Today TNPSC Current Affairs July 30 2019

We Shine Daily News

ஜுலை 30

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

  • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஒன்பதாக உயர்த்துவதற்கான சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

  • உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்றது இமயமலை மாநாடு. இமயமலை மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இதன் நோக்கம்.
    • இந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

 

 

விளையாட்டு செய்திகள்

  • 2020 மற்றும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் நிலையை ஒருங்கிணைத்து மற்றும் உத்திகளை வகுத்துச் செயல்படுத்துவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • இது விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜுவின் தலைமையில் செயல்படும்.
    • ஒலிம்பிக் வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரரான கஹன் நரங் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

  • 23வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ பிரிவில் மேரி கோம், 60 கிலோ பிரிவில் சிம்ரான்ஜித் கவுர் தலா ஒரு தங்கம் பதக்கங்கள் கைப்பற்றினர்.
  • மேரி ஆஸ்திரேலிய ஏப்ரல் ஃபிராங்க்ஸை 5-0 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் வீழ்த்தினார். இறுதி போட்டியில் இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஹசனா ஹஸ்வதுனை 5-0 என்ற கோல் கணக்கில் சிம்ரான்ஜித் கவுர் தோற்கடித்தார்.

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • உலக சுகாதார அமைப்பானது எச்ஐவி மருந்தான டொலுட்டிகிராவிர் (dolutegravir – DTG)என்பதனை அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைக்கு பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
    • இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வயதுடைய பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது.
    • DTG என்பது டிவிகே என்ற வியாபாரக் குறியீட்டுப் பெயரின் கீழ் விற்கப்படுகின்றது.
    • இந்த மருந்தானது மருந்து எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு அதிக மரபணுத் தொகுதியைக் கொண்டுள்ளது.
    • இந்த மருந்தானது நோய் எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு அதிக மரபணுத் தொகுதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விருதுகள்

  • சர்வதேச மணல் கலைஞரான பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் அமெரிக்காவில் நடந்த பாஸ்டன் சர்வதேச மணல் கலை சாம்பியன்ஷிப்பில் மக்கள் தேர்வு பரிசை வென்றார்.
    • பாஸ்டனில் நடைபெற்ற 2019 ரெவரே பீச் சர்வதேச மணல் சிற்ப விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறந்த மணல் கலைஞர்களில் பட்நாயக் ஒருவராக இருந்தார்.

 

 

முக்கிய தினம்

  • புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சர்வதேச புலி தினம் அல்லது உலகளாவிய புலி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • இது 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புனித பீட்டர்ஸ்பர்க் புலி உச்சி மாநாட்டில் நிபுணர்கள் குழுவால் 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சர்வதேச புலி தினத்திற்கான முழக்கம் “அவர்களின் வாழ்க்கை நம் கையில் உள்ளது”
  • Slogan : “ Their survival is in our hands”

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Himalayan Conclave held in Mussoorie in Uttarakhand. The objective is to discuss various issues related to the development of the Himalayan States.
    • Union Finance Minister Nirmala Sitharaman is attending the conclave as the chief guest.

 

 

  • The Law Council have accepted legal proposal in the raise of Tamil Nadu State Minorities Commission from six to nine.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Dolutegravir is a second-generation HIV integrase strand transfer inhibitor (INSTI) and the most recent antiretroviral approved for treatment of HIV-1 infection.
    • Dolutegravir in combination with two nucleoside reverse transcriptase inhibitors.

 

 

SPORTS

  • A high level 10-member committee has been constituted on Friday under the chairmanship of Sports Minister Kiren Rijiju to coordinate and strategise the preparation for the 2020 and 2024 Olympics.
    • The objective of the committee is to ensure that the performance of the Indian athletes are optimised in the Olympics and other multidisciplinary events. 

 

 

  • Six-time world champion Mary Kom in 51kg category and Simranjit Kaur in 60kg category grabbed a gold each in 23rd President’s Cup Boxing Tournament in Labuan Bajo, Indonesia. The Olympic bronze medallist Mary decimated Australian April Franks 5-0 in finals.
    • Simranjit Kaur defeated Indonesia’s Asian Games bronze medallist Hasanah Huswatun 5-0 in the final bout.

 

 

AWARDS

  • International sand artist, Padmashri Sudarsan Pattnaik won People’s Choice Prize at Boston International Sand Art Championship in the US.
    • Pattnaik was among the 15 top sand artists selected from across the world to participate in the 2019 Revere Beach International Sand Sculpting Festival in Boston.

 

 

 

IMPORTANT DAYS

  • International Tiger Day is celebrated on 29 July annually to promote the protection of natural habitat of tigers and to increase awareness about the conservation of tiger.
    • The slogan for the international Tiger day is “Their survival is in our hands”