Today TNPSC Current Affairs October 14 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 14

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், சிறப்பு ரயில்கள், பாதுகாப்பு எண்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய “Rail Partner” செயலியை தெற்கு இரயில்வேயின் வர்த்தகத் துறை அறிமுகம் செய்துள்ளது.
    • இதன் மூலம் பயணிகளும், ரயில்வே துறையும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பார்வை குறைபாடு கொண்டவர்கள் இச்செயலியில் உள்ள “டாக்பேக்” ஸ்பீக்கர்களை பயன்படுத்தி ரயில் வருகை, புறப்படும் நேரத்தை அறிந்து கொள்ள முடியும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • உலகளாவிய பட்டினி குறியீடு – 2018-ல் (Global Hunger Index)
    • இந்தியாவானது 119 நாடுகளில் 103-வது இடத்தில் உள்ளது.
      இந்தியாவில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினி குறியீடு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 குழந்தைகளில் 1 குழந்தை எடை குறைவாக உள்ளது.
  • குறிப்பு:
    • கடந்த ஆண்டு உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்துவதற்காக, இரு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிள் பங்குபெறும் 13-வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு அக்டோபர் 28-ஆம் தேதி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ளது.
  • குறிப்பு:
    • கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற மோடி, தற்போது ஐந்தாவது முறையாக இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கும் டெல்டா 4 கிளாஸ் (Delta 4 Class) வகை ஏவுகணையை இரஷ்யா நாடானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், மொத்தம் 43 நாடுகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்களுடன் 9 இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
    • இப்பட்டியலில் சீனா 319 பதக்கங்களுடன் (172 தங்கம், 88 வெள்ளி, 59 வெண்கலம்) முதலிடத்திலும், தென்கொரியா 145 பதக்கங்களுடன் (53 தங்கம், 45 வெள்ளி, 47 வெண்கலம்) இரண்டாம் இடத்திலும் உள்ளது.
  • குறிப்பு:
    • கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா 33 பதக்கங்கள் (3 தங்கம், 14 வெள்ளி, 16 வெண்கலம்) மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’ சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திராயன்-1 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டம் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
    • சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் “கிரயோ ஜெனிக்” என்ஜின் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
  • குறிப்பு:
    • சந்திராயன்-1 விண்கலம் நவம்பர் 8, 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • ஐ.நாவின் உணவு, விவசாய அமைப்பு (FAO – Food and Agriculture Organization), வருங்கால உலக கவுன்சில் (WFC – World Future Council) மற்றும் ஆர்கானிக்ஸ் இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வழங்கும் உயரிய விருதான “வருங்கால கொள்கை விருது – 2018” (Future Policy Award) –ஐ இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    • சிக்கிம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட இயற்கை விவசாய திட்டத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை பின்பற்றும் மாநிலம் என்ற பெருமையை கடந்த 2016 ஜனவரியில் சிக்கிம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள் -அக்டோபர் 13 (International Day for National Disaster Reduction)
    • இயற்கைப் பேரழிவுள் மூலம் நடக்கும் பேரிழப்புகளைக் குறைப்பதற்காகவும், அரசு மற்றும் சமூகம் பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதற்காகவும், 1989 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் சர்வதேச இயற்கை பேரழிவுகள் குறைப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • குறிப்பு:
    • இந்தியாவில் இயற்கைப் பேரழிவுகள் சம்மந்தமான திட்டங்களை வரைவதற்காக 2005 ஆம் ஆண்டு National Disaster Management Authority எனும் அமைப்பு உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • India was elected to the United Nations’ top human rights body for a period of three years beginning 1 January 2019, getting 188 votes in the Asia-Pacific category. The 193-member UN General Assembly held elections for new members to the UN Human Rights Council. The 18 new members were elected by absolute majority through a secret ballot.
    • India was vying for a seat in the Asia Pacific category. Along with India, Bahrain, Bangladesh, Fiji and Philippines had also staked a claim in the same regional group.

 

  • The Central Government has approved a special package for employment generation in leather and footwear sector. Centre has approved four projects worth over 105 crore rupees to promote leather industry in Tamil Nadu. The projects, under the Central Sector Scheme, Indian Footwear, Leather and Accessories Development Programme (IFLADP), aims to facilitate upgradation of infrastructure, job creation and environmental sustainability.
    • The Commerce and Industry Ministry said that in-principal approval has also been given to mega leather cluster at Bantala in West Bengal.

 

  • Prime Minister Narendra Modi said National Human Rights Commission has an important role to play in government’s efforts to achieve sustainable development goals. Addressing an event in New Delhi to mark the 25th anniversary of the founding of the NHRC, he said the government is committed to improve the lives of people by ensuring their rights.

 

  • To create transparency in assurance process in Parliamentary affairs, Union Minister of State for Parliamentary Affairs and Statistics & Programme Implementation, Shri Vijay Goel, inaugurated the Online Assurances Monitoring System (OAMS).
    • It will help in information regarding assurances given on the floor of the Houses of Parliament paper less and in digital format.

 

  • To exchange information and knowledge between members regarding wholesale and retail markets, Union Minister of State for Agriculture and Farmers’ Welfare Purushottam Rupala inaugurated the 32nd world conference of World Union of Wholesale Markets, WUWM at Gurugram, Haryana.
    • The theme for the conference is : ‘The Wholesale Markets in the Digital Era: Challenges and Opportunities.’

 

  • Minister of State for Textiles, Ajay Tamta has stated that the Ministry will release 8 crore rupees for the construction of a textile tourism complex in Nongpoh, Ri-Bhoi district of Meghalaya.
    • The Union Minister visited different weaving centers in Shillong. The NBCC has completed construction of an apparel center worth 14 crores rupees in the State.

 

  • According to the RTI rating by Access Info Europe and the Centre for Law and Democracy, India ranked at 6th position out of 123 countries, after a downfall of 4 positions from the previous year. The survey was carried by Transparency International India.
    • Among other countries, Afghanistan topped the chart with a score of 139 out of 150 whereas, Austria scored lowest with just 33 points. In 2011, 2012 and 2013 when the global RTI agency was launched, India was at the 2nd rank.

 

INTERNATIONAL NEWS

 

  • India and Azerbaijan have agreed to take measures to enhance bilateral trade relations. The two countries signed protocol on trade and economic, science and technology cooperation at the 5th meeting of India-Azerbaijan Inter-Governmental Commission on Trade and Economic, Science and Technology Cooperation.

 

  • To support vulnerable countries to climate and disaster shocks, the governments of Germany and the UK, with support from the World Bank launched a new Global Risk Financing Facility (GRiF).
    • It will primarily focus on climate and disaster risk but eventually the financing will be extended to projects and instruments to help wider crises and in humanitarian emergencies.

 

ECONOMY

 

  • The Finance Ministry increased interest rates for non-governmental provident funds, gratuity and superannuation to 8 percent from existing 6 percent. These include: Public Provident Fund (PPF), Sukanya Samriddhi Scheme, National Savings Certificate and post office time deposits.
    • The changes are effective from October 1, 2018 to December 31, 2018, for the 3rd

 

  • The World Bank announced concessional loan worth USD 195 million to Nepal to reform the country’s financial and energy sectors. It was announced during the ongoing annual meeting of the World Bank and International Monetary Fund (IMF) at Bali in Indonesia.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • National Aeronautics and Space Administration (NASA)’s Voyager 2 probe is on its way outside the influence of the Sun and it could be close to interstellar space. Voyager 2 could be the second space probe to reach interstellar space after Voyager 1 which crossed into interstellar space in 2014.
    • Voyager 2 probe is the only man-made probe to have crossed past Jupiter, Saturn, Uranus, and Neptune. It used the gravitational pull of the four planets, on its way to interstellar space. Voyager 2 will be in service till 2020.

 

AWARDS

 

  • Maryse Conde from the French Caribbean territory of Guadeloupe was awarded the New Academy Prize in Literature. Conde will win about £87,000 raised from crowd funding and donations. The prestigious literature prize was suspended this year after a scandal at the Swedish Academy, which awards it.

 

SPORTS

 

  • India recorded its best-ever showing in the Asian Para Games by bagging 72 medals, including 15 gold, with the shuttlers adding two gold on the concluding day of the competitions in Jakarta.
    • With 15 gold, 24 silver and 33 bronze medals, India is placed ninth in the overall tally. While China finished on top with 172 gold, 88 silver and 59 bronze for a whopping total of 319 medals.

 

IMPORTANT DAYS

 

  • The International Day for Disaster Reduction (IDDR) encourages every citizen and government to take part in building more disaster-resilient communities and nations. The United Nations General Assembly designated October 13 as the International Day for Natural Disaster Reduction as part of its proclamation of the International Decade for Natural Disaster Reduction.
    • The theme of 2018 is: “Reducing the economic loss of disasters”.

 

  • 13th October 2018, World Migratory Bird Day was observed all over the world. World Migratory Bird Day (WMBD) aims to create awareness on the need for conservation of migratory birds and their habitats. From 2018, World Migratory Bird Day is celebrated twice a year, on the second Saturday in May and in October. In 2018, it was celebrated on 12th May and now on 13th October.
    • Theme: for World Migratory Bird Day 2018 is “Unifying our Voices for Bird Conservation”. Also 2018 is the “Year of the Bird”.