Today TNPSC Current Affairs May 04 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 04

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • ஆதார் திட்டத்தை பிற நாடுகளும் கொண்டு செல்வதற்காக உலக வங்கிக்கு பில் கேட்சின் ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டே~ன்’ நிதியுதவி அளித்துள்ளது.

 

  • தென் சீன கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நில இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் சீனா குவித்துள்ளது.

 

  • வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் – ஐ சந்தித்துப் பேசினார். வட மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையிலான போரை நிரந்தரமாக முடித்து வைப்பதற்கு சீனா தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் என்றும் அறிவித்தார்.

 

  • மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

  • 104 வயதாகும் ஆஸ்திரேலியாவின் மிக மூத்த விஞ்ஞானியான டேவிட் குடால் தனது வாழ்வை முடித்துக் கொள்வதற்காக கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் ஸ்விடர்லாந்துக்கு பயணம் சென்றார். அவருக்கு உயிர்க் கொல்லி நோய் எதுவும் இல்லை என்றாலும் அதிக வயோதிகம் காரணமாக தனது வாழ்க்கை மிக மோசமான நிலையை அடைந்து விட்டதால் மரணத்தைத் தழுவ விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

  • சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிறுவனமான டுவிட்டர் தனது 330 மில்லியன் பயனாளர்களையும் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

 

  • வட கொரியா – தென் கொரியா நாடுகளிடையே பிரச்சினையை தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பு கடும் முயற்சி மேற்கொண்டதாகவும் அதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் முன்மொழிந்துள்ளனர்.

 

  • ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக் கொள்ளவும், ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக் கொள்ளவும் வழிவகுத்து உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12ம் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

  • உலகில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் மிகப்பெரியது லண்டனில் உள்ள ‘கியூ’ பூங்கா. 1840 ல் உருவாக்கப்பட்டது. 175 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பூங்கா. லண்டனில் உள்ள சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக உள்ளது. இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை உலகிலேயே பெரியது. 4880 சதுரஅடி கொண்டது. 1863ல் முதன் முதலில் திறக்கப்பட்டது. இந்த மாளிகைக்குள் உலகின் அரிய வகை மற்றும் அழிந்து வரும் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த மாளிகை புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 2013ல் மூடப்பட்டது. நாளை (மே 5) பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • உலகம் முழுவதும் ரேபிஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 59 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அதாவது 9 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழக்கிறார். அதிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரேபிஸ் பாதிப்பு (15 லட்சம்) அதிகளவில் உள்ளது. மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய்கள் மூலமே ரேபிஸ் பரவுகிறது. எனவே இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடுக்கிவிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் ‘ஸ்பேஸ் அப்ளிகே~ன் சென்டர்’ வளாகத்தில் உள்ள ஆன்டெனா ஆய்வுக்கூடத்தில் நேற்று கடும் தீவிபத்து ஏற்பட்டது.

 

  • நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் 27வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கி உள்ளது.

 

  • வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர், நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.

 

  • பேட்மின்டன் தரவரிசையில் இரண்டாவது மிகப்பெரிய தரவரிசையைக் கொண்ட இந்திய வீரர் என்ற பெருமையை ஹெச்.எஸ்.பிரணாய் பெற்றுள்ளார்.

 

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமுது ஹபிஸ் பந்து வீச விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

 

  • விளையாட்டு துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் (இந்திய ஹாக்கி அணியின் கேப்டன்), தரம்வீர் சிங் மற்றும் சவிதா புனியா (மகளிர் ஹாக்கி அணி) ஆகியோரின் பெயர்களை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

 

  • ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் அம்பதி ராயுடு (391 ரன்களுடன்) மீண்டும் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார்.

 

  • சர்வதேச பேட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் பிரன்னாய், சாய்னா நெஹ்வால் டாப்-10ல் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • வருமான வரித்துறை 2017 – 2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் புதிய படிவத்தினை அறிமுகம் செய்துள்ளது.

 

  • ஏர் ஏசியா இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான அமர் அப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.967 கோடியாக உள்ளது.

 

  • எம்ஆர்எஃப் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.3,944.75 கோடி வருவாய் ஈட்டியது.

 

 

English Current Affairs

 

National News

 

  • The Department of Telecommunications (DoT) has released for public consultations the draft of the National Telecom Policy (NTP) 2018, named the National Digital Communications Policy, 2018.

 

  • The Minister of State for Development of North Eastern Region (I/C), Dr. Jitendra Singh announced that a North Eastern Cultural and Information Centre will come up in Delhi soon.

 

  • On 3rd to 5th May 2018, ‘Vibrant North East 2018′ is held in Guwahati, Assam.  Vibrant North East 2018 is organized by Centre for Agriculture and Rural Development (CARD)

 

  • On 3rd May 2018, the Maharashtra government decided to recommend the declaration of an ordinance to rename the Jalgaon-based North Maharashtra University after poetess Bahinabai Chaudhari.

 

  • On 3rd May 2018, EPFO announced that now Pensioners can view their pension passbook on mobile phones using Umang app.

 

  • Union Environment Ministry has banned party poppers, stating that the devices pose a serious threat to human health and environment.

 

  • Maharashtra has become the first state to issue a crucial land ownership document online and accept a digital signature on it as valid.

 

  • Indian Meteorological Department (IMD) has issued warning of another dust storm and thunderstorm in parts of Uttar Pradesh and Rajasthan.

 

International News

 

  • According to recently released report of Stockholm International Peace Research Institute (SIPRI), India has emerged as fifth largest military spender in 2017.

 

  • The Central Board of Direct Taxes (CBDT) has entered into 200th Unilateral Advance Pricing Agreement (UAPA) after it singed one in April 2018.

 

  • India was ranked 11th position in the FDI Confidence Index 2018 released by global consultancy firm A T Kearney.

 

Sports

 

  • Mohamed Salah of Liverpool football team has been named the Football Writers’ Association Footballer of the Year for 2017/18.

 

  • On 3rd May 2018, Cricket Australia appointed Justin Langer as the new coach of the Australian national cricket team.

 

  • Indian pugilist Neeraj Goyat has been awarded the WBC Asia Boxer of the Year Award.

 

  • India fell to second position in ICC ODI Team Rankings with England reaching the No. 1 position, as per the ICC ODI rankings

 

Important Days

 

  • On 3rd May 2018, World Press Freedom Day was celebrated all over the world. The theme for the Day 2018 is: Keeping Power in Check: Media, Justice and The Rule of Law.

 

Awards

 

  • Hockey India has announced the recommended players for the esteemed Arjuna Award, Dronacharya Award and Major Dhyan Chand Award for Lifetime Achievement 2018.

 

  • The President of India, Shri Ram Nath Kovind, presented the 65th National Film Awards on May 3, 2018 in New Delhi.

 

­