Today TNPSC Current Affairs May 18 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 18

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • காங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதால், சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட எபோலோ தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் காங்கோவுக்கு அனுப்பியுள்ளது.

 

  • மலேசியாவில் ஜி.எஸ்.டிக்கு மாற்றாக பழைய முறையான எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியையே மீண்டும் அமலுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

  • ஹெச்-1 விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை துணையும் பணியில் சேரும் வகையில் பயன்படுத்தப்படும் ஹெச்-4 விசா நடைமுறையை ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஹெச்-4 விசா நடைமுறை தொடர வேண்டும் என்று அந்நாட்டு எம்.பிக்கள் 130 பேர் வலியுறுத்துகின்றனர்.

 

  • நேபாள நாட்டைச் சேர்ந்த கமி ரீடா ஷெர்பா என்பவர்( வயது 48), உலகில் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறியவர்(22 முறை) என்ற சாதனைப் படைத்துள்ளார்.

 

  • ஹவாய் தீவில் உள்ள கிலாய் எரிமலை வெடித்தது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலுக்கு நடுக்கடலில் எரிபொருள் கொண்டு செல்வதற்கான சிறப்பு படகு சேவை நேற்று தொடங்கப்பட்டது.

 

  • ஒருவரின் உயிருக்கு ஆபத்து விலைவிக்காத வகையில், செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் புதிதாக இளநிலைப்படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

  • வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் 15வது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு 6 மாநில அரசுகள்(ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி) எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணை தலைவராக இந்தியாவின் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • லியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள், மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.

 

  • கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடப்படும் வழக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) பரிசீலனை செய்து வருகிறது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: May 2018 – Science and Technology News Image

 

  • மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.

 

  • செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது தானோட்டி வாகனம் ஆகும், இதற்கு ‘மார்ஸ் காப்டர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

  • கூகுள் நிறுவனம், அப்டேட் மூலம் ஆப்லைனிலும் ஜிமெயிலை பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

விருதுகள்

 

  • பிலிஃப்பைன்ஸ் நாட்டில் உலகில் வலிமையான மனிதர்களை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தொலைக்காட்சி துணை நடிகரான ஹஃப்வோர் ஜுலஸ் பிஜேர்ன்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: May 2018 – New Appointment News Image

 

  • இன்று (மே 18) உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரர் ஓய்வு பெறுகிறார்.

 

  • அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனத்தின் இயக்குநராக முதல் முறையாக ஜினா ஹேஸ்பெல் என்ற பெண் பதவியேற்றுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 18 – சர்வதேச அருட்காட்சியக தினம்.

 

  • மே 18 – 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்தது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • நாட்டின் வளர்ச்சிக்கான, புதிய இந்தியா – 2022 திட்டம், விரைவில் வெளியிடப்படும் என நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

 

  • அமெரிக்க இராணுவம், வேவு பார்க்க உதவும் ஒளிப்பட கருவிக்கொண்ட ஓட்டுனரின்றி பறக்கும், ட்ரோன் வாகனத்தை வடிவமைத்து இராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதை தயாரிப்பதற்காக ‘புராக்ஜெட் மேவன்’ என்று கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

  • வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய புதிதாக துவக்கப்டும் ‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

     

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

  • மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் அரசமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு (இரு நாடுகளுக்கிடையே அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி, மற்றும் கலாச்சர ஒத்துழைப்பு குறித்த விவாதம்) நடந்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Suresh Prabhu Launched Intellectual Property Mascot ‘IP Nani’
  1. Union Minister of Commerce and Industry Suresh Prabhu has launched the Intellectual Property (IP) mascot ‘IP Nani’. The mascot was launched during a conference on the National Intellectual Property Rights Policy in New Delhi.
  2. The first and foremost objective of the Policy is “IPR Awareness: Outreach and Promotion”, aimed at raising awareness on IPR for school children to nurture creativity and the ability to innovate from a very young age.

 

  • Cyclone SAGAR: IMD Issues Advisory to 5 States, 1 U
  1. Indian Meteorological Department (IMD) has issued an advisory to Tamil Nadu, Kerala, Karnataka, Goa, Maharashtra and the Lakshadweep archipelago over cyclonic storm ‘SAGAR’.

 

  • Union Environment Ministry Launches Green Skill Development Programme        
  1. The Union Environment Ministry launched the Green Skill Development Programme (GSDP) with an aim to train over 5.5 lakh workers in environment and forest sectors in the country.

 

  • Union Environment Minister Harsh Vardhan also launched a related mobile app ‘GSDP-ENVIS’ to boost employability and entrepreneurship of the youth in the country. The app can be used for information and for applying to the courses.

 

International News

 

  • SCO Cultural Ministers’ Meeting Held in Sanya, China
  1. The Minister of State for Culture, Dr Mahesh Sharma led the Indian delegation to the 15th Meeting of the Cultural Ministers of the Shanghai Cooperation Organization(SCO) Member States held in Sanya, China. India participated for the first time at the Meeting of  Cultural Ministers of the SCO.
  2. India became a full member of the Shanghai Cooperation Organization (SCO) in June 2017 during the SCO Heads of State Summit in Astana, Kazakhstan.

 

  • Guatemala Becomes Second Country to Open Jerusalem Embass
  1. Guatemala has opened an embassy in Jerusalem two days after the U.S. moved its embassy to the contested capital city.

 

Economy News

 

  • BSE Becomes 1st Indian Stock Exchange To Get US SEC’s DOSM Recognition
  1. BSE Ltd became first Indian exchange to be designated as Designated Offshore Securities Market (DOSM) by United States Securities and Exchange Commission (US-SEC).

 

Appointments

 

  • The U.S India Business Council named Ambika Sharma as its head for India. Ms. Sharma was Director General for International at the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

 

Awards

 

  • Sridevi Honoured At Cannes Film Festival
  1. Veteran Bollywood actor Sridevi was honoured with the TITAN Reginald F Lewis Film Icon Award at the ongoing Cannes Film Festival.

 

Sports

 

  • 1st Para-National Games to be Held Under Khelo India Scheme
  1. The inaugural National Para Games, on the lines of National Games for able-bodied athletes, will be held under the Khelo India Scheme in June-July 2018 in Bengaluru.

­