Daily Current Affairs 30 May 2021
Daily Current Affairs in Tamil
மே 30
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
- அமேசான் நிறுவனம் 1994 ஜீலை 5 ல் நிறுவப்பட்டது.
- ஜெஃப் பெசோஸீக்கு பதிலாக 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிய ஆன்டிஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜீலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
- ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.
- சீனாவில் 70 வயது வாங்லாங் என்ற பெண் கடந்த 16 ஆண்டுகளில் 100 மராத்தான் போட்டிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனால் இவரை ‘சூப்பர் பாட்டி’ என சீனர்கள் அழைக்கிறார்கள்.
- 2004 ம் ஆண்டு தன்னுடைய முதல் மராத்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார்.
- இதுவரை 100 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்திருக்கிறார். 2005 முதல் 2017 வரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் மாரத்தான் போட்டியில் 13 முறை ஓடி முடித்திருக்கிறார்.
- 2021 ல் லியோனிங் பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 168 கிமீ தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்தார்.
- சீனாவின் தைஷானில் நடைபெற்ற சர்வதேச மலையேற்ற போட்டியில் கலந்து கொண்டு 27 வது இடத்தை வாங்லாங் பிடித்துள்ளார்.
- மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருவிக்கு ‘பிரீபென்ஸ்கோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
- சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்த கருவி மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறாத என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.
- சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
- சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தை, சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹீனன், டுஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
- இந்த ‘பிரீபென்ஸ்கோ’ கருவியில் இருக்கும் சிறிய குழாயை பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை அழுத்தமாக செலுத்த வேண்டும்.
- அவரின் மூச்சுக்காற்று இந்த கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோ மீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா அதாவது பாசிட்டிவா அல்லது நெகட்டிவாRead More…