Today TNPSC Current Affairs November 04 2019

We Shine Daily News

நவம்பர்­­ 04

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • பிரியாணி, ஹலீம் ஆகிய உணவு வகைகளைத் தயாரிப்பில் சிறப்பிடம் பிடித்ததற்காக, ஹைதராபாத் நகருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • உலக நகரங்கள் தினம், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம், படைப்புத் திறனில் சிறந்து விளங்கும் கிரியேட்டிவ் சிட்டி பட்டியலில், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களின் பெயர்களைச் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்தது.
  • திரைப்படங்கள் தயாரிப்புக்காக மும்பை நகரையும், பிரியாணி, ஹலீம் ஆகிய உணவு வகைகளின் தயாரிப்புக்காக ஹைதராபாத் நகரையும் யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
  • செய்தி துளிகள்
   • உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களின் வரிசையில் ஹைதராபாத் இடம்பெற்றுள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஹைதராபாத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இது, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் ரூ.14 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 • வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்திய கப்பல்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, ஐஸ்-கிரீம்-உணவு கப்புகள், மைக்ரோவேவ் உணவுகள், பால் பாக்கெட்டுகள், ஷாம்பூ பாட்டில்கள், தண்ணீர்-குளிர்பான பாட்டில்கள், பிஸ்கெட் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் உள்ளிட்ட எந்த வகையான ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களையும் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு கப்பல்கள் மட்டுமின்றி, இந்திய கடல் எல்லைக்குள் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் அனைத்திலும் இந்ததடை வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

 

 • ஹைதராபாத்தில் உள்ள எராகடாவில் உள்ள யுனானி மருத்துவ மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (CRIUM) இலிருந்து மேம்படுத்தப்பட்ட தோல் கோளாறுகளுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஆர்.ஐ.எம்.எஸ்.டி) மத்திய ஆயுஷ் மாநில அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக் இன்று திறந்து வைத்தார்.
  • செய்தி துளிகள்
   • ஆயுஷ் மத்திய அமைச்சர்: ஸ்ரீபாத் யெசோ நாயக். டைரக்டர் ஜெனரல், யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (Central Council for Research in Unani Medicine (CCRUM)): அசிம் அலிகான் ஆவார்.

 

 

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில், புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளும் புதிய வரைபடத்தில் இந்தியப் பகுதிகளாக இடம்பெற்றிருந்தன.
  • உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில் கார்கில் மற்றும் லே – இரண்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
  • செய்தி துளிகள்
   • இந்தியாவின் வரைபடத்துடன், 2019 அக்டோபர் 31 அன்று உருவாக்கப்பட்ட புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை சித்தரிக்கும் வரைபடங்களை இந்தியன் சர்வே ஜெனரல் தயாரித்தனர்.
   • அக்டோபர் 31 ம் தேதி, புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்றார். ராதா கிருஷ்ணா மாத்தூர் லடாக்கின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்.

 

 

 • ஒற்றை-இரட்டை முறையில் வாகனங்கள் இயக்கப்படும்: டெல்லி அரசு முடிவு இன்று முதல் தேசிய தலைநகரில் செயல்படுத்தப்படும். 12 நாள் திட்டம் இந்த மாதம் 15 வரை தொடரும்.
  • காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஒற்றைப்படை இலக்க எண்கள் கொண்ட தனியார் 4 சக்கர, 2 சக்கர வாகனங்கள், ஒற்றைப்படை தேதிகளில் இயக்கப்பட வேண்டும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இரட்டைப்படை இலக்க எண்கள் கொண்ட தனியார் 4 சக்கர, 2 சக்கர வாகனங்கள், இரட்டைப்படை தேதிகளில் இயக்கப்பட வேண்டும்.
  • இந்த விதியை மீறுவதால் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
  • செய்தி துளிகள்
   • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், இந்திய பிரதம நீதியரசர், மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்கட்சித் தலைவர்கள், மாநிலங்கள் மற்றும் மத்திய பிரதேசங்களின் முதலமைச்சர்கள் ஆகியோருக்கும் விலக்கு அளிக்கப்படும்.
   • இருப்பினும், டெல்லி முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் வாகனங்களுக்கு விதிவிலக்கு இருக்காது. தனியாருக்குச் சொந்தமான சி.என்.ஜி வாகனங்களுக்கு இந்த முறை விலக்கு அளிக்கப்படாது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பகோதிர் நிஜாமோவிச் குர்பனோவை தலைநகர் தாஷ்கண்டில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  • இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ராணுவம் சார்ந்த மருத்துவத் துறையில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • செய்தி துளிகள்
  • இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி, தாஷ்கண்ட் அருகே உள்ள சிர்ச்சிக் பயிற்சி முகாமில் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியை இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் தொடங்கி வைக்கவுள்ளனர். வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • டபிள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸி.யின் ஆஷ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • உலகின் தலைசிறந்த 8 வீராங்கனைகள் ஆண்டு இறுதியில் பங்கேற்று ஆடும் முக்கியமான போட்டி டபிள்யுடிஏ பைனல்ஸ் ஆகும். இதன் நடப்பு சாம்பியன் எலினா விட்டோலினோ, ஆஷ்லி பர்டி, சிமோனா ஹலேப், பெலின்டா பென்கிக், கிகி பெர் டென்ஸ், கரோலினா பிளிஸ் கோவா, பெட்ரா குவிட்டோவா, பியான்கா ஆன்ட்ரீஸ்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆஷ்லி பார்டி முதன்முறையாக டபிள்யுடிஏ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • டபிள்டிஏ பைனல்ஸ் போட்டி 1972 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

 

 

 • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸ் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், கனடா வீரர் டெனிஸ் ஷபவலோவ் மோதினார்.
  • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளார்.

 

 

 • புடாபெஸ்டில் நடந்த UWW 23 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் மல்யுத்தத்தில் பூஜா கெஹ்லாட் (53 கி.கி) ஜப்பானில் ஹருணா ஒகுனோவால் வீழ்த்தப்பட்டு இந்தியாவிற்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
  • செய்தி துளிகள்
   • ரவீந்தர் (61 கிலோ), இந்தியாவின் முதல் வெள்ளி பதக்கத்தினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திருக்குறள்

குறள் – 7

அதிகாரம் – கடவுள் வாழ்த்து

குறள் இயல் – பாயிரம்

குறள் பால் – அறத்துபால்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

விளக்கம் :

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • A landmark container cargo consignment will sail on inland waterway from the Haldia Dock Complex, Kolkata to the Inland Waterways Authority of India terminal at Pandu in Guwahati. It is to begin on November 4, 2019. The main objective of the waterway is to improve connectivity to the North Eastern Region. The containers will carry edible oil, petrochemicals, beverages, etc.
  • Related Keys:
   • The voyage will sail for a 12 to 15 days. It is 1425 km long.
   • It is expected to establish technical and commercial viability of the IWT (Inland Waterway Transport) route.
   • The water way is to be integrated with National Waterway-1 (river Ganga), NW-97 (Sunderbans), NW-2 (River Brahmaputra), Indo-Bangladesh Protocol (IBP) route.

 

 

 • Vice-President M Venkaiah Naidu unveiled the ‘Red Atlas Action Plan Map’ atlas and the ‘Coastal Flood Warning System App (CFLOWS-Chennai)’ for flood mitigation in Chennai, Tamil Nadu. Both the atlas and the CFLOWS-Chennai are intended as decision support systems covering aspects, including preparedness and prevention. Such initiatives to effectively tackle urban flooding are likely to be replicated in other Indian cities including Mumbai, Maharashtra.
  • Related Keys:
   • The CFLOWS-Chennai is a complete webGIS-based decision support system.
   • It can be used both for mitigation planning operations before flooding as well as in real time to for aspects like relief work.

 

 

 • On November 3, 2019, the Union Minister of State (independent charge) for AYUSH inaugurated the National Research Institute of Unani Medicine for Skin Disorders. The institute was upgraded from Central Research Institute of Unani Medicine.
  • Related Keys:
   • The concept of AYUSH was brought by the National Rural Health Mission, 2005 to revitalize local health traditions.
   • AYUSH includes 6 Indian systems of medicine that includes Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha and Homeopathy.

 

 

INTERNATIONAL NEWS

 • PM Modi on the sidelines of 35th ASEAN summit and 14th East Asia Summit, met the President of Indinesia H.E. Joko Widodo and the Thailand PM Prayut Chan-o-Cha (Gen (retd)).
  • The leaders discussed the threat to extremism and terrorism and agreed to work closely. The meeting on terrorism is important for India’s interests in the Indo-Pacific region.
  • Related Keys:
   • PM Modi discussed ways to enhance connectivity between the two countries in the areas of digital connectivity and physical connectivity.
   • India and Thailand are close maritime neighbors. India’s Act East Policy is complimented by the Thailand’s Look West Policy as that of Indonesia.

 

 

 • Vigyanika is the International Science Literature Festival that is organised as a part of fifth India International Science Festival (IISF) at Kolkata. It also features a Science Book Fair where more than 30 publishers are to display their scientific publications
  • Related Keys:
   • Vigyanika is an annual event organised by Ministry of Science and Technology and Earth Sciences
   • It is coordinated by the CSIR-NISCAIR (National Institute of Science Communication and Information Resources), Vigyan Bharati and Vigyan Prasar

 

 

SPORTS

 • Novak Djokovic defeated Shapovalov 6-3, 6-4 in the final of the Paris Masters Open Tennis Series to clinch the championship title.
  • Serbia’s Novak Djokovic confronts Denis Shapovalov of Canada, the world’s leading star, in today’s men’s singles final.
  • This is the fifth time that Serbia’s Novak Djokovic has been crowned champion in the Paris Masters Open.
  • Related Keys:
   • The Masters Open Tennis Series is taking place in the French capital, Paris.
   • Novak Djokovic had won championships in 2009, 2013, 2014 and 2015.

 

 

WORDS OF THE DAY

 • Afflicted – One who is troubled,distressed,pained
  • Synonym – Aggrieved,depressed
  • Antonym – Comforted,Assisted,aided

 

 • Reiterate – Say something again or a number of times,typically for emphasis or clarity
  • Synonym – Repeat , Retell
  • Antonym – Take back,Cease,hide,Ignore

 


FaceBook Updates

WeShine on YouTube