Today TNPSC Current Affairs November 14 2019

We Shine Daily News

நவம்பர்­­ 14

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்து, அவற்றில் அடங்கியிருக்கும் கோட்டங்கள், வட்டங்கள் விவரங்கள் அடங்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
    • தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • செய்தி துளிகள் :
      • புதிய மாவட்டங்கள்
      • கள்ளக்குறிச்சி
      • தென்காசி
      • செங்கல்பட்டு
      • திருப்பத்தூர்
      • ராணிப்பேட்டை
      • புதிய மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32-லிருந்து 37 ஆக உயர்ந்துள்ளன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ‘தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்பின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒருமனதாக தீர்ப்பளித்தது.
    • இதன் மூலம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உள்பட்டதே’ என்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த இந்த அமர்வு, ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஒரு பொது அமைப்பு’ என்று குறிப்பிட்டுள்ளது.
      • அதேசமயம், ‘ஆர்டிஐ சட்டம், கண்காணிப்புக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

  • சுரங்கத் துறை உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்ததை விட இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தியானது (தொழில்துறை உற்பத்திக் குறியீடு) 3% சரிந்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக தற்பொழுது மூன்று பெரிய துறைகளின் உற்பத்தியும் குறைந்து, மிகக் குறைந்த மாதாந்திர வளர்ச்சியை உற்பத்திக் குறியீடு பதிவு செய்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களின் சர்வதேச ஒப்பந்தத்தின் (International Treaty of Plant Genetic Resources for Food and Agriculture – ITPGRFA) 8வது அமர்வில் மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உரையாற்றினார்.
    • ITPGRFA ஆனது விதை ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
    • செய்தி துளிகள் :
      • இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் (Protection of Plant Varieties and Farmer’s Rights – PPV & FR) சட்டமானது’ விவசாயிகளின் உரிமைகளையும் பயிர்களை வளர்ப்பவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கின்றது.
      • இந்தியச் சட்டமானது இந்த உடன்படிக்கையின் 9வது பிரிவுடன் முழுமையாக இணங்குகின்றது.

 

 

  • ஒரு உலகளாவிய அரசு சாரா நிறுவனமான “க்ளைமேட் டிரான்ஸ்பரன்சி” என்ற அமைப்பானது ‘பழுப்பு நிறத்திலிருந்து பச்சை நிறம் – 2019’ என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • உலகின் சராசரி வெப்பநிலையானது50 செல்சியஸீக்கு மேல் உயராது என்பதை உறுதி செய்யும் ஒரே ஜி20 நாடு (ஜி20 அமைப்பில் உள்ள) இந்தியா என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. புவி வெப்பமயமாதலுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தால் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கைக் கொண்டுள்ளன இந்த அமைப்பில் உள்ள நாடுகள் பெரிய அளவிலான கார்பன் உமிழ்வுகளைக் கொண்டுள்ளன.
      • புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியா முதலீடு செய்ததற்கான இந்த அறிக்கையானது இந்தியாவைப் பாராட்டியுள்ளது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

  • சூரியனைச் சுற்றி வரும் தொலைதூர நுண்கோளில் வெற்றிகரமாக ஆய்வு செய்த ஜப்பானின் ஹாயாபுஸா – 2 விண்கலம், பூமிக்குத் திரும்புவதற்காக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், ரியூகு நுண்கோளில் இரு முறை தரையிறங்கி அங்குள்ள மணல் மாதிரிகளை சேகரித்துள்ளது.
      • அடுத்த ஆண்டு இறுதியில் பூமியை வந்தடையும் என்று ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது.

 

 

  • சந்திராயன் – 2 விண்கலம் எடுத்த நிலவின் நிலப்பரப்பின் முப்பரிமாண புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
    • நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ‘சந்திராயன் – 2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
    • சந்திராயன் – 2 ல் 8 கருவிகள் இடம்பெற்றுள்ளன.
    • இந்த 8 கருவிகளும், நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன.
    • செய்தி துளிகள் :
      • ஏற்கனவே, ஆர்பிட்டர் விண்கலத்தில் உள்ள சேஸ் – 2 கருவி, நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ‘ஆர்கான் 40’ என்ற வாயு இருப்பதைக் கண்டறிந்தது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக நீரிழிவு தினம் (WDD)) நவம்பர் 14 அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது. நீரிழிவு விழிப்புணர்வு மாதம் மற்றும் உலக நீரிழிவு தினம் 2019 இன் கருத்துரு “குடும்பம் மற்றும் நீரிழிவு”
    • Theme 2019 : Family and Diabetes

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 17

அதிகாரம் : வான்சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

விளக்கம் : மேகம் கடலிலிருந்து நீரை கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Several countries, including Australia, Iran, UK and Vietnam, will participate in the 14-day India International Trade Fair 2019 beginning in New Delhi.
    • The theme for the 39th edition of the fair (November 14-27, 2019) is ‘Ease of Doing Business’ inspired by India’s unique achievement of rising to 63rd rank on the World Bank’s Ease of Doing Business Index from 142nd rank in 2014.
    • Related Keys
      • India International Trade Fair 2018 head from 14th November to 27th November.
      • India International Trade Fair 2018 theme Enterprises from rural India.

 

 

  • Haryana government led by Chief Minister Manohar Lal Khattar has constituted an Economic Advisory Council (EAC) to promote industries in the state. The council will also address issues related to various issues and policies of economic development.
    • Related Keys
      • Haryana Governor -Satyadev Narayan Arya
      • Haryana Capital: Chandigarh

 

 

  • According to the data released by the Central electricity Authority (CEA), the electricity demand of the country fell by 13% in October 2019 as compared to October 2018. This is the lowest in 12 years.
    • Electricity demand of the country was 98 billion units in October 2019 as against 112 billion units in October 2018.
    • Related Keys
      • Power demands of the states
      • Madhya Pradesh declined by 26%, Karnataka declined by 25%, Maharashtra declined by 22%, Gujarat by 19%, Telangana by 16% and Andhra Pradesh by 16%.

 

 

  • With the help pf 43 million USD from the United Nations Development Programme (UNDP), India has begun the project that will positively impact over 10 million people living on the coastline.
    • The funds are to be obtained from the Green Climate Fund that was established under United Nations Convention on Climate Change (UNFCCC). The objective of the fund is to assist developing countries.
    • Related News
      • United Nations Development Programme Founded: 22 November 1965, United States.
      • United Nations Development Programme Headquarters: New York, New York, United States

 

 

INTERNATIONAL NEWS

  • The first edition of Dhaka Global Dialogue was held from 11-13 November 2019 in Bangladesh. The three day long programme was inaugurated by Prime Minister of Bangladesh Sheikh Hasina.
    • Related news
      • Bangladesh annually loses nearly 2% of its GDP due to climate change issues .
      • Principle of Bangladesh’s foreign policy remains, ‘friendship to all, malice to none’.

 

 

APPOINTMENTS

  • The incumbent Prime Minister of Mauritius Pravind Jugnauth was sworn in for five-year term after elections in which his coalition consolidated its grip on parliament. His swearing-in took place at the residence of President Barlen Vyapoory.

 

 

IMPORTANT DAYS

  • World Diabetics day is observed on November 14 every year .
    • Theme of 2019 – Family and diabetics .

 

 

  • Children’s Day is celebrated across India on 14 November every year as a tribute to India’s First Prime Minister, Jawaharlal Nehru

 

 

Words of the Day

  • Macabre – disturbing because concerned with or causing a fear of death
    • Similar Words – ghoulish , gruesome
    • Antonyms – agreeable, appealing, attractive.

 

  • Maim – injure or wound seriously so that part of the body is permanently damaged.
    • Similar Words – hurt, disable
    • Antonyms – cure, heal, rehabilitate.