Today TNPSC Current Affairs March 09 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 09

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • இங்கிலாந்து நாட்டில் தொழில் துறை மாணவர்கள் திட்டத்தின் திறன் தூதராக ‘சஞ்சீவ் குப்தாவை’(இந்திய வம்சாவளி) இளவரசர் ‘சார்லஸ்’ நியமித்துள்ளார்.

 

  • எகிப்து நாட்டுப் பாடகர் ‘டதமர் ஹாஸ்னியின்’ இசை நிகழ்வின் போது நடனமாட மற்றும் நவீன நாகரீக உடை அணிந்து வர சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

 

  • மியான்மர் அரசின் தலைவர் ‘ஆங் சான் சூகிக்கு’ வழங்கப்பட்டிருந்த கௌரவம் மிக்க ‘மனித உரிமை விருதினை’ அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

  • கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் – மனிதாபிமான அடிப்படையில் இந்திய கைதிகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

 

  • உலகின் பல முன்னணி வங்கிகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 525 பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளது என பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.

 

  • பிரத்தானியாவில் கடவுச்சீட்டுக் கட்டணங்கள் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. சிறார்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் 46 பவுண்ட்ஸிலிருந்து 58.50 பவுண்ட்ஸாகவும், வயது நிரம்பியவர்களுக்கு 72.50 பவுண்ட்ஸிலிருந்து 85 பவுண்ட்ஸாகவும் அதிகரிக்க உள்ளது.

 

  • தைவானில், கிராம மக்கள் சற்று தொலைவில் உள்ள உறவினர்களுக்கு தாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் வகையில் வானில் விளக்குகள் பறக்கவிடும் விநோதமான ‘விளக்கு திருவிழா’ நடைபெற்றது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • கர்நாடக மாநிலத்திற்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.

 

  • மீள முடியாத நோய் தாக்கத்தில் உள்ளவர்களைக் கருணைக்கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

  • விமான போக்குவரத்து துறை, உடான் திட்டத்தை, சர்வதேச விமான சேவைகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • நாடு முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர் நலனுக்கான நிதி, ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படவுள்ளது.

 

  • சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ உலக சமய மாநாட்டுச் சொற்பொழிவை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் முதன் முறையாக மும்பை – டெல்லி ‘ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயிலில்’, சானிடரி நாப்கின்ஸ் வழங்கும் இயந்திரத்தை மேற்கு இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • ராஜஸ்தானில் கல்லூரி மாணவியர், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிந்து தான், கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் ‘முஷ்கன் கிரார்’ மற்றும் ‘புரோமிலா’ ஆகியோர் கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

 

  • ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டியில் ‘மது வித்வான்’ மற்றும் ‘கவுரவ் டிராம்பக் லாம்பே’ ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

 

  • தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக வீரர் ‘தருண் அய்யாசாமி’ 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

  • உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை ‘அன்ஜும் மவுத்கில்’ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

  • சர்வதேச டி20 போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ‘சுரேஷ் ரெய்னா’ பெற்றுள்ளார்.

 

  • தியோதர்’ கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘இந்திய – பி அணி’ சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • ‘ஐ லீக்’ கால்பந்து போட்டியில் ‘மினர்வா பஞ்சாப் அணி’ சாம்பியன் பட்டம் வென்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News

 

  • சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம், தனது கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து பூமியின் மீது மோத உள்ளது என்று சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

 

விருதுகள்

 

  • டெல்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ‘கீதா மிட்டலுக்கு’ மத்திய அரசின் பெண் சாதனையாளர் விருது(நாரி சக்தி புரஸ்கார்) வழங்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை நேரடி வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.7.44லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

 

  • தமிழகத்தில், கனரக பொறியியல் துறை மேம்பாட்டுக்கு 60.7 கோடி டாலர் அளவிலான திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

  • சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு பாலிசியின் பிரீமியத்தை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ‘இரிடா’ குறைத்து உள்ளது.

 

  • கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘பந்தன் வங்கியின்’ பொது பங்கு வெளியீடு மார்ச் 15ம் தேதி தொடங்குகிறது.

 

  • புஷான் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்க உள்ளது.

 

English Current Affairs

 

 National News

  • On the Occasion of International women’s day the Prime Minister Narendra Modi launched the National Nutrition Mission, and expansion of the Coverage of Beti Bachao Beti Padhao Programme at Jhunjhunu in Rajasthan.

 

  • Union Minister for chemicals & fertilizers and parliamentary affairs, Shri Ananth Kumar announced the launch of ‘Suvidha’ the 100% Oxo-biodegradable Sanitary Napkin, under the Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)

 

  • On the Occasion of International women’s day the ministry of Micro, Small and Medium Enterprise (MSME) launched a portal for women entrepreneurs of India ‘www.udyamsakhi.org

International News

  • An independent global property Consultancy in a city wealth index report ranked India’s financial capital Mumbai at 47th spot out of 315 cities across the global. In terms of the top 20 costliest global cities Mumbai has been ranked at 16th

 

  • India signed an agreement with UNDP and UNOPS to build 50,000 homes for the quake victims in Nepal for its massive reconstruction programme.

 

  • India ranks 52 in Master Card women entrepreneurs’ MIWE focuses on female entrepreneur’s ability to capitalize on opportunities granted through various supporting conditions within their local environments.

Business

  • The Reserve Bank has slapped a penalty of 40 lakh on SBI for not complying with its directions on detection and impounding of Counterfeit notes.

 

  • Legal global IT Services organization, Tata Consultancy Services (TCS) was named as the fastest growing IT services brand in the world in an assessment done by leading brand Valuation firm, Brand Finance.

Appointment

  • Neiphiu Rio has took Oath today as the Chief Minister of Nagaland. This will be Rio’s fourth time as the chief minister of Nagaland. This comes after the BJP and the Nationalist Democratic People’s Party (NDPP) won 29 seats in the election.

Awards

  • Balkrishna Doshi has become the first Indian architect to win the Pritzker prize in its four-decade history. It is regarded as the profession’s equivalent to the Nobel Prize, the award went to doshi in recognition of a career spanning almost 70 years.

 

  • Britain’s Queen Elizabeth II recognized ‘Srishti Bakshi’ from India as the 26th Common wealth point of Light in honour of her exceptional service to empowering women in India.

Sports

  • Indian junior archers bagged three gold and three bronze medals to finish Asia cup Archery.

 

­