Today TNPSC Current Affairs November 22 2019

We Shine Daily News

நவம்பர்­­ 22

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • வாடகைத்தாய் முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக் குழு ஆய்வுக்காக மத்திய அரசு வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
  • வாடகைத்தாய் முறை (ஒழுங்கு முறைப்படுத்துதல்) மசோதா 2019-இன் படி, வர்த்தக அடிப்படையில் வாடகைத்தாய் முறையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும். அத்துடன், கரு முட்டையை விற்பனை செய்வது மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.
  • செய்தி துளிகள்:
   • வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். அதில் மனைவி 23 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், கணவன் 26 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ, 36 உறுப்பினர்கள் கொண்ட தனது புதிய அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியினருக்கு இடமளித்துள்ளார்.
  • எம்.பி.க்களான நவ்தீப் சிங் பெய்ன்ஸ், ஹர்ஜித் சிங் சஜின், பர்திஷ் சாக்கர், அனிதா ஆனந்த் ஆகியோர் ட்ரூடோ அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • செய்தி துளிகள்
   • தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சராக ஹர்ஜித் சிங் சஜ்ஜனும், பொதுச் சேவைகள் துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் முதல் முதலாக இணைந்திருக்கும் ஹிந்து பெண் அமைச்சராவார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் மானு பாக்கர், இளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
  • சீனாவின் புட்டியன் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.
  • ஆடவர் 10 மீ.ஏர் ரைபிள் பிரிவில் 17 வயதே ஆன இந்திய நட்சத்திரம் திவ்யான்ஷ் சிங் பன்வார் 250.1 புள்ளிகளைக் குவித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

 

 

நியமனம்

 

 • தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
  • செய்தி துளிகள்:
   • தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

 

 

விருது

 

 • புதுடெல்லியின் பிரவாசி பாரதிய கேந்திராவில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஸ்வச் சர்வேஷன் கிராமீன் 2019 விருதுகளை இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் வழங்கினார்.
  • செய்தி துளிகள்
   • முதலிடத்தில் உள்ள மாநிலம்: தமிழ்நாடு,
   • முதலிடத்தில் உள்ள மாவட்டம்: பெடப்பள்ளி (தெலுங்கானா),
   • அதிகபட்ச குடிமக்கள் பங்கேற்கும் மாநிலம்: உத்தரபிரதேசம்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலக தத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மூன்றாவது வியாழக்கிழமை உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது நவம்பர் 21 அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாளில், யுனெஸ்கோ மனித சிந்தனையின் வளர்ச்சிக்கான தத்துவத்தின் மதிப்பை, ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் தனிநபருக்கும் எடுத்துரைத்தது.

 

 

திருக்குறள்

குறள் எண் : 25

குறள் அதிகாரம்      : நீத்தார் பெருமை
குறள் பால்                 : அறத்துப்பால்
குறள் இயல்              : பாயிரம்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு சார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

விளக்கம் : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On November 21, 2019, the Union Cabinet approved the introduction of Industrial Relations Code, 2019. This is the third code under labor reforms. Under the new code, forty-four laws are to be amalgamated into four codes.
  • The four codes include wage rates, social security, industrial relations and industrial security and labor welfare.
  • Related Keys
   • The code intends to simplify and rationalize the Trade Union Act, 1926, Industrial Disputes Act, 1947, Industrial Employment Act, 1946.
   • The Economic Survey, 2018 highlighted that the labor reforms in Rajasthan increased growth rates of firms.

 

 

 • University Grants Commission, UGC has issued circular to higher educational institutions to celebrate Constitution Day on 26th of November. On this day in 1949, the Constitution was adopted which came into force on 26th January 1950.
  • Related Keys
   • UGC Founded: 1956
   • UGC Headquarters: New Delhi

 

 

 

INTERNATIONAL NEWS

 • The National Investigation Agency will host the first “Counter Terrorism Exercise” between November 21, 2019 and November 22, 2019. The CT-TTX, Counter Terrorism Table Top Exercise will exercise the Quad countries namely India, Japan, US and Australia.
  • Related News
   • The dialogue between the four countries was initiated in 2007 by the Japanese President Shinzo Abe.

 

 

 • The annual report by the Sydney-based Institute for Economics and Peace states that the country most affected by terrorism in 2018 was Afghanistan (7,379 killed), displacing Iraq (1,054 killed). Iraq, now at second place, is followed by Nigeria, Syria, Pakistan and Somalia, in that order.
  • India is at seventh place in a global think tank’s list of countries most affected by terrorism.
   • Related News
    • Since 2015, IEP has been an active member of the UN Global Compac tExpert Group.
    • Institute for Economics and Peace chaired by – Steve Killelea

 

 

SCIENCE AND TECH UPDATES

 • The Defense Research and Development Organization has allowed free access to its 450 patents. The organization intends to provide a boost to domestic industries, especially startups and the strategic sector that has a network of 50 national laboratories that are involved in research and development
  • The DRDO operating under the Ministry of Defence will offer complete access to its patents without charging royalty fees or licensing fees.
  • Related Keys
   • DRDO Founded: 1958
   • DRDO Minister responsible: Rajnath Singh, Minister of Defence.

 

 

ECONOMY

 • The government has approved the sale of its stake in five Central Public Sector Enterprises, CPSEs. The Cabinet Committee on Economic Affairs, CCEA, gave its nod to strategic disinvestment in Bharat Petroleum Corporation Limited (BPCL), Shipping Corporation of India (SCI), Container Corporation of India (CONCOR), North Eastern Electric Power Corporation Limited (NEEPCO) and Tehri Hydro Development Corporation India Limited (THDC).

 

 

WORDS OF THE DAY

 • Subdue – overcome, quieten, or bring under control.
  • Similar Words – conquer , defeat .
  • Antonyms – liberate , aggravate.

 

 • Satiate – satisfied to the full
  • Similar Words – sate , slake.
  • Antonyms – deprive , dissatisfy

FaceBook Updates

WeShine on YouTube