Today TNPSC Current Affairs April 01 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

We Shine Daily News

ஏப்ரல் 01

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • 2020ல் டோக்கியோவில் நடக்கும் கோடைகால ஒலிம்பிக்கிலும், 2022ல் பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கிலும் பங்கேற்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார்.

 

  • மியான்மரின் அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் என்று புதிய அதிபரான “வின் மையிண்ட்” தெரிவித்துள்ளார்.

 

  • சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா ராணுவம் வெற்றி பெற்றுள்ளது.

 

  • தங்கள் நாட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு பிரிட்டனுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

 

  • மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்டுகளை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

 

  • ரஷ்யாவில் இருந்து 23 நாடு தூதர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • கேரள மாநிலத்தில் பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  • இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது சர்வதேச பாதுகாப்பு தொடர்பான 7வது மாஸ்கோ மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

 

  • தெலுங்கானாவில் உள்ள 17 ஆயிரம் ரேஷன் கடைகளில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

  • குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் உரம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு, 2017ம் ஆண்டின் இன்ஸ்டாகிராமின் “மோஸ்ட் என்கேஜ்ட் அக்கவுண்ட்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

  • பால் டேம்பரிங் விவகாரத்தில் தண்டனைக்கு உள்ளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மெனான “அலைஸ் ஹால்ஸ்” சன் ரைஸர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • மும்பையில் நடைபெற்ற வந்த முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

 

  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புதிய தலைவராக ராஜஸ்தான் முன்னாள் டிஜிபியான அஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

  • 2017-18 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதல் வரியை வசூல் செய்து (கூடுதலாக ரூ.56 கோடி) புதுச்சேரி வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது.

 

  • ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாது என யு.பி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • ரயில்வே டிக்கெட் கவுன்டரில் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு வசதிக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள் தற்போது செயற்கைகோளுடனான தகவல் தொடர்பை இழந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

  • இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான இணைய வேகம் குறித்த ஆய்வில் 4ஜி பதிவேற்ற வேகத்தில் ஐடியா நெட்வொர்க் 6.9 எம்பிபிடிஸ் வேத்துடன் முதலிடத்தில் உள்ளது.

 

  • கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையான goo.gl என்கிற யூஆர்எல் ஷார்ட்னர் சேவையானது அடுத்த மாதம் முதல் செயல்படாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • ஸ்பேஸ் எக்ஸ் என்ற வானியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

 

English Current Affairs

 

National News

  • World’s fourth largest bus maker Ashok Leyland began construction of its bus making plant in Mallavalli Model Industrial Park, 40 kilometres from Vijayawada. The flagship company of the Hinduja Group will produce it’s first bus in coming six months according to the company. The foundation stone for the facility has been laid by Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu.

 

  • The recent census carried out in Kaziranga National Park, Assam has revealed that there was a marginal increase in the population of the one-horned rhinocerous. As per census report, currently there are 2,413 rhinos in Kaziranga National Park registering a marginal increase of 12 rhinos compared to last census.

 

  • Government is going to launch Swachh Bharat Summer Internship (SBSI) 2018 aimed at engaging college youth with Swachhata work in villages in coming summer vacation. The initiative will be launched by Ministry of Drinking Water and Sanitation, the convening and coordinating Ministry of Swachh Bharat Mission (SBM) in association with ministry of human resource development.

 

  • Hindon Elevated Road, India’s longest elevated road was inaugurated in Ghaziabad, Uttar Pradesh by Chief Minister Yogi Adityanath. It connects UP Gate to Rajnagar extension and it easier to commute between Delhi and Ghaziabad. The elevated six-lane road is approximately 10 kilometres-long. It is built on 227 single pillars.

 

International news

  • The Union Cabinet has approved signing of Memorandum of Understanding (MoU) between India and South Asian Cooperative Environment Programme (SACEP) for cooperation on response to oil and chemical pollution in south Asian seas region.

 

  • The Union Cabinet has approved signing of Memorandum of Understanding (MoU) between India and United Kingdom and Northern Ireland regarding cooperation in the field of organised crime. It is exchange of information for purposes of combating international criminality and tackling serious organized crime.

 

  • Scientists using Kepler 2 telescope have discovered hot, metallic, Earth-sized planet named K2-229b orbiting dwarf star located 260 million light years away. They had employed Doppler spectroscopy technique also known as ‘wobble method‘ to discover and characterise this faraway planet.

 

  • Google is shutting down its URL Shortener service goo.gl, which was unveiled in 2009. The support for goo.gl will be turned down over the coming weeks and will be replaced with Firebase Dynamic Links (FDL).

 

  • According to National Annual Rural Sanitation Survey (NARSS) 2017-18, over 93% households in villages who have access to toilets are using them and about 77% homes in rural areas have got toilets. The survey was conducted by Independent Verification Agency (IVA) under World Bank support project to Swachh Bharat Mission Gramin (SBM-G).

 

Business

  • The Export-Import Bank of India (Exim Bank) has inked line of credit (LoC) agreement with Bank for Investment and Development (EBID) to provide US $500 million credit facility to fund various development projects in 15-member countries of Economic Community of West African States (ECOWAS) region in western South Africa.

 

  • Amway India, which makes Nutrilite range of traditional herbal products, plans to enter into partnerships with a few States for organic farming projects. The company recently entered into an agreement with the Andhra Pradesh Government, said by Gursharan Cheema, senior vice president of north and south regions, Amway India.

 

Appointments

 

  • The BCCI has appointed former Rajasthan Director-General of Police Ajit Singh head of its Anti-Corruption Unit (ACU). Ajit has worked with Rajasthan’s anti-corruption bureau for four years.

­