Today TNPSC Current Affairs November 08 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்;டுள்ளது. அம்மாவட்டத்தின் ஆட்சியர் ரோஹினி டிஜிட்டல் நூலகத்தை தொடங்கி வைத்துள்ளார்.
    • இதன் மூலம் ஏழை கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான சந்தேகங்களை அறிந்து கொள்ள முடியும்.

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உத்திரப் பிரதேச மாநிலத்தின் பைசாபாத் என்னும் மாவட்டத்தின் பெயரை அயோத்தி எனப் பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
    • முன்னதாக உத்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • மத்திய அமைச்சரவைக்கு, ரஷ்யாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு உடன்படிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.
    • போக்குவரத்துப் பயிற்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்திய ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை.
    • இரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்திட கூட்டுப் பங்கு நிறுவனமான ரஷ்யாவின் இரயில்வேத் துறையுடன் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • பிபிசியின் (BBC) 100 சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படங்கள் பட்டியலில் சத்ய ஜித்ரேயின் புகழ்பெற்ற காவியமான “பதேர் பாஞ்சாலி” என்ற திரைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் இடம்பெறும் ஒரே இந்தியத் திரைப்படம் “பதேர் பாஞ்சாலி” ஆகும். இப்படமானது இப்பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.
    • இந்த பட்டியலில் அகிரா குரோசேவாவின் “செவன் சாமுராய்” முதலிடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய, 27 வயதான “சபியா யாசிர்” என்ற பெண் ஒருவர் இடம் பெற உள்ளார்.
    • இதன் மூலம் அமெரிக்காவின் சபையில் இடம்பெறும் முதல் அகதி என்னும் பெருமையை “சபியா யாசிர்” பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

  • ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத் துறையானது, தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க பணமான 1 டாலர் 15 சென்ட் மதிப்பிலான தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விருதுகள்

 

  • தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை அளித்துள்ளது.
    • 2018ம் ஆண்டுக்கான இராஜா ராம் மோகன்ராய் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளரும், ‘இந்து’ வெளியீட்டு குழுமத்தின் தலைவரான என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

  • எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்;றுத் திறனாளி பெண்ணான ‘அருணிமா சின்ஹாவிற்கு’ பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
  • குறிப்பு:
    • கடந்த 2013ம் ஆண்டு மே 21ம் தேதி, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை (8848 மீட்டர்) அடைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக சைவ உணவுப்பழக்க தினம் (World Vegan Day) – நவம்பர் 1
    • தனிநபர்களுக்கு சைவ உணவுப் பழக்க வாழ்க்கை முறையை பற்றியும், சைவ உணவுப் பழக்கத்தின் மதிப்பு மற்றும் சைவ உணவிற்கு மாறுவதன் மூலம் அடையும் பயன்களை நினைவு கூறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சைவ உணவுப் பழக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இத்தினமானது 1994ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • To ameliorate the problems of people living in these isolated locations, the Home Ministry released 113.36 crore to 6 border states under the Border Area Development Programme (BADP).
    • The 6 states where the amount was released were: Assam, Nagaland, Sikkim, Gujarat, Rajasthan and Uttarakhand. With this release the total amount released so far during this fiscal to the States having International Border is 637.98 crore.

 

  • For providing end-to-end solutions for passenger ropeway projects, Union Minister for Road Transport & Highways, Shipping, Water Resources, River Development and Ganga Rejuvenation Shri Nitin Gadkari oversaw the MOU signing of between WAPCOS and Doppelmayr .
    • This projects would help in reducing traffic congestion and pollution, development of tourism destinations and employment generation in the country.

 

  • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath renamed Faizabad as Ayodhya, the birthplace of Lord Ram. The Faizabad district comprises the twin towns of Faizabad and Ayodhya on the banks of the river Saryu.

 

  • UP Governor Ram Naik approved renaming of Ekana International Cricket Stadium in Lucknow in the memory of late PM Atal Bihari Vajpayee. As per the proposal, the Ekana International Cricket Stadium in Lucknow was renamed as the “Bharat Ratan Atal Bihari Vajpayee International Cricket Stadium“. It has a seating capacity of around 50,000.

 

  • Odisha Chief Minister Naveen Patnaik launched the technology-driven and citizen-friendly ‘Mo bus’ service in Bhubaneswar, Odisha. Mo bus service has facilities like: free wi-fi, CCTV surveillance, public information display system and on board announcements.
    • Mo bus service has been launched for the residents of Bhubaneswar, Cuttack and Puri. Nearly 300 buses will be launched in 3 phases.

 

  • Ministry of Food Processing Industries(MoFPI) under Union Minister Smt Harsimrat Kaur Badal has approved the operationalisation strategy for Operation Greens. Operation Greens was announced in the Budget speech of 2018-19 with an outlay of Rs 500 crores to stabilize the supply of Tomato, Onion and Potato(TOP) crops and to ensure availability of TOP crops throughout the country round the year without price volatility.
    • NAFED will be the Nodal Agency to implement price stabilisation measures.

 

  • The Central and Andhra Pradesh governments and the World Bank have signed the loan agreement for a $172.20 million project to enhance agricultural productivity, profitability, and climate resilience of poor and marginalized farmers in Andhra Pradesh.
    • The projects seek to ensure that farming continues to remain a financially viable activity. The Andhra Pradesh Integrated Irrigation and Agriculture Transformation Project (APIIATP) will be implemented in rural areas largely dependent upon rain-fed agriculture.

 

INTERNATIONAL NEWS

  • India and Malawi have signed three MoUs on Extradition Treaty, cooperation in the field of Atomic Energy for peaceful purposes and VISA Waiver for Diplomatic and Official Passports. The MoU was signed during Vice President Venkaiah Naidu visit in Malawi. India will also extend a new Line of credit of 215 million US dollars to Malawi for 18 water projects.

 

APPOINTMENT

  • India was re-elected as a Member of the International Telecommunications Union (ITU) Council at the elections of the council held during ITU Plenipotentiary Conference 2018 at Dubai, India would be the Member of ITU Council for 4 more years (2019-2022).India secured the 3rd rank among the 13 countries , by getting 165 votes, from the Asia-Australasia region.
    • Recently, ITU decided to set up the ITU South Asia Area Office and Technology Innovation Centre in New Delhi.

 

SCIENCE & TECHNOLOGY

  • National Aeronautics and Space Administration (NASA)’s Hubble Space telescope has spotted a formation of galaxies that look like a smiling face in the sky. The image of galaxies looking like a smiling face was captured with Hubble telescope’s Wide Field Camera 3 (WFC3).
    • Hubble telescope captured the image inorder to understand how new stars are brought to life throughout the cosmos.

 

ECONOMY

  • The National Seminar on Entrepreneurship and Business Development in Ayurveda was held in New Delhi. It was organized by Ministry of AYUSH in association with NITI Aayog with aim of encouraging entrepreneurs and Ayurveda stakeholders towards businesses opportunities in the sector.
    • The seminar is expected to develop awareness among stakeholders about the business opportunities, encouraging young entrepreneurs to use of modern technologies and modern innovations in business development in the sector and highlight opportunities at global level.

 

AWARDS

  • Veteran actor Anupam Kher was honoured as a ‘Distinguished Fellow’ by IndiaGlobal – a leading US think-tank that works on issues concerning non-resident Indians.
    • The actor was given a fellowship at the 3rd IndiaGlobal Summit. The event was held at the prestigious MIT Sloan School of Management in Boston, and was facilitated by MIT Sloan India Business Club.

 

SPORTS

  • Thailand’s Luksika Kumkhum won her first WTA (Women’s Tennis Association) title by winning the singles title in the L&T Mumbai Open at the Cricket Club of India courts, in Mumbai.
    • In the Doubles, Natela Dzalamidze and Veronika Kudermetova of Russia won the title by defeating Bibiane Schoofs of Netherlands and Barbora Stefakova of Czech Republic 6-4, 7-6(4).