Today TNPSC Current Affairs March 20 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 20

தமிழ்

உலக செய்திகள்


TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • சீனாவின் ‘ஏவுகணை மனிதர்’ என்று கருதப்படும் ‘வெய் ஃபெங்கே’, அந்நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • லண்டனை சேர்ந்த ‘ஆண்ட்ரியா ஜபாரிகாவ்’ என்ற ஆசிரியருக்கு, உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருது மற்றும் அதற்கான பரிசுத் தொகை ரூ.65 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

 • வாடிகனை அடுத்து உலகின் மிக சிறிய நாடு மொனாகோ. அந்நாட்டில், 2016ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி 38 ஆயிரத்து 400 பேர் மட்டும் வசிக்கின்றனர்.

 

 • இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவு நாடான மடகாஸ்கரைஎலியாகீம்’ என்ற புயல் நேற்று தாக்கியது.

 

 • பாகிஸ்தான் விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ‘முஹாஜித் அன்வர் கான்’ நேற்று பொறுபேற்றார்.

 

 • பிரிட்டனைச் சேர்ந்த ‘ஸ்டீபன் ஜெவ்சன்’ என்ற பெண் மோட்டார் சைக்கிள் மூலம் 7 கண்டங்களையும்(சுமார் 8000 மைல்கள்) கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

 

 • சவுதி அரேபியாவில் பெண்கள் பர்தா மற்றும் முகத்திரை அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று அந்நாட்டு இளவரசர் ‘முகமது பின் சல்மான்’ தெரிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • உலக வர்த்தக அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நேற்று(மார்ச் 19) டெல்லியில் தொடங்கியது. இதில் 7 நாடுகளை சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் மற்றும் 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 • துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு சர்தார் வல்லபாய் பட்டேல் மாநாட்டு மண்டபத்தை நேற்று(மார்ச் 19) டெல்லியில் திறந்து வைத்தார்.

 

 • டெல்லி மாநில அரசு பாடல் மற்றும் நடனக்கலையில் விருப்பமுள்ளவர்களின் திறனை மேம்படுத்த, ‘டெல்லி டேட் வித் டெமாக்ரஸி’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 

 • கர்நாடகா அரசு, லிங்காயத்து சமூகத்தினரை, தனி மதப் பிரிவு(இந்து மதம் அல்ல) என அங்கீகாரம் அளித்துள்ளது.

 

 • இந்த ஆண்டு(2018) இறுதிக்குள் ராணுவ போலீஸ் பிரிவில் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். மொத்தம் 800 பேர் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி ‘பிபின் ராவத்’ தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • நில ஆவணங்கள், ரேஷன் மருத்துவ ஆவணங்கள் உட்பட, மத்திய –மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளுக்கு, ‘பிளாக்செயின்’ என்ற புதிய பாதுகாப்பு வசதிகள் அதிகம் உடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ‘ஃப்ரி ஸ்டைல்’ பிரிவில் இந்தியாவின் ‘விர்தாவல் காதே’ தங்கம் வென்றார்.

 

 • டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் ‘சஹால்’ 2வது இடத்தில் உள்ளார். ‘வாஷிங்டன் சுந்தர்’ 31வது இடத்தில் உள்ளார்.

 

 • பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அர்ஜென்டினா வீரர் ‘ஜுவன் மார்டின் டெல்போட்ரோ’ சாம்பியன் பட்டம் பெற்றார்.

 

 • பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை ‘நவோமி ஒசாகா’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான தைவானின் ‘தாய் சூ யிங்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில், திருவள்ளுர் மற்றும் சேலம் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நாசாவின்(அமெரிக்கா) ‘ரிக்கி அப்னால்டட்’, ‘ட்ருவ் பியுஸ்டல்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஓலக் அர்டமியுவ்’ ஆகிய மூவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாளை(மார்ச் 21) பயணம் செய்ய உள்ளனர்.

 

 • சூரியனின் உள்சக்தியை நீண்ட காலத்துக்கு அளவீடு செய்யும் வகையில் ‘டோட்டல் மற்றும் ஸ்பெக்டரல் சோலார் இராடியன்ஸ் சென்சார்’(டிஎஸ்ஐஎஸ்ர&1) என்ற புதிய கருவியை நாசா வடிவமைத்துள்ளது.

 

விருதுகள்

 

 • இசையமைப்பாளர் ‘இளையராஜா’, ஹிந்துத்தவ சிந்தனையாளர் ‘பரமெஸ்வரன்’ உள்ளிடோர்க்கு பத்மஸ்ரீ விருதுகளை குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ இன்று வழங்குகிறார்.

 

 • இந்தியாவில் முதல் முறையாக இன்ஸ்டகிராம் சமூகவலைத்தள விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டகிராம் கணக்கு என்கிற விருது ‘விராட்கோலிக்கும்’, அதிகம் பேர் பின்தொடரும் இன்ஸ்டகிராம் விருது நடிகை ‘தீபிகா படுகோனுக்கும்’ வழங்கப்பட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • மார்ச் 20 – உலக சிட்டுக்குருவி தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • உலக அளவில் பெட்ரோல் விலை குறைவான நாடுகள் பட்டியலில் வெனிசுலா முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 லிட்டர் பெட்ரோல் விலை, இந்திய மதிப்பில் ரூ.1.74க்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியன் இரயில்வே நிர்வாகம், இரயில்களில் வழங்கப்படும் உணவிற்குப் பில் அளித்தால் மட்டும் பணம் அளிக்கலாம், பில் இல்லை என்றால் இலவசமாக சாப்பிடலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 • அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்பு பிரிவை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

 

 • பினாமி சிமெண்ட் நிறுவனத்தை, ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் வாங்கவுள்ளது.

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ‘ராபர்ட்டோ அஸ_ ஸூவேடோ’, பிரதமர் ‘நரேந்திர மோடி’யை சந்தித்தார்.

 

English Current Affairs

 

 National News

 • The Punjab Government is all set to impose a Permanent ban on hookah bars across the State instead of issuing temporary orders against them every two months. It will be the second state after Gujarat to take the significant decision.

 

 • A 3-day International Yoga fest is being organized as a curtain raiser for International Day of Yoga (IDY) 2018. It will be held at Talkatora Indoor Stadium, New Delhi.

 

 • Indian Navy and the French Navy has conducted bilateral maritime exercise named VARUNA. This year VARUNA’s would be conducted in three sea areas namely the Arabian Sea, the Bay of Bengal and South Western Indian Ocean.

 

 • The Ministry of Tribal Affairs has developed an android based mobile application called ‘Tribal Diaries’ for internal monitoring as also connecting with officers concerned with implementation of schemes / programmes for tribal development.

 

 • The first National Workshop on POSHAN Abhiyan involving all the states and union territories is being held on 20th March at Pravari Bharatiya Kendra, New Delhi.

International

 • Singapore has been dubbed the world’s most expensive city to live in for the fifty year running.

 

 • The last surviving northern white male rhinoceros of the world named Sudan has passed away in

 

 • Naval ships of the UAE and India will hold a first – ever joint exercise – ‘Gulf Star 1’. Two Indian Navy ships INS Gomati and INS Kolkata arrived in Dubai for the ‘Harbour phase’ of the exercise.

Awards

 • A British school teacher has won a $1million Global Teacher Prize instituted by an Indian origin entrepreneurs foundation in UAE to honour an exceptional teacher who has made a significant contribution to the profession

Appointments

 • Bihar Governor Satya Pal Malik has been given additional charge as the Governor of

Important Days

 • International Day of Happiness is celebrated World Wide every March 20. The theme of this year is “Share Happiness”.

 

 • World Sparrow day is observed on March 20 to raise awareness of the house sparrow and then other common birds to urban environments.

Sports

 • India beat Bangladesh by four wickets to win the Nidahas Cricket trophy final in

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube