Today TNPSC Current Affairs May 9 2019

We Shine Daily News

மே9

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 இலவச தொலைபேசி சேவையை கண்காணிக்க குழு அமைப்பதற்கு சமூகநலத் துறை திட்டமிட்டுள்ளது.
    • பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மனநல ஆலோசகர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் 181 இலவச தொலைபேசி சேவையில் அழைத்து தெரிவித்து வருகின்றனர்.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • உலக புகழ்பெற்ற சர்தாம் யாத்ரா உத்தர்கண்டில் தொடங்கியது
    • கங்கோதரி மற்றும் யமுநோதரி யாத்ரீகர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
    • இது அட்சயா திரிதியை முன்னிட்டு கொண்டாடப்பட்டது.
    • யமுநோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு யாத்ரீகஸ்தலங்களும் இணைத்து சர்தாம் என்றழைக்கபடுகின்றன.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • மே 7, 2019 இல் பின்லாந்து, ரோவனிமி, லப்பி ஆரேனாவில் 11 வது ஆர்ட்டிக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
    • ஆர்டிக் பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்க 2 ஆண்டு ஃபின்னிஷ் தலைமையின் கீழ் முடிக்கப்பட்ட வேலைகளை 8 ஆர்க்டிக் மாகாணங்களில் இருந்து வந்தவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
    • ஆர்டிக் கவுன்சிலின் உறுப்பினர்கள்: அமெரிக்கா, கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா மற்றும் சுவிடன்.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • போலந்து தலைநகரான வார்சாவில் நடைபெற்ற 36 ஆவது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர்கள் கௌரவ்சோலங்கி, மணீஷ் கௌசிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • சோலங்கி 52 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரர் வில்லியம் காவ்லேவை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் வென்றார் சோலங்கி.
    • கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஃபிளை வெயிட் பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
    • காமன்வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெள்ளி வென்ற மணீஷ் கௌசிக், ஃபெலிக்ஸ் ஸ்டாம் போட்டியில் 60 கிலோ பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்றார்.
    • இந்திய வீரர் ஹீசாமுதீன் (56 கிலோ எடைப் பிரிவு) வெள்ளியும், அரையிறுதி வரை முன்னேறிய மன்தீப் ஜங்ரா (69 கிலோ), சஞ்சீத் (91 கிலோ), அங்கித் கடானா (64 கிலோ) வெண்கலமும் வென்றனர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். அதன்பின், இந்தியா ‘ரேடார் இமேஜிங் சேட்டிலைட்’ (ரிசாட்-2பிஆர்1) என்ற நவீன செயற்கைக் கோளை 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உட்பட பல்வேறு தகவல்களை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கி வருகிறது.
    • இந்நிலையில், அடுத்தகட்டமாக ‘ரிசாட்-2’ ரக செயற்கைக் கோள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளை வரும் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்த உள்ளது. இந்தச் செயற்கைக் கோள் பூமியில் இருந்து 536 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். ‘ரிசாட்-2’ செயற்கை;க கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் மேக மூட்டங்கள், பனி போன்ற எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயப்படும். குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அசைவுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும்.
    • இந்தச் செயற்கைக் கோளை பேரிடர் மேலாண்மைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விருதுகள்

 

  • அமெரிக்க ஜனாதிபதியான டோனால்ட் ஃட்ரம்ப், அந்நாட்டின் மிக உயரிய விருதான, சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கதினை (Presidential medal of freedom) அந்நாட்டின் நட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ்க்கு வழங்கினார்.

 

நியமனங்கள்

 

  • குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (ஜிஎன்எல்யூ) புதிய இயக்குநராக முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜுலை முதல் பதவி ஏற்க உள்ளார்.

 

முக்கியதினங்கள்

 

  • உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
    • இந்த ஆண்டுக்கான மையக்கருத்து “# அன்பு” என்பதாகும்
    • Theme – “# love”

 

  • உலக தலசீமியா தினம் மே 8 அன்று கொண்டாடப்பட்டது.
    • இந்நாளின் மையக்கருத்து: “அனைவருக்கும் தரமான தலசீமியா சுகாதார சேவைகள்: நோயாளிகளுக்காக நோயாளிகளுடன் இணைந்து செயல்படுதல்”.

 

ENGLISH CURRENT AFFAIRS 

NATIONAL NEWS

  • The Ministry of New and Renewable Energy (MNRE) held a session for stakeholders in the renewable energy industry termed as ‘chintan baithak’, where CEOs (Chief Executive Officers) made presentations on subject matters, namely, regulatory hurdles, energy storage, transmission constraints and low cost, long term funding.
    • The meeting was headed by Secretary, MNRE, Shri Anand Kumar.

 

  • Max Life Insurance Co Ltd has notified that it will commemorate the 6th day of each month as ‘Protection Day’. The objective of this initiative was to raise awareness on financial protection.
    • Aalok Bhan, Director and Chief Marketing Officer, Max Life notified that this date of the calendar month was selected, because, generally, number 6 indicates love, harmony and is also a symbol of secured financial future.

 

INTERNATIONAL NEWS

  • On May 7, 2019 Finland held the 11th Arctic Council Ministerial Meeting in Lappi Areena, Rovaniemi, Finland. The dignitaries from the 8 Arctic States had approved the work completed under the 2-year Finnish Chairmanship to enhance sustainable development and environmental conservation in the Arctic region.
    • The Arctic States were joined by delegates from the Arctic Council’s Permanent Participant organizations, the heads of the 6 Working Groups, and Observers.

 

ECONOMY

  • The Commerce Ministry, Indian High Commissions and embassies of 11 African nations organized a 2-day, (that is on May 3rd and May 6th) long interaction to deepen the India-Africa trade relations.
    • This was arranged over Digital Video Conference (DVC) and was attended by more than 400 members of the Indian business community in Africa.

 

APPOINTMENTS

  • Visa, the global leader in digital payments technology, announced the appointment of Sujatha V Kumar as Head of Marketing for India and South Asia. She will be driving overall marketing strategy and execution including consumer, retail and digital marketing initiatives for India and the emerging markets of Sri Lanka, Bangladesh, Nepal and Maldives.

AWARDS

  • The Secretary of United Nations, General Antonio Guterres, accompanied with top UN officials and Peacekeeping personnel paid homage to 115 peacekeepers  from 43 different countries who laid down their lives in the service of peace.
    • Among the 115 peacekeepers, 2 Indians were also paid tribute. They were honoured for their sacrifice in the line of duty.

 

IMPORTANT DAYS

  • The 59th Raising Day of Border Roads Organization(BRO) was celebrated on May 7, 2019. It is a nodal road construction agency under the Ministry of Defence.
    • It was formed on 7th May, 1960, with the primary role of providing road connectivity in border areas.