Today TNPSC Current Affairs August 19 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஆகஸ்ட் 19

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3-வது புதிய ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய்வதற்கு இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் “சோமநாத்” தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
  • இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: August 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • 72வது இந்திய சுதந்திர தினத்தை யொட்டி, “சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திர போராளிகள்” (freedom struggle and freedom fighters) என்ற தலைப்பில் சிறப்புத் திரைப்பட விழா (special film festival) மும்பையில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • முழுநேர விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமானது வட இந்தியாவில் முதன் முறையாக ஜம்மு நகரில் அமைக்கப்படவுள்ளது. இது ஆராய்ச்சி கல்வி மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான மற்றொரு நகரம் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இது அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ((NIT – National Institute of Technology)-ன் கீழ் செயல்படும்.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central pollution control Board) தனது காற்றுத் தர குறியீட்டில் (Air quality Index) 62 நகரங்களில் ஹரியானா மாநிலத்தில் குருகிராம் நகரினை இந்தியாவின் அதிக மாசுபட்ட நகரமாக அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச ரோபோ கண்காட்சி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2018-ரஷ்ய உலககோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு கால்பந்து அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வெளியிட்டுள்ளது.
  • 2018 உலக சாம்பியன் பிரான்ஸ் அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • பெல்ஜியம் இரண்டாவது இடத்தையும், பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
  • இந்திய அணி 96-வது இடம் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

 • உலக மனித நேய தினம் – ஆகஸ்ட் 19 (World Humanitarian Day)
  • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக மனிதநேய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2003 ஆகஸ்டு 19ம் தேதி ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடு அவை சிறப்பு பிரதிநிதி செர்சியோ வெய்ரா டீமெல்லா (Sergio Vieira de mello) உட்பட 20 பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
  • இதன் நினைவாக ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 19ம் தேதியை “உலக மனிதநேய தினமாக அறிவித்துள்ளது.
  • 2018ம் ஆண்டு உலக மனித நேய தின கருப்பொருள். Not A Target

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • இந்திய ரிசர்வ வங்கியால் நடத்தப்பட்ட 2016-2017ம் ஆண்டுக்கான உள்நாட்டு பணம் அனுப்புதலுக்கான கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடத்தில் உள்ளது.
  • வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மிக அதிக நிதியை பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Economic News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • ஏரோ ஜெல் (Aerogel) – அறிவியலாளர்கள், பீர் தயாரிப்பின் போது வரும் கழிவுப் பொருட்களிலிருந்து அதிக வெப்ப ஏற்புத் திறனுடைய ஒளி ஊடுருவக் கூடிய, மீத்திறன் காப்பு கூழ்மமான (Super Insulating transparent gel) ஏரோஜெல்-லை (Aerogel) உருவாக்கியுள்ளனர்.
  • இது சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற புவிக்கு அப்பாலான வாழ்விடங்களில் பசுமை வீடு அமைக்க உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • UIDAI announced a phased rollout of live face recognition feature with telecom service providers from September 15.  This would be used as an additional mode of authentication by the telecom service providers. The ‘live face photo’ capture would be done to obtain eKYC for issuance of mobile SIMs.
  • The Authority had earlier planned to roll out face recognition feature from July 1, a target that was later pushed to August 1.

 

 • The Food Safety and Standards Authority of India (FSSAI) has decided to form a three-member committee to look into the draft food labelling and display regulations. The regulations have proposed making red colour-coded labels mandatory on packaged food products which are high in fat, sugar and salt contents.
  • The expert panel will be led by B Sesikeran, former director of National Institute of Nutrition (NIN), and comprise current NIN director Hemalatha and AIIMS’ Nikhil Tandon.

 

 • The Agriculture minister Radha Mohan Singh has proposed to the United Nations Food and Agriculture Organization to declare the year 2019 as international year of millets. This will promote cultivation by amending cropping patterns of areas which are especially susceptible to climate change.
  • India is celebrating 2018 as the national year of millets.

 

INTERNATIONAL NEWS

 

 • The 11th World Hindi Conference begins in Mauritius. Prime Minister of Mauritius Praveen Kumar Jagannath will inaugurate the conference in Port Louis.
  • “Hindi World and Indian Culture” is the theme of conference.
  • World Hindi Conference was started in 1975 to make Hindi language a medium of service and knowledge and enable it to move forward with the time.

 

 • Cricketer-turned-politician Imran Khan took oath as Pakistan’s new prime minister. Khan, the chairman of Pakistan Tehreek-e-Insaf (PTI), secured 176 votes while his only rival and the Pakistan Muslim League-Nawaz chief Sharif got 96 votes, National Assembly Speaker Asad Qaiser announced.

 

AWARDS

 

 • 63 year old Chinese oscar-winning director Ang Lee will be one of the recipients of the annual Directors Guild of America (DGA). The event will be held at the DGA Theatre in New York City on October 18, 2018.

 

 • The 2018 Albany Medical Center Prize was announced to be awarded to 3 US Scientists. They are : James Allison, Carl June and Steven Rosenberg.
  • They were awarded in Medicine and Biomedical Research for their research in immunology that have led to innovative treatments for cancer, HIV and other diseases.

 

 • Delhi government’s additional director of health S K Arora has been awarded the prestigious WHO World No Tobacco Day 2017 Award for his extraordinary contribution towards tobacco control.
  • The National Health Policy 2017 of the Government of India has set targets of relative reduction in tobacco prevalence by 15 per cent by 2020 and 30 per cent by 2025.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • ISRO’s Aditya-L1 mission, India’s first mission to study the solar corona, is planned to be launched in 2019-2020, by Polar Satellite Launch Vehicle (PSLV-XL) from Sriharikota, Andhra Pradesh.
  • Aditya – L1: Aditya – L1 will be inserted in a halo orbit around the Lagrangian point 1 (L1) that is 1.5 million km from the Earth. Solar corona is the outer layers of the Sun.
  • Lagrangian point is a point where the attraction by the Sun and the Earth becomes equal. This point does not experience gravitational force.

 

SPORTS

 

 • The 2018 Asian Games began on August 18 with a grand opening ceremony at Gelora Bung Karno Main Stadium in Jakarta, Indonesia. The 18th Asian Games is to be held in the Indonesian cities of Jakarta and Palembang and this will be the first time the Asian Games are co-hosted in two cities.
  • Motto of the games is “Energy of Asia”.
  • Javelin Thrower Neeraj Chopra was India’s flag-bearer at the glittering opening ceremony.

 

IMPORTANT DAYS

 

 • India’s 72nd Independence Day, Rajasthan government announced that it would observe September as ‘month of nutrition’.
  • The schemes introduced from the ‘month of nutrition’: The Rajasthan CM launched ‘Annapurna Milk Scheme’.  Students of Class 1 to 8 of government schools will be given milk daily instead of thrice a week.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube