Today TNPSC Current Affairs July 18 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 18

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒலியை விட இருமடங்கு வேகத்தில் பயணித்து 290 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை ஒடிசா மாநிலம், பலாசோரில் ஜுலை 16 அன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • கோவா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் – 15ம் தேதி முதல் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதமாக ரூபாய் 2500 விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பயங்கரவாதத்தை எதிர் கொள்வதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) பயங்கவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷ்யாவில் ஆகஸ்ட் – மாதம் நடைபெற உள்ளது.
    • இதில் SCO அமைப்பை சேர்ந்த நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சுதந்தரம் அடைந்தப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்படை இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
  • குறிப்பு
    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2018-க்கான மாநாடு சீனாவில் நடைபெற்றது.
    • 2017ம் ஆண்டு SCO மாநாடு கஜகஸ்தானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • காற்று மழை மற்றும் சோலார் தகடுகளின் மின் ஆற்றலை உருவாக்கும் ஹார்வெஸ்ட் என்னும் கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த மானசா மெண்டு என்பவர் உருவாக்கியுள்ளார்.
    • இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு பின்லாந்த் நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி (Helsinki) நகரில் ஜுலை 17 அன்று நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பிரான்சில் நடைபெற்ற சர்வதேச சோட்டிவைல் (International Sotteville) தடகள போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ‘நீரஜ் சோப்ரா’(Neeraj Chopra) தங்கம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

  • உலகளவில் ஆடவருக்கான ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
    • முதலிடத்தில் – ஆஸ்திரேலியா உள்ளது.
    • 2வது மற்றும் 3வது இடத்தில் அர்ஜென்டினா மற்றும் பெல்ஜியம் உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • லோக்கல் எலெக்ட்ரோட் ஆட்டம் ப்ரோப் (Local Electrode Atom probe-LEAP) என அழைக்கப்படும், உலகின் முதல் ரிமோட் மூலம் இயங்கக்கூடிய பகுப்பாய்வு நுண்நோக்கி(லீப் மைக்ரோஸ் கோப்) சாதனத்தை இந்திய தொழில்நுட்ப கழகம் – சென்னை (IIT-Madras) சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • இந்த புதிய வகை மைக்ரோஸ்கோப் கொண்டு அணுக்களை துல்லியமாக பார்க்க முடியும்.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • 2018ம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது (Sangita Kalanidhi award) கர்நாடக இசைப்பாடகி ‘அருணா சாய்ராம்’ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Awards News Image

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • On 16th July 2018, Union Skill Development and Entrepreneurship Minister Dharmendra Pradhan laid the foundation stone for National Skill Training Institute (NSTI) at Barang, in Bhubaneswar, to be established at a cost of Rs 160 crore
    • NSTI will function under the Directorate General of Training (DGT). It will have training activities like Trainers Training (Long term/Short term), Refresher Training and Re-skilling/Up skilling courses.

 

  • The ‘BIMARU’ Indian states – Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh – have the highest numbers of partially immunized and non-immunized children, according to UN bodies WHO and Unicef.
    • According to data shared by the UN bodies on Monday, the national average for full immunization is 62 per cent, for diphtheria-tetanus-pertussis vaccine (DTP3) coverage is 78.4 per cent and for measles first dose 81.1 per cent.

 

  • IIT Madras has launched “world’s first” remotely operatable microscope that would enable a precise atom-by-atom view of a material in Chennai, Tamil Nadu.
    • The Local Electrode Atom Probe (LEAP) was developed in a collaborative exercise involving eight top research institutions headed by IIT Madras. It was developed at a cost of Rs 40 crore.

 

  • The government has decided to set up a committee under the Chairmanship of Mr Anil Swarup, former Secretary, School Education, with suitable representations from NCC, M/o Youth Affairs and Ministry of HRD to suggest measures to strengthen National Cadet Corps (NCC) and National Service Scheme (NSS).

 

  • A high level National Conference of State/UT Ministers-in-charge of Women & Child development was held in New Delhi.
    • The meeting was chaired by the Union Minister of Women and Child development, Smt. Maneka Sanjay Gandhi.
    • The National Level Conference was held with the objective to discuss issues pertaining to safety of women and children as well as Poshan Abhiyan with the purpose to direct and seek the support of State Governments to further their effective implementation.

 

INTERNATIONAL NEWS

 

  • The UN has entered into a partnership with Google to monitor the impacts of human activity on global ecosystems by using sophisticated online tools.

 

  • The Union Minister of Commerce & Industry and Civil Aviation, Suresh Prabhu co-chaired 8th session of India-Oman Joint Commission Meeting (JCM) along with Minister of Industry, Investment, Trade and Digital Economy of Oman, Dr Ali bin Masoud Al Sunaidy.

 

AWARDS

 

  • A team comprising experts from the Indian Institute of Technology-Kharagpur and the University of Oxford has been selected for an award for exceptional research-led innovation to mitigate arsenic poisoning in the Ganga-Brahmaputra delta in the north and northeast India. 

 

SPORTS

 

  • India’s star shuttler PV Sindhu (seeded second) suffered a defeat to fourth seed Nozomi Okuhara of Japan in straight games inside 50 minutes to settle for runners-up spot in the Thailand Open at the Nimibutr Stadium in Bangkok.
    • In men’s singles, Kanta Tsuneyama (Japan) was the winner and Tommy Sugiarto (Indonesia) was runner up.

 

IMPORTANT DAYS

 

  • Nelson Mandela International Day (or Mandela Day) is an annual international day in honour of Nelson Mandela, celebrated each year on 18 July, Mandela’s birthday.
    • The day was officially declared by the United Nations in November 2009.