Today TNPSC Current Affairs June 14 2019

We Shine Daily News

ஜூன்14

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய அரசியலமைப்பின் 356 (4) என்ற இந்திய அரசியலமைப்பின் கீழ், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஜீலை 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
    • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த முடிவை மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்திய ரயில்வே நிலையம் மேம்பாட்டுக் கழகம் (IRSDC) இந்தியாவில் ரயில்வே நிலையம் மேம்பாட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக பிரெஞ்சு தேசிய இரயில்வே(SNCF) & AFD என்ற பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பு மன்றம் (International Association of Athletics Federation) “உலகத் தடகளம்” என்று தனது பெயரைத் தானே மாற்றிக் கொண்டுள்ளது. இது தனது பெயர் மாற்றத்தினைப் பிரதிபலிப்பதற்காக ஒரு புதியச் சின்னத்தை வெளியிட்டுள்ளது.
    • (World Athletics)
    • இந்தப் புதிய சின்னத்தில் “World” என்பதில் “W” ஆனது போட்டியில் வெற்றி பெற்ற பின்பு வீரர் தனது கையை உயர்த்துவதையும் “Athletics” என்பதில் “A” ஆனது தடகள வீரரின் கவனத்தையும் குறிக்கின்றது. “W” மற்றும் “A” ஆகியவற்றின் மேல் வில் போன்ற ஒரு அமைப்பு தடகள சமூகம் ஒன்றிணைந்து வருவதையும் குறிக்கின்றது

 

  • 2019 ஆம் ஆண்டின் ITTF உலக ஹாங்காங் ஓபன் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் என அனைத்து 4 தங்கப்பதக்கங்களையும் சீனா வென்றுள்ளது.
    • இது சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ( ITTF – International Table Tennis Federation) கீழ் ஹாங்காங் டேபிள் டென்னிஸ் மன்றத்தினால் நடத்தப்படுகின்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவானது விண்வெளிப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பை (DSRA – Defence Space Research Agency) அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • DSRA ஆனது விண்வெளிப் போர் சார்ந்த ஆயுத அமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும்.
    • இது விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பிற்கு (DSA – Defence Space Agency)பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உதவியை அளிக்கவிருக்கின்றது.
    • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட செயற்கைக் கோள் எதிர்ப்புப் பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியது என்பது குறிப்பிடதக்கது.

 

  • அமெரிக்காவானது நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் தேசிய மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு – II (NASAMS – II)என்பதினை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது
    • இது வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தேசியத் தலைநகர்ப் பகுதியைப் பாதுகாப்பதற்கான மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும்

 

விருதுகள்

 

  • இந்தியாவில் முன்னிலையில் உள்ள சமகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலக்கியத்தில் அவருடைய தலைசிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இவர் இதற்கு முன்பு “ நிழல் வரிகள்” (1998) என்ற தன்னுடைய நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்
    • கண்ணாடி மாளிகை, பசி அலை, இபிஸ் என்ற மூன்று தொகுதியான “ஸீ ஆப் பாப்பீஸ்” ஆகியவை இவருடைய இதரப் படைப்புகளாகும்

 

நியமனங்கள்

 

  • மூத்த இந்தியக் காவல் துறை அதிகாரியான VSK கமுதி என்பவர் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (BPR&D – Bureau of Police Research and Development) பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த அமைப்பு 1970 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது நாட்டில் காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்குப் பரிந்துரைகளை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்கின்றது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஜூன் 13 அன்று உலக அளவில் சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) அனுசரிக்கப்படுகின்றது.
    • இது வெளிறல் குறித்த தொன்மத்தை அகற்றுவதற்கும், அது குறித்த களங்கத்தை குறைப்பதற்கும், சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வெளிறலுடன் வாழும் மக்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்கும் அனுசரிக்கப்படுகின்றது.
    • இது வெளிறலுடன் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து ஊக்கப்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “இன்னும் உறுதியுடன் எழுந்து நில்” என்பதாகும்.
    • Theme : Still Standing Strong

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In Uttar Pradesh, the state government has hiked old-age pension in the age group 60 to 79 years by rupees 100 monthly.
    • Now the old-age pensioners would receive 500 rupees per month from the existing 400 rupees.

 

  • Mela Kheer Bhawani festival was celebrated in Jammu & Kashmir on Zeasht Ashtami.
    • Hundreds of Kashmiri Pandit devotees prayed at the famous Ragnya Devi temple here in Jammu and Kashmir’s Ganderbal district.

 

  • Bihar Cabinet-led by Chief Minister Nitish Kumar has approved a proposal to punish sons and daughters who abandon their elderly parents with a jail term.
    • The proposal of Bihar social welfare department has provisions for punishments which could go up to imprisonment if wards do not look after their parents properly in their old ages.

 

INTERNATIONAL NEWS

  • The 16th Asia media summit kicked-off in Cambodia. The conference is deliberating on many issues pertaining to the media and broadcasting industry.
    • The Ministers from different countries presented the digital trends in the broadcasting sector in their respective countries.

 

  • Japan will invest Rs 13,000 crore in several ongoing as well as new infrastructure projects in the northeast region.
    • Some of the important projects in which Japan will collaborate include the Guwahati water supply project, Guwahati sewage project, the northeast road network connectivity improvement project spread over Assam and Meghalaya and northeast network connectivity improvement project in Meghalaya.

 

ECONOMY

  • Max Life Insurance company one of the famous insurance companies in India announced the launch of a unique proprietary tool, ‘My Protection Quotient’ (MyPQ) its commitment to ensuring financial protection in the country.