Today TNPSC Current Affairs May 1 2019

We Shine Daily News

மே1

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஏப்.28 அன்று மணிப்பூரில் உள்ள உக்ருள் மாவட்டத்தில், ஷிருய் லில்லி விழாவின் 2வது பதிப்பு கொண்டாடப்பட்டது. ஆழிவின் விளிம்பிலிருக்கும் ஷிருய் லில்லியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உக்ருள் மாவட்டத்தை மணிப்பூர் மாநிலத்தின் ஒரு சுற்றுலாத்தலமாக ஊக்குவிக்கவும் வேண்டி மணிப்பூர் மாநில சுற்றுலாத்துறையால் இந்த விழா நடத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

  • சர்வதேச துப்பாக்கி சுடு வீராங்கனை கௌரி ஷியோரனை ஹரியானா மாநில அரசு தனது தட்டம்மை மற்றும் ரூபெல்லா (MR) தடுப்பூசி பரப்புரைக்கான நல்லெண்ண தூதராக (Brand Ambassador) நியமித்துள்ளது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பரப்புரை நிகழ்வின் தொடக்கத்தின்போது அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இதனை அறிவித்தார்.
    • இப்பரப்புரையின் கீழ், சுமார் 80 லட்சம் குழந்தைகளுக்கு (9 மாதம் முதல் 15 வயது வரை) தடுப்பூசி செலுத்தப்படும். இப்பரப்புரைக்காக 11 நடமாடும் மருத்துவ அலகுகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பரப்புரையின் மூலம், 2020-ம் ஆண்டளவில் நாட்டில் தட்டம்மையை முற்றாக ஒழிப்பதையும் ரூபெல்லாவை கட்டுக்குள் கொண்டு வருவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

  • இந்தியாவில் வளர்ந்துவரும் உயிரித்தொழிநுட்ப நிறுவனங்களைப் பலப்படுத்தும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழிநுட்பத் துறை, அனைவரையும் உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும் உயிரித்தொழிநுட்பத் தொழிற்முனைவோருக்கு அதிகாரமளிக்கவும் உயிரி மருந்து உற்பத்திக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை விரைவுபடுத்த தொழில்துறை மற்றும் கல்வித்துறை இணைப்புக்கான இயக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
    • இவ்வியக்கம் $250 மில்லியன் டாலர் மொத்தச் செலவில், 50% உலகவங்கிக் கடனுடன் மேற்கொள்ளப்படும். உயிரி மருந்து உற்பத்திக்கான சிறந்த, மலிவான, புதுமையான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொகுப்பாக இந்தியாவை ஆக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

  • சிக்கியின் முதல்வர் பவன் சாம்லிங் இந்திய அரசியல்வாதிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து அதிக ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்த சாதனையை அவர் பெற்றுள்ளார். சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவராக அவர், 1994 டிசம்பர் 12ல் முதல்வரானார். அதன்பிறகு தொடர்ந்து 5வது முறையாக அவர் ஆட்சிசெய்து வருகிறார்.
    • நீண்ட காலம் முதல்வராக இருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் சாதனையை சாம்பிலிங் ஏப்.29 அன்று முறியடித்தார். 23 ஆண்டுகள் 4 மாதங்கள், 17 நாட்கள் ஜோதிபாசு முதல்வராக இருந்துள்ளார்.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

  • அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ், NITI ஆயோக் அமைப்பு, அடல் புதிய இந்தியா சவால் என்ற திட்டத்தை ஏப்ரல் 26 அன்று தொடங்கியது. ஐந்து துறைகளின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் அடல் புதிய இந்தியா சவால் திட்டத்திற்காக, அடல் கண்டுபிடிப்பு இயக்கம், புதிய கண்டுபிடிப்பாளர்கள் / குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர் / எழுமின் ஆர்வலர்கள் மூலம் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற பொருட்கள் வடிவமைக்கப்படவுள்ளது.
    • பருவநிலைக்கு உகந்த நவீன வேளாண்மை, நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள், வாகனப் பராமரிப்பு, கழிவுமேலாண்மை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பிரிவுகளில் வெட்டு விளிம்பு தொழில்நுட்பம் (Cutting Edge Technology) அல்லது முன்மாதிரி தொழிநுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • ஜமியா குழு அல்ட்ராசென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை உருவாக்கியுள்ளார்
    • புது டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கிராபீன் குவாண்டம் புள்ளிகளை பயன்படுத்தி அல்ட்ராசென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை உருவாக்கியுள்ளனர். 27 டிகிரி C முதல் -196 டிகிரி C வரை இந்த தெர்மோமீட்டரால் துல்லியமாக அளவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: May 2019 – Science and Technology News Image

 

  • ஐஐடி மெட்ராஸ் குழு ஒன்பது இந்திய மொழிகளுக்கு எளிதான OCR அமைப்பை உருவாக்கியுள்ளது
    • சென்னை ஐ.ஐ.டி.யின் ஸ்ரீனிவாச சக்கரவர்த்தின் குழு ஒன்பது இந்திய மொழிகளுக்கு ஒரு ஒன்றுபட்ட ஸ்கிரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு பாரதி ஸ்கிரஜப்ட் என்று பெயரிடப்படுள்ளது. பல மொழி ஒளியியல் பாத்திர அங்கிகரிப்பு (OCR) திட்டத்தைப் பயன்படுத்தி ஆவணங்களை வாசிப்பதற்கான ஒரு முறையை இது உருவாக்கியுள்ளது.
    • இந்த குழு ஒரு விரல்-உச்சரிப்பு முறையை உருவாக்கியுள்ளது இதைப் பயன்படுத்தி காது கேளாதோருக்கான ஒரு சைகை மொழியை உருவாக்க இது உதவும். தேவநகரி, பெங்காலி, குர்முகி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: May 2019 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள் (Continuation)

 

  • சர்வதேச ஜாஸ் தினம் ஏப்ரல் 30 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
    • இது 2011 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் அறிவிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும்.
    • இந்நாள் UNESCO நல்லெண்ண தூதரும் ஜாஸ் பியானிஸ்ட்டுமான ஹெர்பி ஹான்காக் என்பவரால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • சீனாவானது தாயூவான் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து தாயின்ஹ II -01 (Tianhai – II -01) என்ற இரண்டு செயற்கைகோள்களை ஏய்தியுள்ளனர்
    • இந்த ஏவுதளத்தை பேஸ் – 25 என்றழைப்பர்
      இந்த செயற்கை கோள்களை சாங்ஜெங் – 4B என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

  • ஏப்.29 அன்று சர்வதேச பௌத்த மாநாடு கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினி நகரில் நடைபெற்றது. இது 2562 வது பௌத்த ஜெயந்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் கௌதம புத்தரின் போதனைகளை பரப்புவதும், சர்வதேச சமூகங்களிடையே அறவழி, சகோதரத்துவம், ஒத்துழைப்பு, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் செய்திகளை பரப்புவதுமாகும்.
    • ‘லும்பினி நேபாளம்: பௌத்தரின் பிறப்பிடம் மற்றும் பௌத்தமதம் மற்றும் உலக சமாதானத்தின் நீரூற்று – Lumbini Nepal: The Birthplace Of Lord Buddha And The Fountain Of Buddhism And World Peace’ என்ற கருப்பொருள்

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Ministry of Defence (MoD) is expecting to raise a Defence Cyber Agency (DCA) by May to tackle non-civilian cyber issues arise from China and Pakistan, including safeguarding critical infrastructure. Rear Admiral Mohit Gupta, Senior Navy officer will be the first head of this agency, headquartered in New Delhi.

 

  • Bharti AXA General Insurance, the first company in the domestic non-life insurance industry has collaborated with web aggregator, Wishfin Insurance to sell 2-wheeler policies via social media messaging platform, WhatsApp.

 

INTERNATIONAL NEWS

  • INS Kolkata and INS Shakti arrived at Busan, South Korea to participate in ADMM-PLUS (ASEAN Defence Ministers’ Meeting).Indian Navy’s 2 warships, INS Kolkata and INS Shakti had gone to Qingdao in China to participate in the International Fleet Review (IFR), which is an international maritime parade organised off the coast of China.
    • It is celebrated to commemorate the 70th anniversary of the founding of the Chinese Navy.

 

  • According to the report from the Stockholm International Peace Research Institute (SIPRI), a think-tank, the world’s military expenditure has risen by 2.6% to reach 82 $ trillion in 2018.
    • In this total share, India, United States, China, Saudi Arabia and France altogether contributed to 60% per cent of the amount, with US and China being the 2 biggest spenders.

 

SCIENCE AND TECHNOLOGY

  • China launched two Tianhui II-01 satellites from Taiyuan Satellite Launch Centre, also known as Base 25. The purpose of the satellite is to perform scientific experiments, land resource and geographic survey, and mapping.
    • The satellites were launched by a Long March 4B carrier rocket also known as Chang Zheng 4B. This was the 303rd successful mission of the Long March series carrier rocket.

 

ECONOMY

  • India’s GDP growth projection for 2019-20 lowered to 7.3 percent by India Ratings and Research, a Fitch Group company, due to below normal monsoon prediction, continued agrarian distress and loss of momentum in industrial output. The earlier projected GDP growth was 7.5 percent.

 

SPORTS

  • Asian Road Para-Cycling Championships 2019 was held in Tashkent, Uzbekistan from April 23 to April 28, 2019, and a total of twenty-eight countries took part. Indian para cyclists won a silver and two bronze medals.

 

APPOINTMENTS

  • On 30th April 2019, Air Marshal Anil Khosla PVSM AVSM VM ADC, Vice Chief of the Air Staff retired after four-decade of career span.While Air Marshal Rakesh Kumar Singh Bhadauria will take over as the Vice Chief of Indian Air Force on May 1.