Today TNPSC Current Affairs November 19 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 19

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ்நாடு அரசு, விரைவில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளது. இது தொடர்பாக மாநில அரசானது அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
    • இதன் சோதனைத் திட்டமானது போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு பள்ளி ஆகியவற்றில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள் 

 

  • 2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழா அணி வகுப்பில் “தலைமை விருந்தினராக (Chief Guest at the 2019 Republic Day Parade of India) தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்க உள்ளார்.
    • தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து இந்திய குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்கும் இரண்டாவது தலைவர் “சிரில் ராமபோசா” ஆவார். இதற்கு முன்னர், முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் “நெல்சன் மண்டேலா” 1995 ஆம் ஆண்டு அணி வகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • புற்றுநோய் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்ந்து ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து (UK) நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
    • இந்த ஐந்தாண்டு முன்முயற்சிக்கு, இந்தியாவின் பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் இங்கிலாந்தின் கேன்சர் ரிசர்ச் இங்கிலாந்து (CRUK) ஆகியவை இணைந்து செயலாற்ற உள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC – National Cooperative Development Corporation) “யுவ சஹாகர்” (Yuva Sahakar) என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்;தாக்கத் திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
    • இந்த திட்டங்களுக்கான செலவினங்களில், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவுகளில் உள்ளோருக்கு 80% நிதியும் மற்றவர்களுக்கு 70% நிதியும் அளிக்கப்படும்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள் 

 

  • இந்தியா – சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும், 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சீனாவின் துஜங்யான் நகரில் நடைபெற உள்ளது.
    • இப்பேச்சு வார்த்தையில் இந்தியாவின் சார்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்க உள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம் 

 

  • கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், டிஜிட்டல் மயமாக்கும் முதன்மை முயற்சியாக, ஆசிரியர் பயிற்சியை இணையம் மூலம் பெறும் வகையில் “கூல்” என பெயரிடப்பட்டு உள்ள, திறந்த நிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
    • இதற்கான திட்டங்களை, கைட் எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

 நியமனங்கள்

 

  • மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 24-வது தலைமை நீதிபதியாக “நீதிபதி சஞ்சய் குமார் சேத்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் முதன்மை இருக்கை “ஜபல்பூர்” நகரில் உள்ளது. ஜபல்பூர் உயர்நீதிமன்றம் நவம்பர் 1, 1956ல் நிறுவப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

விருதுகள் 

 

  • 2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” டாக்டர் மார்த்தா ஃபரெல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பெண் சமத்துவம், பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக மறைந்த “டாக்டர். மார்த்தா ஃபரெல்” அவர்களுக்கு, புது டெல்லியில் நடைபெற்ற 6-வது இந்திய சமூகப்பணி மாநாட்டில் “வாழ்நாள் சாதனையாளர் விருது – 2018” வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள் 

 

  • சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் நவம்பர் 18 (World Day of Remembrance for Road Traffic Victims):
    • சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 18 அன்று சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • 2018 சாலைப் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தின முழக்கம் (WDOR 2018 Slogan):
    • “சாலைகளின் கதைகள்” (Roads have Stories)

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On combating insurgency,  the 10thjoint military exercise between Indian and Russia– EXERCISE INDRA, under the United Nations (UN) started at Babina Field Firing Ranges, Babina Military Station, in Jhansi in Uttar Pradesh. This exercise will continue for 11 days and it will expect to finish on November 28, 2018.
    • Participants in the training exercise include: 5th Army of the Russian Federation from Russian side and Mechanised Infantry Battalion of Republic of India from the Indian side.

 

  • The Kerala Infrastructure and Technology for Education (KITE) unveiled its Online Open Learning training platform named-  It will enable training to teachers, students and the general public and the first batch will commence from December 2018. KOOL has been developed as an expansion of ‘Samagra’, the resource portal of the education department.
    • It will be used under a MOOC (Massive Open Online Course) model, which will enable the state’s schools to go Hi-Tech. This will help Kerala to become India’s first complete digital state in Education.

 

  • The government will set up Animation, Gaming and Visual effects Institute in Mumbai to encourage youth participation in the field of film and cinematography. Information and Broadcasting Minister Rajyavardhan Rathoresaid, the government is taking several steps to nourish the talent of the youth of the country.
    • Talking about the India International Film Festival, which begins in Goa, the Minister said, it is a platform for marketing cinematographic products and promoting India and Indian films in the International arena.

 

  • The Centrehas set up a tribunal, headed by Delhi High Court Judge Justice Suresh Kait, for adjudicating whether or not two Tripura-based militant outfits should be declared banned organisations under the law. The decision has been taken by the Home Ministry exercising the powers conferred under the Unlawful Activities (Prevention) Act.
    • A fresh ban of five years were imposed on the two insurgent groups of Tripura by the central government last month for their “violent and subversive activities”, which aim at establishment of an independent nation by secession of Tripura from India through armed struggle.

 

  • Three educational institutionsthat have been built by India were inaugurated in NepalThe Shree Saraswati Tika Higher Secondary School has been built with an Indian assistance of 37.10 million Nepalese Rupees. Shree Laxmi Adarsha Multiple Campus was also inaugrated in Lekhnath and the Shree Gupteshwor Mahadev Multiple Campus in Pokhara.

 

INTERNATIONAL NEWS

  • Morocco‘s first high-speed rail line, the first ever such line in Africa was unveiled. It was inaugurated by French President Emmanuel Macron and Morocco’s King Mohammed VI.  It is known and LGV and will connect the economic hubs of Tangier and Casablanca in 2 hours 10 minutes.

 

  • The United Nations Security Councilhas unanimously agreed to lift sanctions against Eritrea after nine years.The resolution, drafted by the UK, was backed by the US and its allies. The UN vote comes amid a thaw in relations between Eritrea and its neighbours following years of conflict.

 

ECONOMY

  • Sunil Mehta, the chairman of a bankers’ panel working on faster resolution of stressed assets in public sector banks, said anAsset Management Company (AMC) for resolving large bad loans has been formed and will be called as Sashakt India Asset Management.

 

APPOINTMENT

  • UIDAI CEO Ajay Bhushan Pandeywill be the new Finance Secretary, replacing Hasmukh Adhia, the Gujarat-cadre IAS officer who is set to retire on November 30. Pandey would continue to hold the additional charge of Unique Identification Authority of India (UIDAI) CEO andGoods and Services Tax Network (GSTN) Chairman till further instructions, according to an order issued by the Appointments Committee of the Cabinet.

 

  • Eminent breast cancer surgeon Raghu Ram who is also the director of KIMS Ushalakshmi centre for breast diseases has been elected the President of Association of Surgeons of India (ASI)by defeating Tamonas Chaudhuri from Kolkata.

 

AWARDS

  • One of India’s greatest Sarod Master Ustad Amjad Ali Khan was presented “Sumitra Charat Ram Award for Lifetime Achievement”at Kamani Auditorium, New Delhi for his immense contribution to the enrichment and promotion of Indian Classical Music.
    • Ustad Amjad Ali Khan has already received fellowship of sangeet Natak Akademi, UNESCO Award, UNICEP National Ambassadorship, Fukuoka cultural Grand price of Japan &  ‘Commander of the Order of Arts and Letters’ of France.

 

SPORTS

  • Prajnesh Gunneswaranwon the Bengaluru Open ATP (Association of Tennis Professionals) Challenger title in Bengaluru. Prajnesh Gunneswaran defeated Saketh Myneni and won the Bengaluru Open ATP Challenger title.

 

IMPORTANT DAYS

  • The World Day of Remembrance for Road Traffic Victims – 18 November
    • The World Day of Remembrance for Road Traffic Victimswas observed throughout the world. This day remembers people who had killed and injured on the roads across the world, together with their families, friends and others who are affected. This day also thanks the emergency services.
    • In 2005, United Nations endorsed this day as a global observance. Theme:for The World Day of Remembrance for Road Traffic Victims 2018 is “Roads have stories”.