Today TNPSC Current Affairs December 07 2019

We Shine Daily News

டிசம்பர் 07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள் 

 

  • தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநராகவும், மத்திய நிதி நிலை அறிக்கை தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
    • இவர் கடந்த ஜீலை மாதம் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
    • செய்தி துளிகள் 
      • தற்பொழுது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
      • தலைமைச் செயலாளர் என்பவர் இந்தியாவில் ஒரு மாநிலத்தை நிர்வகா ரீதியாக ஆளும் அதிகாரியாவார்.
      • தலைமைச் செயலாளரின் கட்டுப்பாட்டில் மாநிலக் காவல்துறை, முழுமாநில அரசு நிர்வாகம், அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கி வருகின்றன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 2020-21 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை குடியரசு தலைவரிடம் 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் சமர்பித்தார்.
    • 2021-26 வரையிலான நிதிக்குழு அறிக்கையை சமர்பிக்க அடுத்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • அரசமைப்பு சட்டத்தின் 280-ஆவது பிரிவின்படி, நிதி தொடர்பான பரிந்துரைகள் வழங்க நிதிக்குழு அமைக்கப்படுகிறது.
      • 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பரிந்துரைகளை வழங்க 15-ஆவது நிதிக்குழுவை என்.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.
      • முதல் நிதிக்குழுவின் தலைர் – மு.ஊ.நியோகி ஆவார்.

 

 

  • இந்தியாவில் 15.86 லட்சம் நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
    • இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்படி 2018 – ம் ஆண்டு 15இ86இ571 பேருக்கு புற்றுநோய் உள்ளது.
    • புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க இந்தியாவில் மொத்த மாநிலங்களில், 18 மாநில புற்று நோய் சிகிச்சை மையங்களும், 20 சிறப்பு சிகிச்சை மையங்களும் மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.
    • செய்தி துளிகள் 
      • மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆவர்.
      • புற்றுநோய்க்கு ரேடியோதெரபி கீமோதெரபி, அறுவைசிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன.
      • ரத்தம் உறையாமல் போகும் ஹீமோபிலியா நோயால் இந்தியாவில் 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

விருதுகள்

 

  • நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது – மத்திய அரசு அறிவிப்பு.
    • தமிழகத்தைச் சேர்ந்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-ம் இடத்தை பெற்றுள்ளது.
    • அந்தமான் அபர்தீன் காவல் நிலையம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
    • செய்தி துளிகள்
      • மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நாட்டின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களுக்கு விருது வழங்கி வருகிறது.
      • இந்த விருது குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் செலுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.

 

 

நியமனங்கள்

 

  • மத்திய உள்துறை அமைச்சக ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்.
    • இவர் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டவர் ஆவர்.
    • பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த ஓராண்டு வரை அவர் பதவியில் இருப்பார்.
    • மத்திய ரிசர்வ் காவல் படை இயக்குநராகவும், தேசிய காவல் அகடெமி இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.
    • செய்தி துளிகள் 
      • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
      • இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • எப்ஐ எச் சிறந்த வீரர் விருது – இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சர்வதேச ஹாக்கி சம்மேளம் சார்பில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படுகிறது.
    • மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்தியா 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
      வளரும் வீரர் விருதுக்கு விவேக் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

குறள் எண் : 40

அதிகாரம் : அறம் வலியுறுத்தல்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

செயற்போல தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

விளக்கம்: மு.வ: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு

செய்யத்தக்கது அறமே செய்யாமல் காத்த கொள்ளத்தக்கது பழியே

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS     

  • Union Home Ministry has sanctioned a sum 100 crore rupees from Nirbhaya Fund for setting up and strengthening of Women Help Desks in Police Stations. This scheme would be implemented by the States and Union Territories.
    • The Help Desks would focus on making the Police Stations more women-friendly and approachable, as they would be the first and single point of contact for any woman walking into a police station.
    • Related Keys
      • Union Home Ministry Formed : 15 August 1947
      • Union Home Ministry Headquarters : North Block, New Delhi.

 

 

  • Union Minister for Commerce & Industry and Railways, Piyush Goyal along with Minister of State of Commerce and Industry, Som Parkash, inaugurated the 3rd edition of National Public Procurement Conclave in New Delhis.
    • The two-day conclave has been organized by Government e-Marketplace (GeM) in association with Confederation of Indian Industry (CII).
    • Related Keys
      • GeM has now introduced GeM 3.0, which is a more robust, flexible e-marketplace with an intuitive User Interface (UI) to make procurement of Goods and Services simpler than ever.

 

 

  • The Uttarakhand state forest minister Shri Harak Singh Rawat laid foundation stone of India’s first Ganga centralised aqualab at Wildlife Institute of India (WII) Dehradun, Uttarakhand.
    • The aqualabs will be set up under the National Mission for Clean Ganga (NMCG). Various aquatic life forms found in the 2525-kilometer-long Ganga river would be preserved in the lab WII.
    • Related Keys
      • Uttarakhand Capital: Dehradun
      • Uttarakhand Literacy (2011): 79.63% (17th)

 

 

INTERNATIONAL NEWS

  • The leaders of 29 countries gather in London at the NATO summit. The year 2019 marks the 70th anniversary of the summit. It was attended by NATO leaders and chaired by NATO Secretary General Jens Stoltenberg.
    • NATO was founded in the wake of the Second World War by the U.S. and the main European powers as a means of military defense against Soviet Russia.

 

 

IMPORTANT DAYS

  • The International Civil Aviation Day is observed every year on 7 December across the world to generate and reinforce worldwide awareness of importance of international civil aviation to social and economic development.
    • Related Keys
      • The International Civil Aviation Day was established in 1994 as part of ICAO’s 50th anniversary activities.
      • It was officially recognised in the UN system by the UN General Assembly in 1996.

 

 

WORDS OF THE DAY

  • hapless – unfortunate.
    • Similar Words – unlucky , pitiful
    • Antonyms – lucky , Blessed

 

  • hasten – be quick to do something.
    • Similar Words – hurry , Speed up
    • Antonyms – delay , slow down