முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

  • சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக சில நாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.
  • உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

 

செய்தி  துளிகள்:

  • ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.15, 128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ரூ.15,128 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Get More Info