Today TNPSC Current Affairs January 20 2020

We Shine Daily News

ஜனவரி  20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பீகார் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதரவாக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
    • பீகார் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மையக்கரு – நீர்-வாழ்க்கை-பசுமை’
    • தேர்வுத் துளிகள்:
      • பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முதல்வர் நிதிஷ் குமார் கைகளை கோர்த்து மனித சங்கிலி பேரணியை தொடக்கி வைத்தனர்.
      • மனித சங்கிலி பேரணியில் தண்ணீர் மனிதன் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் கலந்து கொண்டார்
      • பீகார் மாநில ஆளுநர் பாகு சௌகான்

 

 

  • குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த கேரள அரசிடம் அந்த மாநில ஆளுநர் அறிக்கை கோரியுள்ளார்.
    • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா அரசு முதன்முதலாக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
    • மாநில ஆளுநரிடம் விவாதிக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியது. அவை அலுவல் விதிகள் 34(2)-ன் படி சட்ட விரோதம் என்று ஆளுநர் அறிக்கை சமர்பித்துள்ளார்.
    • தேர்வுத் துளிகள்:
      • பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, கடந்த 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்க சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டது
      • அவை அலுவல் விதி 34(2): “மத்திய–மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் விவகாரங்களில் முடிவெடுக்கும்போது முதலில் ஆளுநரிடம் மாநில அரசு தெரிவிக்க வேண்டும்.
      • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

 

  • இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
    • இலங்கை பாதுகாப்புத்துறைக்கு இந்தியா ரூ.350 கோடி அளிக்கும் என அஜித் தோவல் உறுதியளித்துள்ளார்.
    • இது தவிர உளவுத் தகவல்களை சேகரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு இந்தியா அளிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
    • தேர்வுத் துளிகள்:
      • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டி தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருந்தார். அதற்கான செலவு கிட்டத்தட்ட 350 மில்லியன் டாலர்.
      • இந்தியா-இலங்கை முக்கிய ஒப்பந்தங்கள்:
      • நேரு–ஜான் கொடலாவாலா உடன்படிக்கை 1954
      • சாஸ்திரி–சிறிமாவோ உடன்படிக்கை 1964
      • ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்படிக்கை 1987

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • 5000 ரன்களை துரிதமாக கடந்த கேப்டன்கள் – விராட் கோலி புதிய உலக சாதனை படைத்தார்.
    • இந்திய முன்னாள் கேப்டன் தோனி 127 ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
    • தற்போது விராட் கோலி 82 இன்னிங்ஸில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
    • தேர்வுத் துளிகள்:
      • ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
      • இதே போட்டியில் ரோஹித் சர்மா ஒருநாள் ஆட்டத்தில் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஜனவரி 20 – 27 : சாலை பாதுகாப்பு வாரம்”
    • நோக்கம்: பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
    • தேர்வுத் துளிகள்
      • உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின் படி 2016-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்களை 50% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
      • தற்பொழுது 31-வது சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 83

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: விருந்தோம்பல்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

விளக்கம்: நாள்தோறும் தன்னிடம் வருகின்ற விருந்தினரைப் பேணி உபசரிப்பவனின் வாழ்க்கை, வறுமையால் வருந்திக் கெடுவது இல்லை.                 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • On January 19, 2020, the Group of Ministers headed by Home Minister Amit Shah finalized its report to change the legal framework that will help prevent sexual harassment of women at work places.
    • The Group of Ministers was constituted in October 2018 after the “Me Too” The group was reconstituted under the Home Minster in July 2019
    • Related News
      • Vishaka guidelines issued by Supreme Court in 1997. It is be noted that the Sexual Harassment of Women and Workplace, 2013 was constituted based on Vishaka guidelines.
      • According to NCRB (National Crime Records Bureau), in 2017 and 2018, the number of sexual harassments of women at work premises were 479 and 401 .

 

 

  • Commerce Minister Piyush Goyal will lead the Indian delegation to the 50th World Economic Forum at Davos from January 20 to 24. 53 heads of state or government from 117 countries are participating in the event.
    • The theme of this year’s WEF is ‘Stakeholders for a Cohesive and Sustainable World’.
    • Related News
      • World Economic Forum Founded: January 1971
      • World Economic Forum Headquarters: Switzerland.

 

 

  • The National Mission of Clean Ganga (NMCG) has taken up the initiative under Namami Gange Project to conserve wetlands of the Ganges basin. The primary aim of Namami Gange project is to rejuvenate the river by increasing its flow. It also includes recharging aquifers and conservation of wetlands.
    • Related News
      • Ramsar Convention is an intergovernmental treaty that was established in 1971 by
      • There are 27 Ramsar sites in India.

 

 

INTERNATIONAL NEWS

  • On January 19, 2020, Indian National Security Advisor (NSA) Ajit Doval met Sri Lankan President Gotbaya Rajpaksa. He discussed setting up of maritime research coordination centre in the country.
    • The establishment of research centre is important to learn maritime activities in the Indian Ocean Region
    • Related News
      • In spite of two maritime agreements that were signed in 1974 and 1976.

 

 

SPORTS

  • A dominant Vinesh Phogat won her first gold medal of the 2020 season at the Rome Ranking Series event after teen sensation Anshu Malik settled for a silver in 57kg competition, in Rome.
    • Vinesh downed two tough Chinese rivals on her way to the 53kg gold medal bout in which she overpowered Ecuador’s Luisa Elizabeth Valverde 4-0.

 

 

WORDS OF THE DAY

  • Nadir – the lowest point of anything.
    • Similar Words- the depths , zero.
    • Antonyms – zenith , peak .

 

  • Nascent – just coming into existence and beginning to display signs of future potential.
    • Similar Words- budding , developing , growing
    • Antonyms – mature, ripe.