Today TNPSC Current Affairs June 18 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்18

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • காணாமல் போன செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க உதவும் “DIGICOP  version2” என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையின் DIGICOP செயலியில் CCTNS என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களிருக்கும் இடத்திலிருந்தே காவல்துறையில் புகாரளிக்க இந்தப் புதிய சேவை உதவுகிறது

 

தேசிய நிகழ்வுகள்

 

 • 2019 ஆம் ஆண்டு ஜுன் 17 முதல் ஜுன் 21 வரை கிம்பர்லி செயல்முறையின் கூட்டத் தொடர் சந்திப்பானது இந்தியாவினால் மும்பையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • கிம்பர்லி செயல்முறை என்பது ஒழுங்கற்ற வைரங்களின் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு சர்வதேச சான்றளிப்புத் திட்டமாகும். இது பிரச்சனையை ஏற்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டும் வைரங்களின் வர்த்தகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (KPCS – Kimberley Process  Certification Scheme) தலைவராக இந்தியா உள்ளது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • நவம்பர் 30 முதல் டிசம்பர் 8 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மெக்ஸிகோவில் நடைபெறும் 33-ஆவது குவாதலஜாரா சர்வதேச புத்தகக்கண்காட்சியில் இந்தியா, கௌரவ விருந்தினராக (Guest of Honour) நியமிக்கப்பட்டு;ள்ளது. ஸ்பானிய மொழி பேசும் உலகின், மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாக இந்தக் கண்காட்சி இருக்கும்.

 

 • நிலச் சீரழிவு மற்றும் பாலைவனமாக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண 2019 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கான மாநாட்டின் (United Nations Convention to Combat Desertification – UNCCD) 14வது அமர்வை (COP- 14) இந்தியா முதன் முறையாக நடத்தவுள்ளது

 

 • 2021 ஆம் ஆண்டிலிருந்து தீங்கு விளைவிக்கும் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்கள் தடை செய்யப்படும் எனக் கனடிய பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டோ அண்மையில் அறிவித்துள்ளார். பெருங்கடலில் கலக்கும் கழிவுகளின் அளவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெருங்கடல்களை நிரப்பியிருக்கும் நெகிழிப்பைகள், உறிஞ்சுக் குழல்கள் மற்றும் வெட்டுக்கருவிகளை நீக்குவதற்கான ஓர் உலகளாவிய சவாலாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
  • கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கியூபெக்கில் நடந்த 2018 G7 உச்சிமாநாட்டில் பெருங்கடல்களில் ஏற்பட்டுள்ள மாசுக்கு எதிரான ஒரு புதிய சாசனத்தில் கையெழுத்திட்டன.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • கேரி உட்லேண்ட் 119 வது US ஓபனை வென்றார். இரண்டு முறை நடப்பு சாம்பியனான ப்ரூக் கோய்ப்காவை தோற்கடித்து அவரது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.

 

நியமனங்கள்

 

 • பாக்கிஸ்தான், லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்தை இடை- சேவைகள் புலனாய்வு துறையின் (ISI) இயக்குநராக நியமித்துள்ளது.
  • இதற்கு முன்பு அவர் ISI யில் எதிர் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 • மத்தியப் பிரதேச மாநிலத்தின் பேதுல் மாவட்டத்தில் உள்ள பாஞ்சா கிராமம், சூரிய சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமமாக மாறியுள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள 75 வீட்டினரும், தங்களது சமையல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக சூரிய அடுப்பையே சார்ந்துள்ளனர். விறகு அடுப்புகளையோ அல்லது LPG எரிவாயு உருளை அடுப்புகளையோ அவர்கள் பயன்படுத்துவதில்லை.
  • மும்பை ஐஐடியைச் சேர்ந்த குழுவினர், ஒரு தனித்துவமான சூரிய ஆற்றலில் இயங்கும் அடுப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் காரணமாக, அக்கிராமத்தின் மக்கள் இப்போது விறகு தேவைக்காக மரங்களை வெட்டுவதை நிறுத்தியுள்ளனர்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 15 அன்று உலக மூத்தோர் கொடுமை விழிப்புணர்வுத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • மூத்த குடிமக்கள் மீதான கொடுமைகள் மற்றும் அவர்களைப் பாதிப்படையச் செய்தல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மூத்தோர் கொடுமைகளைத் தடுத்தலுக்கான சர்வதேச அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐ.நா சபையினால் இத்தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

 • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 16 அன்று வெளிநாட்டிலிருந்து குடும்பத்திற்கு பணத்தை அனுப்புதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினத்தின் நோக்கம் இந்தப் பங்களிப்புகள் மில்லியன் குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தப் பிராந்தியங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Punjab Minister Sukhbinder Singh Sarkaria met a team of experts from Israel in Chandigarh to prepare a comprehensive water management master plan for the state. The experts will submit their report of recommendations within 18 months.
  • Earlier, the Israeli team visited various parts of the state to assess the present situation and the challenges in the water sector in the State.

 

 • Assam Transport Minister Chandra Mohan Patowary launched the State Transport Corporation’s ‘Chalo’ app for Guwahati. The app will help commuters to know about the live arrival time of their bus so they can plan their travel accordingly. People can also track the live GPS position of their bus on a map.
  • It will also ensure safe travel with features such as Emergency SOS.

 

INTERNATIONAL NEWS

 • After nearly 16 years of exploring the cosmos in infrared light, NASA’s Spitzer Space Telescope will be switched off permanently on Jan. 30, 2020.
  • Spitzer is a small but transformational observatory. It captures infrared light, which is often emitted by “warm” objects that aren’t quite hot enough to radiate visible light.

 

SPORTS

 

 • Indian skipper Virat Kohli became the fastest batsman to reach the 11,000 run mark in the ODI cricket. He achieved the feat in the match between India and Pakistan in the ICC Men’s Cricket World Cup. The Indian skipper has just taken 230 ODIs to complete 11,000 runs.
  • Kohli needed 57 runs before this match to reach 11000 run mark in ODI cricket.

 

ECONOMY

 • Commerce Ministry of India made a study the trade war between the US and China offers an opportunity to India for boosting exports of as many 350 products such as chemicals and granite to these countries.
  • The ongoing trade war between the US and China an opportunity to India for boosting exports around 350 products such as chemicals and granite to these countries.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube