Today TNPSC Current Affairs March 13 2020

We Shine Daily News

மார்ச் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தற்பொழுது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் ‘சலோ’ செயலியின் உதவியுடன் கைபேசியில் கண்காணிக்க முடியும்.
  • இந்தச் செயலியானது அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் குறித்தத் தகவல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நிறுத்தத்திற்கும் வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த ஐந்து பெருநகரப் போக்குவரத்துக் கழக (Metropolitan Transport Corporation – MTC) பேருந்துகள் குறித்த விவரங்களையும் அளிக்கும்.
  • செய்தி துளிகள்
   • இது அகல்நிலை மற்றும் நிகழ்நேரம் (ஆன்லைன்) ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்கும் திறன் கொண்டது.
   • தற்போது இந்தச் செயலியானது சோதனை முயற்சியாக (பீட்டா) தொடங்கப்பட்டுள்ளது. இது விரைவில் அரசாங்கத்தின் லோக்கேட் மை (LAMB – Locate My Bus App) என்ற செயலியாக தொடங்கப்பட இருக்கின்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • பிரக்யான் மாநாடு – 2020’ என்ற இந்திய இராணுவ சர்வதேச கருத்தரங்கானது தரைவழிப் போர் ஆய்வு மையத்தினால் (CLAWS – Centre for Land Warfare Studies)ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த நிகழ்வானது தேசிய மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களுக்கு தரைவழிப் போரின் சிறப்பியல்புகளை மாற்றுதல் மற்றும் இராணுவத்தின் மீதான அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் விவாதிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குகின்றது.
  • செய்தி துளிகள்
   • தரைவழிப் போர் ஆய்வு மையத்தினால் (CLAWS – Centre for Land Warfare Studies)ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கமானது புது தில்லியில் தொடங்கியது.

 

 

 • QS பாடத் தரவரிசை – 2020ன் படி, வேலூர் தொழில்நுட்ப நிறுவனமானது (Vellore Institute of Technology – VIT) பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத்திற்காக இந்தியாவின் சிறந்த (முன்னணி) தனியார் கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • QS உலகப் பல்கலைக் கழகத் தரவரிசையில் இந்தப் பல்கலைக்கழகமானது உலகின் 450 பல்கலைக் கழகங்களிடையே சிறந்த பல்கலைக் கழகமாக இடம் பெற்றுள்ளது.
  • செய்தி துளிகள்:
   • QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarrelli Symonds – QS) நிறுவனத்தால் வெளியிடப்படும் பல்கலைக்கழக தரவரிசைகளின் ஒரு வருடாந்திர வெளியீடாகும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • கனடாவிலுள்ள, பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெழுகுப் புழுக்களின் வயிற்றிலுள்ள சில கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செறித்து, ஆல்கஹாலாக மாற்றித்தரும் திறனைக் கொண்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்
  • புழுக்களுக்கும், ஆய்வகத்தில் பிளாஸ்டிக்கை கொடுத்து, பெருமளவில் பிளாஸ்டிக் குப்பையை ஆல்கஹாலாக மாற்ற முடியும் என, பிராண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
  • செய்தி துளிகள் :
   • தேனீ வளர்ப்போருக்கு சவாலாக இருக்கும் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ந்தபோது இது தெரியவந்தது. பெருகி வரும் பிளாஸ்டிக் பொருளை என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு வருங்கால மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலகெங்கிலும் ரோட்டராக்டர்கள் வழங்கும் சேவைகளை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று உலக ரோட்டராக்ட் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ரோட்டராக்ட் ரோட்டரி சர்வதேச இளைஞர் திட்டமாக 1968 இல் அமெரிக்காவின் வட கரோலினாவில் தொடங்கப்பட்டது.

 

 

திருக்குறள்

 

குறள்                             : 136

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்               : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : ஒழுக்கமுடைமை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

விளக்கம்:  ஒழுக்கம் தவறுவதால் தமக்குக் குற்றம் உண்டாவதை உணர்ந்து, அறிவுடையோர் அவ்வொழுக்கத்திலிருந்து தவறமாட்டார்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On March 11, India’s largest lender State Bank of India decided to waive maintenance of Average Monthly Balance (AMB) for all Savings Bank Accounts. “This initiative will further boost the efforts to promote financial inclusion in the country”
  • The charges on maintaining AMB are now waived off on all 51 crore SBI savings bank accounts.
  • Related Keys
   • State Bank of India Headquarters: Mumbai
   • State Bank of India SBI is ranked as 236th in the Fortune Global 500

 

 

 • On March 12, 2020, Global Animal Protection Index 2020 was released by World Animal Protection, an international animal welfare charity. India was ranked second in the index.
  • The Animal Protection Index ranks countries from A to G. India was ranked along with Spain, Mexico, France and New Zealand.
  • Related Keys
   • The index highlighted the works that are required to be done in India to include dairy animals under protection.

 

 

 • Parliament passed the Mineral Laws (Amendment) Bill, 2020, on 12 March. The Bill will replace the ordinance passed for the amendment of the Mines & Mineral (Development and Regulation) Act 1957 and the Coal Mines (Special Provisions) Act, 2015.
  • The Bill was already passed by Lok Sabha on 6 March 2020. The Bill was introduced by the Union Minister of Coal & Mines Sh. Pralhad Joshi.

 

 

INTERNATIONAL NEWS

 • On March 11, 2020 the World Economic Forum (WEF) announced its new list of 115 Young Global Leaders (YGL), where 5 Indians Byju Raveendran, Gaurav Gupta, Swapan Mehra, Vinati Mutreja & Tara Singh Vachani are named in the list.
  • WEF stated that the change makers are using their power of under 40’s to change the world, from reforming health systems to investigating corruption in 52 countries.
  • Related Keys
   • World Economic Forum Founded: January 1971
   • World Economic Forum Headquarters: Cologny, Switzerland.

 

 

APPOINTMENTS

 • Indian Police Service (IPS) officer of Haryana cadre Surjit Singh Deswal took over the additional charge of Director General (DG) of Border Security Force (BSF). Deswal, a 1984-batch IPS officer, is currently the Director-General of Indo-Tibet Border Police.
  • He has succeeded Director-General Vivek Johri, who has been appointed Director-General of Madhya Pradesh Police.
  • Related Keys
   • Indian police service Founded: 1948
   • Indian police service Cadre Controlling Authority – Ministry of Home Affairs, Government of India.

 

 

WORDS OF THE DAY

 • Gusto – enjoyment and enthusiasm in doing something.
  • Similar Words – Zest, vigor.
  • Antonyms – apathy , distaste.

 

 • Galore – in abundance.
  • Similar Words – a plenty, excess.
  • Antonyms – Shortage , Few.

 


Call Us