Today TNPSC Current Affairs June 25 2019

We Shine Daily News

ஜூன்25

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கர்நாடக முதலமைச்சர் H. D குமாரசாமி, அண்மையில் 118 வலைத்தளங்களைத் தொடங்கிவைத்தார். அவற்றின் மூலம், கட்டட வரைவுப் படங்களுக்கான ஒப்புதல்கள், நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் பிற தொடர்புடைய அனுமதிகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெற முடியும். இதன்மூலம், இடைத்தரகர்கள் மற்றும் தாமதங்களை மக்கள் முற்றாகத் தவிர்க்க இயலும்.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களில் (Other Backward Classes) உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற சிக்கலை ஆராய்ந்திடுவதற்காக அமைக்கப்ட்ட குழுவின் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு, அதாவது 31 ஜீலை 2019 வரை, நீட்டிப்பு செய்வதற்கான தனது பின்னேற்பு ஓப்புதலை (ex- post facto approval) மத்திய அமைச்சரவை வழங்கியள்ளது.
    • இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், 2017 அக்டோபர் 2 அன்று, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 340 இன் கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் காலம், 6வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
    • மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்குள்ளாக உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற சிக்கல் குறித்த விரிவான அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்திட உதவும். ஓய்வுபெற்ற நீதிபதி பு. ரோகினி தலைமையில் இந்தக் குழு செயல்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (FSDC- Financial Stability and Development Council) 20- வது சந்திப்பானது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
    • 2010 ஆம் ஆண்டில் FSDC உருவாக்கப்பட்து
    • நிதியியல் நிலைப்புத் தன்மையைப் பராமரித்து, அவற்றை வலுப்படுத்துல் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கிடையே அதன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய இணையமைச்சர் சூரிய/ காற்றாலைத் துறைக்கான பிரச்சனைக்குத் தீர்வு காணும் குழுவினை (Dispute Resolution Committee- DRC) அமைப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    • இது காற்றாலை/ மின் ஆற்றல் உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய சூரிய ஒளி ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India- SECI) அல்லது தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியோர்களுகிடையே ஒப்பந்த உடன்படிக்கைகளுக்கு அப்பால் ஏற்படும் எந்தவொரு எதிர்பாராத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • மக்களின் பரிந்துரைகள் மற்றும் ஈடுபாட்டுடன் மத்தியப் பிரதேச அரசு “தண்ணீரைச் சேமித்தல்” பிரச்சாரத்தை ((“Save Water” campaign) நடத்தவுள்ளது.
    • இந்த நோக்கத்திற்காக மாநில அளவிலான “ நீர் செல்” அமைக்கப்பட்டுள்ளது.
    • முதல்வர் கமல்நாத் கூறுகையில், நீர் செல் தண்ணீரை சேமித்து அதன் அளவான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு திட்டம் என்று கூறியுள்ளார்

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தொடங்க மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. தொழிற்சாலையின் இந்த முன்னணி திட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கு 30மூ இடஒதுக்கீடு வழங்கப்படும். புpரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் வரிசையில் இந்தத் திட்டம் செயல்படுத்தபடும்.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • UNICEF அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ணத் தூதராக இருந்து வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு, வரும் டிச. 3 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், டேனி கே மனிதாபிமான விருது (Danny Kaye Humanitarian Award) வழங்கப்படவுள்ளது. சமுதாயம் சார்ந்த பங்களிப்பாளராகவும், குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுப்பவராகவும் பிரியங்கா அறியப்படுகிறார்.
    • ஐக்கிய நாடுகளின் சர்வதேச Girl Up பரப்புரையின் ஒருபகுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • UNICEF ஐன் முதல் நல்லெண்ண தூதராக இருந்த நடிகர் – கொடையாளி டேனி கேயின் பெயரால், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துதல் மற்றும் அவற்றிக்கு ஆதரவளித்தல் தொடர்பாக இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC- International Olympic Committee) நீக்கியுள்ளது.
    • சர்வதேசப் போட்டிகளில் தகுதி பெறும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிப்பதாக ஒரு எழுதப்பட்ட உறுதிமொழியை இந்திய அரசு IOC- யிடம் வழங்கியது.
    • பாகிஸ்தான் மற்றும் கொசாவா உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் IOC விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவிருக்கின்றனர்

 

TNPSC Current Affairs: June 2019 – Sports News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Government of Madhya Pradesh will run “Save Water” campaign with the suggestions and involvement of common people. A state level “Water Cell” also been constituted.
    • The Water Cell will prepare a strategy to store water and ensure its modest use said CM Kamal Nath. Now, every work to save water and increase expenses on it will be done with the suggestion and involvement of the people.

 

  • During 2018-19 The foodgrains production in the country is estimated at 283.37 million tonnes. Compared to last three years this is 17.63 million tonnes higher than the average production.
    • The Agriculture Ministry has reported that the center is implementing for several Crops Development Schemes and Programs in the state.

 

  • Viral Acharya Reserve Bank of India (RBI) Deputy Governor told that he has quit his role, six months before the end of his tenure.

 

INTERNATIONAL NEWS

  • The UAE has become the first country in the Gulf to launch ‘goAML’, a new anti money laundering reporting platform developed by the United Nations Office on Drugs and Crime to curb organised crimes.

 

APPOINTMENTS

  • Candidate Mohamed Ould Ghazouani is -backed by Mauritania’s government as he won the presidential election. He is declared as a winner with 52% of the vote by the electoral commission.
    • His nearest rival, anti-slavery campaigner Biram Dah Abeid, came second with 18.58%.

 

IMPORTANT DAYS

  • 23rd June is being celebrated as United Nations Public Service Day is around the world. This day celebrates the value and virtue of public service to the community, it also highlights the contributions of  the public service in the development process;

BOOKS

  • On Friday in the occasion of International Yoga Day, yoga guru Baba Ramdev announced that his first official autobiography, titled “My Life, My Mission” is being prepared and will be released in August.
    • The volume, co-authored by senior journalist Uday Mahurkar.