Today TNPSC Current Affairs September 15 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

செப்டம்பர் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக(MGNREGA – Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு 5 விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றுள்,
    • ஜியோ MGNREGA திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஆதாரை ஏற்படுத்தித் தருதல் மற்றும் மாற்றித் தருதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்கான மாநில அரசு(தமிழ்நாடு) விருது பெற்றது.
    • கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் 7 திட்டங்களில் தன்னிறைவு அடைந்ததற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தேசிய விருது பெற்றுள்ளது.
    • தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் நிர்வாகத்திற்கான சிறப்பு விருதை நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

  • 2018ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதற்காக ‘பிரதான் மந்திரி அன்னதாதா அய் சன்ராக்சன் அபியான்(PM-AASHA – Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan)என்ற புதிய தலைமைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு, ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ‘மின்னணு – ரைத்து’ என்னும் கைப்பேசி தளத்தை தொடங்கியுள்ளது.
    • தெலுங்கில் மின்னணு-ரைத்து என்பது மின்னணு – விவசாயி என்று பொருள்படும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • கோவா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடலோர பகுதிகளில் இடர்பாடுகளிலுள்ள பெண்களுக்காக உலகளாவிய உதவியளிக்கும் சேவை எண்ணை(181) தொடங்கி உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையே கையெழுத்தாக உள்ளது.
    • இதே போன்று, அமைதியானப் பயன்பாடுகளுக்காக விண்வெளியைப் பயன்படுத்துதல் மற்றும் ஆய்வுப் பயணங்களில் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வியறிவு, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசைப் பட்டியல் 2017ல் இந்தியா 189 நாடுகளில் 130வது இடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.
  • குறிப்பு
    • 2016ம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவானது 131வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

  • மங்குட் புயல் – பிலிப்பைன்ஸ்-ஐ நோக்கி மங்குட் புயல் வேகமாக வருகிறது. இந்த புயல் செப்டம்பர் 15ம் தேதி கரையை கடக்க உள்ளது.
  • குறிப்பு
    • 2013-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ்-ஐ தாக்கிய புயலின் பெயர் – ஹய்யன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

  • அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள தென்கொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பலான ‘டோசன் ஆன் சாங் – ஹோ’ என்னும் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவின் கடற்படையில் செப்டம்பர் 14 அன்று இணைத்துக் கொள்ளப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

முக்கிய தினங்கள்

 

  • செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர் தினம்.
    • அணைக்கட்டு தொழில் நுட்பத்தில், தானியங்கு மசுகு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யாவின் 157வது பிறந்த நாள் நினைவாக செப்டம்பர் 15, 2018 அன்று தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • குறிப்பு
    • பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகளை ஆராய்வதற்காக இந்திய தேசிய காங்கிரஸால் 1938ல் அமைக்கப்பட்ட திட்டக்குழுவின்(Planning Committee) தலைவராக விஸ்வேஸ்வரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • இவர் 1936ம் ஆண்டில் இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்(Planned Economy For Indian) என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • To help double the income of dairy farmers, Minister of Agriculture and Farmers’ Welfare Shri Radha Mohan Singh launched Dairy Processing & Infrastructure Development Fund (DIDF) with an outlay of Rs 10881 crore.
    • This was done in the inauguration of Dairy Processing & Infrastructure Development Fund (DIDF) in New Delhi.

 

  • The Department of Empowerment of Persons with Disabilities (Divyangjan),Ministry of Social Justice &  Empowerment organized a 1-day ‘National Conference of District Disability Rehabilitation Centres’ at Dr. Ambedkar International Centre, New Delhi.
    • The aim of the conference was to let DDRCs play a crucial and central role for the wellbeing of Divyangjan.

 

  • To showcase the state’s rich and diverse tribal culture and traditions to the tourists, Union Minister of State for Tourism K J Alphons inaugurated the country’s first tribal tourism circuit in Dhamtari district of Chhattisgarh.
    • This is the second projectunder the Swadesh Darshan Scheme being inaugurated in the country.

 

  • The Tamil Nadugovernment signed an MOU with the centre to implement Ayushman Bharat along with state’s Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS).
  • NOTE:
    • Ayushman Bharat – National Health Protection Missionis a scheme that was announced by the Union Minister for Finance and Corporate Affairs, Shri Arun Jaitely while presenting the General Budget 2018-19  that will cover over 10 crore poor and vulnerable families (approximately 50 crore beneficiaries) providing coverage upto 5 lakh rupees per family per year for secondary and tertiary care hospitalization.

 

  • In western Odisha, the festival of Harvest Nuakhaiis being celebrated. After harvest of new paddy of this season, rice has been processed and offered to Goddess Samaleswari in Sambalpur. People of western Odisha have also arranged Nuakhai Vetghat programs in Capital city Bhubaneswar.

 

INTERNATIONAL NEWS

  • Commerce and Industry Minister Suresh Prabhuparticipated in G-20 trade and investment ministerial meeting at Mar del Plata in Argentina. Issues including increasing protectionism challenges to promote global commerce and the new industrial revolution were discussed at the meeting.

 

  • External Affairs Minister Sushma Swarajled the Indian delegation at the 23rd meeting of India-Russia Intergovernmental Commission (IRIGC-TEC) to discuss the expansion of Russia-India relationship across all sectors.  The meeting was chaired by External Affairs Minister Sushma Swaraj and Russian Deputy Prime Minister Yuri Borisov.

 

ECONOMY

  • India’s overall exports (Merchandise and Services combined) in April-August 2018-19 (as per the RBI Press Release) are estimated to be USD 221.83 Billion, exhibiting a positive growth of 20.70% over the same period last year. Overall imports in April-August 2018-19 are estimated to be USD 269.54 Billion, exhibiting a positive growth of 21.01% over the same period last year.

 

  • The Reserve Bank to purchase government securities (G- secs) worth Rs 10,000 croreon September 19, a move aimed at inducing liquidity in the system. The purchase of the government securities will be done through Open Market Operations (OMO).
    • When the RBI thinks there is excess liquidity in the market, it resorts to the sale of securities, thereby decreasing the rupee liquidity. Similarly, when the liquidity conditions are tight, it may buy securities from the market, thereby increasing liquidity in the market.

 

AWARDS

  • Union Minister of Textiles Smriti Zubin Iranipresented ‘Shilp Guru’ and National Award to Master craft persons at a function held at Raipur, the capital of Chhattisgarh. Eight ‘Shilp guru’ and 25 National awards were presented for the year  Shilp Guru’ is the highest award in the Handicraft sector in India.

 

  • Jaipur-based poet and writer Sawai Singh Shekhawatwill be honoured with Meera Puruskar by Rajasthan Sahitya Academy for his contribution to Hindi literature.

 

IMPORTANT DAYS

  • Hindi Diwasis an annual day celebrated on September 14. On this day in 1949, Hindi written in Devanagari script became the official language of India under the Article 343. 
    • Vice president Venkaiah Naidu gave away Rajbhasha Kirti Puraskar 2017-18 on Hindi Diwas 2018. Union minister of state for home affairs Kiren Rijiju and Home Minister Rajnath Singh were present with him on the occasion.