Today TNPSC Current Affairs November 16 2019

We Shine Daily News

நவம்பர்­­ 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு செய்யப்பட்டள்ளன என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். மேலும், குடிமராமத்து உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தினார்.
  • செய்தி துளிகள்:
   • ‘குடிமராமத்து’ என்பது ஒரு நடைமுறையாகும், இது நீண்ட காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்தது, அங்கு மக்கள் நீர்வளங்களை நிர்வகிப்பதில் மூலதனம் அல்லது உடல் உழைப்பின் சதவீதத்தை பங்களிக்கின்றனர், மேலும் பயனுள்ள மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான நீண்டகால திட்டமாக மாநில அரசு 2017 இல் அதை புதுப்பித்தது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளைப் பகிர்ந்தளிப்பதற்காக 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.
  • செய்தி துளிகள்:
   • பாதுகாப்பு அமைச்சக முன்னாள் செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், ஓய்வு பெற்ற ஐசிஏஎஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 • அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இஸ்ரேலின் உதவியுடன் இந்தியா செயல்படவுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தின்போது ஆற்றிய உரையில், அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிடப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘நீர் மேலாண்மையில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு’ என்ற மாநாடு, இஸ்ரேலில் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • செய்தி துளிகள்:
   • இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள இந்தியத் தூதரகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
   • நீர் மறுசுழற்சியை இஸ்ரேல் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. அந்நாட்டின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் 80 சதவீதம், மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு13 டிஎம்சி கழிவு நீரை இஸ்ரேல் மறுசுழற்சி செய்கிறது. இது, மற்ற நாடுகளின் மறுசுழற்சி அளவுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள், இந்தியாவிடம் திட்டமிட்டபடி ஒப்படைக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
  • ரஷியாவிடமிருந்து43 பில்லியன் டாலர் மதிப்பில் (ரூ.39,000 கோடி) எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • செய்தி துளிகள்:
   • ரஷியா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
   • அந்த வகையில், இந்தியாவையும் அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துவிட்டது. எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பானது, எதிரிகளின் போர் விமானம், அதிவேக ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க கூடியதாகும். தரையிலுள்ள இலக்குகளை தாக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்த முடியும்.

 

 

 • ஐ.நாவின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு35 கோடி டாலர் (சுமார் ரூ.95 கோடி) நிதி உதவியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
  • செய்தி துளிகள்:
   • வரும் 2020-ஆம் ஆண்டில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக35 கோடி டாலரை வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருவதன் ஒரு பகுதியாகவே இந்தியா இந்த நிதி உதவியை வழங்குகிறது.
   • மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கு 50 லட்சம் டாலரையும், ஐ.நா. மேம்பாட்டு திட்டங்களுக்கு 45 லட்சம் டாலரையும் இந்தியா தனது பங்களிப்பாக வழங்கவுள்ளது.

 

 

பணி நிறைவு

 

 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது கடைசி பணி நாளை ரஞ்சன் கோகோய் 11.2019 நிறைவு செய்தார். அவரது பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
  • அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, சர்ச்சைக்குள்பட்டிருந்த77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை வழங்க மத்திய அரசுக்கு அந்த அமர்வு உத்தரவிட்டது.
  • செய்தி துளிகள்:
   • சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை இந்தியா முழுவதும் தேசியக் கூட்டுறவு வாரம் கொண்டாடப்படுகின்றது.
  • இந்த ஆண்டில் 66-வது தேசியக் கூட்டுறவு வாரம் கொண்டாடப்படுகின்றது.
  • நாட்டின் பொருளாதாரத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதே இந்த வார அனுசரிப்பின் நோக்கமாகும்.

 

 

 • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி “சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினத்தை” அனுசரிக்கிறது. கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் சகிப்புத்தன்மையை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உறுதிபூண்டுள்ளது.
  • உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996-ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 16-ஆம் தேதி சர்வதேச சகிப்புத் தன்மை தினம் கொண்டாடப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 19

அதிகாரம் : வான்சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

விளக்கம்: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராதுஇ தன்னை உயர்த்தும் தவமும் இராது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Gujarat government announced a special Rs 700 crore relief package. Around four lakh farmers will benefit from the relief. Farmers covered under the crop insurance scheme will get the assistance of Rs 13,500 per hectare of irrigated land in cases where crop damage is in excess of 33%.
  • The assistance to farmers of un-irrigated land will be Rs 6,800 per hectare.
  • Related News
   • Gujarat Literacy (2011) 03%
   • Gujarat is the fifth largest Indian state by area and the ninth largest state by population.

 

 

INTERNATIONAL NEWS

 • Bangladesh has topped the business bribery risk in South Asia according to the Trace Bribery Matrix. Bangladesh has the highest business bribery risk among South Asian courtiers according to the annual ranking for 200 countries.
  • Bangladesh has been placed at 178th position among 200 countries in terms of business bribery risk. Overall, New Zealand, Norway, Denmark, Sweden, and Finland presented the lowest bribery risk.
  • Related News
   • Bangladesh Prime minister: Sheikh Hasina
   • Bangladesh Capital: Dhaka

 

 

APPOINTMENTS

 • Senior IAS officer Nilam Sawhney has been appointed as the new Chief Secretary of Andhra Pradesh. An order was issued by the General Administration Department appointing Sawhney, a 1984 batch Indian Administrative Service (IAS) officer, to the top post.
  • Sawhney is the first woman Chief Secretary of the Andhra Pradesh.
  • Related News
   • Andhra Pradesh Literacy rate       41%
   • Andhra Pradesh has the second-longest coastline among the states of India.

 

 

BANKING NEWS

 • The Competition Commission of India (CCI) has approved the merger of the BNP Paribas (BNPP) Mutual Fund and the Baroda (BOB) Mutual Fund, under the Competition Act, 2002.
  • The strategic alliance would allow both companies to leverage each other’s strengths to offer products specially designed for retail and institutional clients in India.
  • Related News
   • Competition Commission of India Founded: 14 October 2003.
   • Competition Commission of India Headquarters: New Delhi.

 

 

SPORTS

 • The Punjab government will host the 2019 Kabaddi World Cup from December 1 to 9. This year’s tournament would be dedicated to the 550th birth anniversary of Sikh guru, Guru Nanak Dev Ji.
  • Related News
   • Punjab Governor     V P Singh
   • Punjab Literacy (2011) 68%

 

 

WORDS OF THE DAY

 • Outlandish – looking or sounding bizarre or unfamiliar.
  • Similar words – weird, freakish.
  • Antonyms – ordinary , commonplace

 

 • Oasis– a fertile spot in a desert, where water is found.
  • Similar Words – watering hole , spring.
  • Antonyms – droughty , aridity

FaceBook Updates

WeShine on YouTube