத்தகட்டமாக ‘சென்ஷீ 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் தளத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
- 70 டன் எடை கொண்டதாக உருவாக்கப்படும் விண்வெளி நிலையத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறிய சாதனையை ஹாங்காங்கை சேர்ந்த சாங்யின்-ஹங் முறியடித்தார்.
- 44 வயதான சாங்யின் ஹங் 8848.86 மீ எவரெஸ்ட் மலையை மே 23 அன்று 25 மணி 50 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
- இதற்கு முன் எவரெஸ்டை வென்ற மிக விரைவான பெண் என்ற சாதனையை நேபாளி புன்ஜோ ஜாங்மு லாமா வைத்திருந்தார். 2018 ல் 39 மணி 6 நிமிடங்களில் ஏறுதலை முடித்திருந்தார்.
தேசிய செய்திகள்
- விஸ்டாரா நிறுவனம் கொள்முதல் செய்த எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக இருக்கை வசதிகள் கொண்ட ஏ-320 நியோ ரக விமானம் இந்தியா வந்து சேர்ந்தது.
- சிஎஃப்எம் நிறுவனத்தின் அதிநவீன ‘லீப்’ இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த விமானம் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியதாகும்.
- டாடா குழுமம் மற்றம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்டாராவின் விமான சேவையில் இணையும் 46 வது விமானம் இதுவாகும்.
- ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் உள்பட 50 விமானங்கள் கொள் முதல் செய்ய பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடம் விஸ்டாரா நிறுவனம் 2018 ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக இந்த ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் வந்துRead More…