- மன்னார் வளைகுடாவில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 எம்எல்டி) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
- இந்தத் திட்டமானது, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் இந்தத் திட்டம் அமையவிருக்கும் இடத்திலிருந்து 25 மீட்டர் தூரத்தில் மன்னார் வளைகுடாவின் தேசிய கடல் வளப் பூங்கா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெருநிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பங்களிப்புத் திட்டத்தின் கீழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் விதமாக ரூ.10.05 கோடி ஒதுக்க வேண்டும் என மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.
செய்தி துளிகள்:
- மன்னார் வளைகுடா என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும்.