- சர்வதேச விண்வெளி அகாடமி மிக உயர்ந்த விருதான 2020 வான் கர்மன் விருதைப் பெறுபவராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இஸ்ரோ தலைவர் டாக்டர் கைலாசவடிவு சிவனை அறிவித்துள்ளது. இந்த விருது மார்ச் 2021 இல் பாரிஸில் டாக்டர் கே.சிவனுக்கு வழங்கப்படும்.
- விஞ்ஞானத்தின் உள்ள சிறப்பான பங்களிப்புகளையும் வாழ்நாள் சாதனைகளையும் அங்கீகரிக்க ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
செய்தி துளிகள் :
கே.சிவன் 2014 இல் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆஃப் சயின்ஸ் விருதை பெற்றார். 2011 இல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதைப் பெற்றார். வான் கர்மன் விருதைப் பெற்ற முதல் இந்தியர் உடுப்பி ராமச்சந்திர ராவ் ஆவார்.