Today TNPSC Current Affairs June 13 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்13

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக அறக்கட்டளை மற்றும் மத்திய கிடங்குக் கழகம் ஆகியவை நேரடித் துறைமுக நுழைவு (Direct Port Entry) வசதிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • DPE ஆனது தொழிற்சாலைகளிலிருந்துச் சரக்குக் கொள்கலன் முனையத்திற்கு சரக்குக் கொள்கலனின் நேரடி இயக்கத்தை ஏற்படுத்தும். இது கொள்கலன் சரக்கு நிலையத்தில் எந்தவொரு இடைநிலை கையாளுதலும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும்.
  • தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகம் வ.உ.சி துறைமுக அறக்கட்டளையாகும் இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது.

 

தேசிய நிகழ்வுகள்

 

 • 2020 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்சான் குழு (SSL – 2020 – Swachh Survekshan League) வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியாஸ் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியப் பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் காலாண்டுத் தூய்மைக் கணக்கெடுப்பிற்கான ஒரு ஆய்வாகும்.
  • நகரங்களின் தூய்மை நிலையைத் தொடர்ந்து கண்காணித்தல் என்பது SSL குழுவின் ஒரு முன்னுரிமைப் பணியாக விளங்கும்.

 

 • மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள இந்தியத் தொல்லியல் துறை ஆய்வகம் சவுக்கண்டி ஸ்தூபியைத் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக” அறிவித்துள்ளது.
  • இது உத்தரப் பிரதேசத்தின் சாரநாத்தில் அமைந்துள்ளது.
  • இது புத்தருடைய எச்சங்களின் நினைவுச் சின்னமாக விளங்குகின்றது. இது சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இது அசலாக கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

 

 • மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் பணித்துறை புள்ளியியல் மீதான ஒரு “தேசியத் தகவல் கிடங்கை” அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது.
  • இது பெருநிலைப் பொருளியல் திரள்களின் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக பெருந்தரவுப் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தவிருக்கின்றது.
  • மேலும் இது தேசியப் புள்ளியியல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவதற்காக ஒரு சட்டமன்றக் கட்டமைப்பையும் ஏற்படுத்தவிருக்கின்றது.

 

 • 2024 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.
  • சமீபத்தில், ஜல் சக்தி அமைச்சகத்தால் “நல் சி ஜல்” “Nal se Jal” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது 2024 ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • டாம் டாம் என்ற நிறுவனம் ‘Traffic Index – 2108’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், நெரிசல் அளவு 65 சதவீதத்துடன் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளது. புது தில்லி 4 ஆவது (58%) இடத்தை பிடித்துள்ளது.
  • கொலம்பியா தலைநகர் போகோடா (63%) 2 ஆவது
  • இடத்திலும், பெரு தலைநகர் லிமா (58%) 3 ஆவது
  • இடத்திலும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ (56%) 5 ஆவது இடத்திலும் உள்ளது.

 

விருதுகள்

 

 • அமெரிக்க எழுத்தாளரான தயாரி ஜோன்ஸ்“An American Marriage” என்னும் தனது புதினத்துக்காக நடப்பாண்டின் புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசை வென்றுள்ளார்.
  • £30
  • 000 ரொக்கப் பரிசும், ‘பெஸ்ஸி’ என்னும் ஒரு வெண்கல சிலையும் வழங்கப்பட்டது. இந்தப் பரிசு, பெண்களின் படைப்பாற்றல்களை கொண்டாடும் மிகப்பெரிய சர்வதேச கொண்டாட்டங்களுள் ஒன்றாகும்.

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ஏ.டி.எம். கட்டணங்கள் மற்றும் மற்ற கட்டணங்கள் முழுவதையும் ஆய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) தலைமை நிர்வாகியான வி.கே. கண்ணன் தலைமையில் ஒரு உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • Cyclone VAYU over East-Central Arabian sea has intensified into a Very Severe Cyclonic Storm.
  • It currently lays centred about 420 kilometres west-northwest of Goa, 320 kilometres south-southwest of Mumbai and 420 kilometres south of Veraval in Gujarat.

 

 • Prime Minister Narendra Modi’s is on a two-day visit to Kyrgyzstan for SCO Summit at Bishkek. The visit is expected to further boost the bilateral ties with Kyrgyzstan.
  • The focus will remain on the sectors like pharmaceuticals, textiles, manufacturing and machinery among others.

 

ECONOMY

 • Amazon clinched the world’s most valuable brand in cloud computing, consumer tech and movie production. It is founded by the world’s richest man Jeff Bezos.
  • According to the 2019 BrandZ Top 100 Most Valuable Global Brands rankings, Amazon online retailer set its brand value quintuple in the past five years to reach $315.5billion.

 

APPOINTMENTS

 • Union Minister of Social Justice and Empowerment Thawarchand Gehlot has been appointed as the leader of Rajya Sabha. He will replace senior BJP leader Arun Jaitley who opted out of the government citing health reasons.
  • Gehlot is a Rajya Sabha member representing Madhya Pradesh.

 

AWARDS

 • The Jnanpith award for the year 2018 will be given to the noted English writer Amitav Ghosh. Former Governor Gopalkrishna Gandhi will present the award to him at a function in New Delhi.
  • The award is given for outstanding contribution in literature.

 

IMPORTANT DAYS

 • The International Albinism Awareness Day is observed on 13th june world wide.
  • The Theme of Albinism Awareness Day 2019 – “Still Standing Strong”

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube