Today TNPSC Current Affairs October 05 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 05

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய பிரதேச மாநில அரசானது நிவாரி(Niwari) என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. நிவாரி மத்திய பிரதேசத்தின் 52வது மாவட்டம் ஆகும். இது 2018ம் ஆண்டு அக்டோபர் 01 அன்று நடைமுறைக்கு வந்தது.
    • திகம்கார்க் மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்து நிவாரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)-வை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், உத்திரப் பிரதேச மாநில அரசானது 11 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தந்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளது.
  • குறிப்பு:
    • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
      2022 மார்ச் 31க்குள் 20 மில்லியன் வாழத்தகுந்த வீடுகளை கட்டி ஏழைக் குடும்பங்களுக்கு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா விமானப்படை சார்பில் C-130J மற்றும் C-17 என்னும் இரு வானூர்திகளும், இந்திய கடற்படை சார்பில் INS TIR, INS Sujatha மற்றும் INS Shardul ஆகிய பேரிடர் மீட்பு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • இந்தியா சார்பில் வழங்கப்படும் இந்த மனிதாபிமான உதவிகளுக்கு ‘ஆபரேசன் சமுத்ரா மைத்ரி(Operation Samudhra Maitri)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • குறிப்பு
    • கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இந்திய இராணுவத்தால், செய்யப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பெயர் -‘operation shayog’
    • இந்திய கடற்படையால் செய்யப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பெயர் – ‘operation madad’.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • நாட்டின் முதல் சோளத் திருவிழா(Corn Festival) மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த் வாராவில் நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவானது சர்வதேச நிகழ்வாகும்.
    இந்தியாவின் மிக அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாவட்டமாக சிந்த்வாராவும், அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரிபப்ளிக் ஆப் குரோசியா(Republic of Croatia) நாட்டுக்கான இந்தியத் தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்துள்ளது.
    • மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மாவை நியமனம் செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • வட அமெரிக்க நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் USMCA (United States, Mexico and Canada) என்றழைக்கப்படும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மீது ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது.
    • இதன்மூலம் ஜனவரி 1, 1994ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (NAFTA – North American Free Trade Agreement) பதிலாக USMCA என்ற ஒப்பந்தம் மாற்றாக அமையும்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 3வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அர்ஜென்டீனாவில் உள்ள ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 06 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
    • இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் அணிவகுப்பில் இந்தியாவின் தேசிய கொடியினை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபேகர் ஏந்திச் செல்ல உள்ளார்.

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

  • புது டெல்லியில் நடைபெற்ற டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டியில், இந்தியாவானது 6 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
    • இந்தியாவிற்கு அடுத்து இந்தோனேஷியா (4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்) இரண்டாவது இடத்திலும், ஹாங்காங் (4 தங்கம் மற்றும் 2 வெண்கலம்) மூன்றாவது இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 04
    • விலங்குகளின் நலனை மேம்படுத்தவும், விலங்குகளையும் ஓர் உயிராக மதிக்கவும், அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 04 அன்று உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  •  குறிப்பு:
    • உலக விலங்குகள் தினம் முதன் முதலாக 1925ம் ஆண்டு ஜெர்மனியில், ஆபத்தான நிலையில் இருக்கும் விலங்குகளுக்காக (endangered animals) மட்டுமே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In commemoration of the International Day of Non-violence, marked on Mahatma Gandhi’s birth anniversary, the UN postal agency issued a new collection of stamps featuring artistic interpretation of ‘The Knotted Gun’, an iconic global sculpture giving the message of peace and non-violence.
    • The stamps in the collection feature artistic interpretation of ‘The Knotted Gun,’ and have been issued by the UNPA in celebration of the International Day of Non-violence to spread the message of non-violence and the universal desire of a culture of peace, tolerance and understanding.

 

  • A month-long National Khadi Festival 2018 to promote Khadi products has been inaugurated on the occasion of Gandhi Jayanti 2018, by Union Minister for Micro Small & Medium Enterprises, Shri Giriraj Singh.
    • The fest is being organised by Khadi and Village Industries Commission (KVIC).

 

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi approved the establishment of National Institute of Mental Health Rehabilitation (NIMHR) in Sehore district instead of earlier approved Bhopal location.
    • The NIMHR will be now established in the Sehore district on the Bhopal-Sehore highway in Madhya Pradesh. NIMHR will be the first of its kind in the country in the area of mental health rehabilitation.

 

  • The Union Cabinet approved two Metro rail projects in poll-bound Madhya Pradesh in Indore and Bhopal. The Indore project will run along the Ring Line (Bengali Square – Vijay Nagar – Bhawarsala – Airport – Patasia – Bengali Square). The total number of stations on the line are 30.The Bhopal project comprises two corridors of total length 27.87 Km Karond Circle to AIIMS and Bhadbhada Square to Ratnagiri Tiraha.
    • A special purpose vehicle, Madhya Pradesh Metro Rail Co Ltd. (MPMRCL), has been constituted to implement both these projects.

 

  • IIT-Kharagpur has been named the national coordinating institute of the Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC) of the Ministry of Human Resource Development.
    • The programme seeks to improve the research ecosystem of India’s higher educational institutions by promoting academic and research collaboration between Indian institutions and best-in-class faculty and renowned research groups in foreign institutions.

 

  • India’s Vice President Venkaiah Naidu has inaugurated the world’s largest dome and Peace Center at the Maharashtra Institute of Technology, Vishwarajbaug, in Pune, India.
    • The imposing monumental dome, clad in the finest marble, is the vision of Dr. Vishwanath Karad, founder-president and director general of the World Peace Center.

 

  • India Chem 2018, the 10th Biennial International Exhibition & Conference began in Mumbai. The largest event of Chemicals and Petrochemical Industry in India is a two-day event. Union Road, Transport and Highways Minister Nitin Gadkari inaugurated the conference.

 

INTERNATIONAL NEWS

  • In the 2018 Government E-Payments Adoption Ranking (GEAR), compiled by The Economist Intelligence Unit commissioned by payments company Visa ranked India as 28th country to progress in the digital transformation journey.
    • The survey is a 73-country ranking survey with Norway leading the pack followed by France and Denmark. India moved up to 28th in 2018, from 36th in 2011.

 

ECONOMY

  • India and Asian Development Bank (ADB) signed $100 million loan agreement to strengthen capacity of Kolkata Municipal Corporation (KMC) for resilient urban services.
    • The $100 million loan is the third and final tranche under the $400 million Kolkata Environmental Improvement Investment Program and is aimed at expanding sewerage and drainage coverage and providing sewage treatment in Kolkata.

 

  • Gross direct tax collection in the first six months of the financial year grew 7 percent to Rs 5.47 lakh crore.
    • Refunds amounting to Rs 1.03 lakh crore have been issued during April 2018 to September 2018, which is 30.4 percent higher than refunds issued during the same period in the preceding year.

 

APPOINTMENTS

  • Madan Bhimarao Lokur took charge as the Executive Chairman of the National Legal Services Authority of India (NALSA). Madan Bhimarao Lokur was appointed to the post by President Ram Nath Kovind. He replaces Justice Ranjan Gogoi.

 

  • World Federation of Exchanges (WFE), has appointed NSE’s Managing Director and CEO Vikram Limaye as the chairman of its working group committee. His name was announced at the 58th General Assembly and Annual Meeting in Athens, Greece.

 

AWARDS

  • Ministry of Railways was named the best department for its contribution to “Swachchta Pakhwada” under the “Swachchta Hi Seva” category of awards. This was declared in an inter-ministry initiative organised by the Ministry of Drinking Water and Sanitation to encourage cleanliness in government offices and health facilities.
    • The award was presented to the Railway Ministry on the 4th anniversary of the Swachh Bharat Mission (October 2). ‘Swachchta Hi Seva’ campaign was launched in 2017 to promote the public to involve in building toilets and cleaning public places.

 

  • Evan Atar Adaha, a surgeon who runs a remote hospital in South Sudan, received the prestigious 2018 UNHCR Nansen Refugee Award. He was chosen for his 20-year commitment to providing medical services to people forced to flee conflict and persecution in Sudan and South Sudan.

 

SPORTS

  • Rio Paralympic gold medal list Thangavelu Mariyappan was named as flag-bearer of the Indian contingent for the 3rd Para Asian Games to be held in Jakarta from October 6-13.
    • India will field its biggest ever contingent of 302 members including athletes, coaches, support staff, escorts and officials.

 

IMPORTANT DAYS

  • World Teachers’ Day: 5 October
    • World Teachers’ Day is celebrated globally on 5th October. The WTD 2018 will mark the 70th anniversary of the Universal Declaration of Human Rights (1948) that recognizes education as a key fundamental right and establishes an entitlement to free compulsory education, ensuring inclusive and equitable access for all children.
    • The theme for this year’s WTD is “The right to education means the right to a qualified teacher,” has been chosen to remind the global community that the right to education cannot be achieved without the right to trained and qualified teachers.

 

  • World Animal Day – October 4
    • World Animal Day is a social movement charged with the Mission of raising the status of animals in order to improve welfare standards around the globe.
    • World Animal Day was originated by Heinrich Zimmermann. He organized the first World Animal Day on 24 March 1925 at the Sports Palace in Berlin, Germany.