Today TNPSC Current Affairs March 20 2020

We Shine Daily News

மார்ச் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான சட்டதிருத்த மசோதாவின் படி, தொடக்கப்பள்ளி முதல் தமிழ் வழியில் படித்த விண்ணப்ப தாரர்களுக்கு மட்டுமே ‘தமிழ் வழியில் படித்த மாணவர்கள்’(Persons Studied in Tamil Medium – PSTM) என்ற ஒதுக்கீட்டின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது.
    • 2010ஆம் ஆண்டில், தமிழக அரசானது PSTM விண்ணப்பதாரர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை அறிவித்தது.
    • செய்தி துளிகள்:
      • இந்த மசோதாவானது PSTM மாநிலச் சட்டம், 2010ன் கீழ், பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாட்டில் நியமனம் என்பதைத் திருத்தம் செய்ய முயலுகின்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நிர்பயா வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
    • இறுதித் தண்டனைத் தீர்ப்பிற்கு எதிரான மனு, தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஒரு சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப்படுகின்றது.
    • சீராய்வு மனுக்கள் இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன.
    • செய்தி துளிகள் :
      • மறு ஆய்வு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் இந்த சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப்படும்.
      • சீராய்வு மனுவின் கருத்தாக்கமானது இந்திய அரசியலமைப்பின் 137வது சரத்தினால் ஆதரிக்கப்படுகின்றது.
      • இந்த சரத்தானது 145வது சரத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றமே மறு ஆய்வு செய்ய அனுமதிக்கின்றது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா, 2019 என்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
    • இது இந்தியாவின் மூன்று பல்கலைக் கழகங்களுக்கு மத்தியப் பல்கலைக்கழக அங்கீகாரத்தை வழங்க இருக்கின்றது.
    • 2020ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று மாநிலங்களவையானது மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா,2019குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது.
    • செய்தி துளிகள்:
      • மூன்று பல்கலைக் கழகங்கள் பின்வருமாறு:
      • ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், திருப்பதி
      • ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புது தில்லி மற்றும்
      • ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத், புது தில்லி

 

 

  • 2020ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று வங்கதேசமானது ஜதீர் பிதா” பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த தினத்தைக் கொண்டாடியது.
    • பிரதமர் மோடி காணொளியின் மூலம் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
    • ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார்.
    • செய்தி துளிகள் :
      • இவர் வங்கதேசத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.
      • இவர் வங்கதேசத்தின் முதல் அதிபராகப் பணியாற்றினார்.
      • பின்னர் 1971 மற்றும் 1975க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வங்கதேசத்தின் பிரதமராகப் பணியாற்றினார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் INST (Institute of Nano Science and Technology – நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட ஹீமோஸ்டாட்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
    • விபத்துக்களின் போது விரைவான இரத்த இழப்பைத் தடுப்பதற்காக ஸ்டார்ச் அடிப்படையிலான ‘ஹீமோஸ்டாட்’ ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகப்படியான திரவத்தை உடலிலிருந்து உறிஞ்சி, இரத்தத்தில் இயற்கையான உறைதலுக்கான தேவையான காரணிகளைக் குவிக்கின்றது.
    • செய்தி துளிகள் :
      • ஹீமோஸ்டாட்கள் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளாகும்.

 

 

  • நாவிக் செய்தியிடல் அமைப்பு மற்றும் செய்தி பெறும் அமைப்பு ஆகியவற்றை இஸ்ரோ வடிவமைத்துள்ளதாக விண்வெளித் துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
    • இந்த அமைப்பானது தற்போது இந்திய தேசியக் கடல்சார் தகவல் மையத்தினால் (Indian National Centre for Ocean Information System – INCOIS) பயன்படுத்தப்படுகின்றது.
    • சுனாமி, சூறாவளி, ஆழிப் பேரலைகள் போன்ற சூழ்நிலைகளில் அவசரகால எச்சரிக்கைத் தகவல்களை ஒளிபரப்ப இந்த அமைப்பானது பயன்படுத்தப்படுகின்றது.
    • செய்தி துளிகள் :
      • NAVIC என்பது ஒரு இந்தியச் செயற்கைக்கோள் தொகுப்பாகும்.
      • இந்தியத் துணைக் கண்டத்தில் தொடர் கண்காணிப்பை வழங்குவதே இந்த NAVIC ன் முக்கிய நோக்கமாகும்.

 

 

திருக்குறள்

 

குறள்                                                : 143

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : பிறனில் விழையாமை

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெனிந்தாரில்

தீமை புரிந்துதொழுகு வார்.

விளக்கம்: பாவத்தின் வழி நின்றவர்கள் எல்லாருள்ளும் பிறனுடைய மனைவியை விரும்பி அவன் தலை வாயிலில் நிற்பவரைப் போல அறியாமையுள்ளவர் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 18, 2020 the Defence Acquisition Council (DAC) under the chairmanship of Union Defence Minister Rajnath Singh held a meeting with its Acquisition Wing in New Delhi.
    • During the meet, DAC has approved the procurement of 83 Tejas Mark-1A jets from HAL for the Indian Air Force (IAF), marking a boost to the government’s flagship “Make in India”
    • Related Keys
      • Tejas is a Light Combat Aircraft which has been indigenously-designed by Aircraft Development Agency (ADA) under the Defence Research and Development Organisation (DRDO) .
      • Their aim is to replace ageing MiG-21 fighters of IAF.

 

 

  • The famous Black Pagoda, the Sun temple in Konark in Puri district of Odisha is to be included in the ‘Iconic Sites’ list of 19 monuments, informed Union Culture and Tourism Minister Prahlad Singh Patel. Accordingly, the Sun temple will be developed as an iconic site by the Centre.
    • The Union Minister further said that the Statue of Unity in Gujarat and the Sun temple in Odisha will be included in the said list as the total number of monuments in the list is to be raised from 17 to 19.
    • Related Keys
      • Sun temple in Konark Opened: 1250
      • Sun temple in Konark Architectural style: Kalinga architecture

 

 

INTERNATIONAL NEWS

  • On March 19, 2020 Facebook-owned messaging app WhatsApp launched the “WhatsApp Coronavirus Information Hub” globally, in partnership with WHO (World Health Organization), UNICEF (United Nations Children’s Fund) and UNDP (United Nations Development Programme).
    • WhatsApp also donated $1 million dollars to Poynter Institute’s International Fast-Checking Network (IFCN) in order to avoid fake information about the disease.
    • Related Keys
      • UNICEF Founded: 11 December 1946
      • UNDP Founded: 22 November 1965
      • WHO Founded: 7 April 1948

 

 

APPOINTMENTS

  • Iraqi President BarhamSalih has appointed Adnan al-Zurfi as the country’s new prime minister-designate in the latest bid to resolve a months-long political crisis.
    • Al-Zurfi has 30 days to form his cabinet which he must then put to a vote of confidence in Iraq’s Parliament.
    • Related Keys
      • Iraq Capital: Baghdad
      • Iraq Currency: Iraqi dinar

 

 

BANKING NEWS

  • On March 18, 2020, Reserve Bank of India (RBI) has extended the validity of Authorization to Vakrangee Limited till March 31, 2021 to setup, own and operates the White Label ATMs (WLA) Business in India.
    • In this regard, Renewal of Authorization has been granted to Vakrangee Limited.
    • Related Keys
      • Vakrangee Ltd Established in 1990
      • Headquarters– Mumbai, Maharashtra

 

 

WORDS OF THE DAY

  • Kinderd – one’s family and relations.
    • Similar Words – kin ,connections.
    • Antonyms – unrelated , stranger.

 

  • Languid – having or showing a disinclination for physical exertion or effect.
    • Similar Words- relaxed ,unhurried.
    • Antonyms – energetic ,active.