Today TNPSC Current Affairs February 15 2020

We Shine Daily News

பிப்ரவரி 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 14 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கல்விக்கு ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • குறிப்பாக பள்ளி கல்வித் துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181 கோடியை தமிழக அரசு ஒதுக்கி நடப்பில் உள்ள திட்டங்களைத் தொடர வழி செய்துள்ளது. அதுபோல் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அந்த துறைக்கு ரூ.11,894.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

  • கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • ஹார்வார்டு பல்கலைக்கழகம், ஹ{ஸ்டன் பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் குவாஹாட்டி பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்ப்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி கற்பிக்க சீரிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

  • சேலம் தலைவாசலில் ரூ.1,020 கோடியில் கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • கால்நடை பராமரிப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்துக்கு அடிக்கல்லை முதல்வர் நாட்டியுள்ளார்.

 

 

  • சென்னை அருகே பேரூரில், ஜப்பான் பன்னாட்டுக்கூட்டுறவு முகமையின் ரூ.4267.70 கோடி நிதியுதவியுடன் ரூ.6,078.40 கோடியில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
    • மேலும் ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • எதிர்மறை சவ்வூடு பரவல் அமைப்பு முறையில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.

 

 

  • வரும் நிதியாண்டில் (2020-21) பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

 

 

  • விழுப்புரம் அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்திலும், நாகப்பட்டினம் ஆற்காட்டுத் துறையிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
    • மீன்பிடித் தடைக்காலத்தில் உதவித்தொகை வழங்குவதற்காகவும், மீனவர்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்காகவும் சிறப்பு உதவித் தொகை வழங்குவதற்காகவும் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.298.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.30 கோடி செலவில் கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் வரும் ஆண்டில் அமைக்கப்படும். 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக்கு ரூ.1,229.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

 

  • சென்னை மாநகரம் நிலையான பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
    • சென்னை மாநகரம் தொடர்ந்து நிலைக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், உலக வங்கியின் ஆதரவுடன் ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • செய்தி துளிகள் :
      • பெருநகரப் போக்குவரத்து நீர் ஆதாரங்களின் தாங்குத்தன்மை மற்றும் நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை என்ற மூன்று முக்கியத் தூண்களை இந்தத் திட்டம் மையமாக கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல் அதிபர் மார்சேலோ ரெபேலோ டிசௌசா ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14 அன்று கையெழுத்தாகின.
    • டிசௌசாவை பிரதமர் மோடி தில்லியில் பிப்ரவரி 14 அன்று சந்தித்தார். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • செய்தி துளிகள் :
      • வர்த்தகம், முதலீடு, கல்வி அறிவுசார் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாச்சாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் இரு தலைவர்களின் முன்னிலையிலும் கையெழுத்தானது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விருதுகள்

 

  • மகளிர் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான தேசிய விருதின் 2-ஆம் பரிசு என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
    • என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் விப்ஸ்’ அமைப்பின் நெய்வேலி மைய பொறுப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வரும் நலப் பணிகளால், நவரத்னா பிரிவில் இரண்டாம் இடத்துக்கான விருதைப் பெற்றது.
    • செய்தி துளிகள்
      • விப்ஸ் அமைப்பானது பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலைக் குழு என்ற மத்திய அரசு அமைப்பின் ஆதரவின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

 

 

 

திருக்குறள்

 

குறள்: 109

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

விளக்கம்: நன்மை செய்த ஒருவர், கொலை செய்வது போன்ற கொடுமையைச் செய்தாரானாலும், அவர் செய்த ஓர் உதவியை நினைத்தால் அத்தீமை மறைந்து போகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On February 14, 2020, the first inter-city electric bus was launched. The bus will transit between Mumbai and Pune twice every day. It was launched by the Union Transport Minister Nithin Gadkari.
    • The bus seating capacity was 43. It is capable of running 300 kilo metres in a single charge.
    • Related Keys
      • Ministry of Road Transport and Highways Founded: July 1942
      • Ministry of Road Transport and Highways Headquarters: New Delhi

 

 

  • The Maharashtra government announced a five-day working week for its officers and employees. The cabinet also extended the current work hours by 45 minutes.
    • The new routine would start from February 29.
    • Related Keys
      • Maharashtra Formation: 1 May 1960
      • Maharashtra Literacy (2011): 82.34%

 

 

  • Since the Abrogation of Article 370, the GoI has been keenly focusing on improving the infrastructure in the Kashmir region. The AIIMS proposal was approved by the Union Government under Pradhan Mantri Swasthya Suraksha Yojana.
    • The AIIMS proposal was approved by the Union Government under Pradhan Mantri Swasthya Suraksha Yojana.
    • Related Keys
      • Article 370 of the Indian constitution gave special status to Jammu and Kashmir was abrogated by the Centre on August 5.

 

 

INTERNATIONAL NEWS

  • Indian-origin Alok Sharma was named the new UK Minister in charge of the crunch UN climate talks to be hosted by Britain this November.
    • Agra-born Sharma has been promoted to the post of Secretary of State for Business, Energy and Industrial Strategy in UK Prime Minister Boris Johnson’s Cabinet reshuffle.

 

 

 

  • The World Meteorological Organization announced that for the first time in record Antarctica has recorded its hottest temperature ever, 75 Degree Celsius. So far, the highest was 18.3 Degrees Celsius that was recorded in January 1982.
    • The higher temperatures were influenced by shifts in El Nino and Ocean Currents..
    • Related Keys
      • According to United Nations scientists, the Antarctic region stores more than 70% of world’s fresh water
      • It is the fifth-largest continent and nearly twice the size of Australia.

 

 

WORDS OF THE DAY

  • Luminary – a person who inspires or influences others
    • Similar words – inspiration , leader
    • Antonyms – ordinary person , pleb

 

  • Languid – having or showing a disinclination for physical exertion or effort.
    • Similar words – relaxed , unhurried .
    • Antonyms – energetic active