Today TNPSC Current Affairs January 07 2020

We Shine Daily News

ஜனவரி  07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘காவலன்’ செயலி பெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஆளுநர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    • செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும்.
    • செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.
    • செய்தி துளிகள் :
      • இதை ஜீன் 4, 2018 அன்று தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
      • “ரோஷினி மொபைல் செயலி”(Roshni Mobile App) : கண் பார்வையற்றோர் ரூபாய் நோட்டுகளை துல்லியமாக பகுத்தறிவதற்காக “ரோஷினி” என்று பெயரிட்ட மொபைல் செயலியை ஐ.ஐ.டி. ரோபார் (Indian Institute of Technology (IIT), Ropar) உருவாக்கியுள்ளது.

 

 

  • திருமண உதவித் திட்டங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பில் பாலின விகிதம் 917 என்ற அளவிலிருந்து 943 ஆக அதிகரித்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தொட்டில் குழந்தைத் திட்டம் என்பது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய சமூகச் சீர்த்திருத்தவாதியான சாவித்ரி பாய் பூலேவின் பிறந்த நாளான ஜனவரி 3 ஆம் தேதியில் மகாராஷ்டிரா மாநில அரசானது மாநிலம் முழுவதும் பெண்களுக்கான இணைய வழிப் பாதுகாப்பு குறித்த ஒரு முன்னெடுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
    • இந்த முன்னெடுப்பானது சமூக விரோத சக்திகளால் இணையம் பல்வேறு வகையான குற்றங்களைச் செய்வதற்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க உள்ளது.
    • சாவித்ரி பாய் பூலே என்பவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆவார்.

 

 

  • மகாராஷ்டிரா, கேரளா, உத்திரப் பிரதேசம், நாகாலாந்து அசாம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய எட்டு மாநிலங்கள் விவசாய ஏற்றுமதியை உயர்த்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை முடிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (Agricultural and Processed Food Products Export Development Authority – APEDA) அறிவித்துள்ளது.
    • இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புத் தொகுதிகளாவன – ஜலந்தர் (உருளைக்கிழங்கு). சாங்லி (திராட்சை), சேலம் (கோழி), தேனி (வாழைப்பழம்), சித்தூர் (மாம்பழம்) ஆகியவையாகும்.
    • செய்தி துளிகள் :
      • வேளாண் ஏற்றுமதிக் கொள்கையானது 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
      • இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமானது 2022 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதியை 30 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்குவது என்பதாகும்.
      • 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும்2மூ மட்டுமே இருந்தது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • வியட்நாமிய தலைநகரமான ஹனோய் நகரமானது யுனெஸ்கோ அமைப்பின் படைப்பு நகர வலையமைப்பில் (UNESCO Creative Cities Network – UCCN) இணைகின்றது என்று முறையாக அறிவிக்கும் ஒரு விழாவை ஹனோய் அரசாங்கம் சமீபத்தில் நடத்தியது.
    • UCCN ஆனது 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
    • இந்த வலையமைப்பானது ஏழு படைப்புத் துறைகளை உள்ளடக்கியுள்ளது. அவையாவன கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகள், ஊடகக் கலைகள், திரைப்படம், வடிவமைப்பு, அறுசுவை உணவியல், இலக்கியம் மற்றும் இசை போன்றவை.
    • செய்தி துளிகள் :
      • UCCN; ஐந்து இந்திய நகரங்கள் உள்ளன. அவை :
      • ஜெய்ப்பூர் – கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் (2015)
      • வாரணாசி – இசை (2015)
      • சென்னை – இசை (2017)
      • மும்பை – திரைப்படம் (2019)
      • ஹைதராபாத் – அறுசுவை உணவியல் (2019)

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நேத்ரா திட்டத்தின் கீழ் ஒரு ஒளியியல் தொலைநோக்கியை நிறுவுவதற்காக இந்திய வானியற்பியல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • நேத்ரா திட்டமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் இஸ்ரோவால் தொடங்கப்பட்டது.
    • இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ அமைப்பானது கண்காணிப்பு வசதிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அவை செயற்கைக் கோள்களுக்கு அவற்றின் சுற்றுப்பாதையில் உள்ள மாசுக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய உதவும்.
    • செய்தி துளிகள் :
      • இந்தியா 15 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், 13 தொலையுணர்வு திறன் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் 8 வழிகாட்டும் செயற்கைக் கோள்களை இயக்குகின்றது.
      • இஸ்ரோவைத் தவிர, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (Defence Research Development Organisation – DRDO) நேத்ரா திட்டத்தினை (போக்குவரத்துப் பகுப்பாய்வு வலையமைப்பு இயக்குகின்றது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 70

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: மக்கட்பேறு

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்நோற்றான் கொல்எனும் சொல்.

விளக்கம்:  தன்னைக் கல்வியுடையவனாகிய தந்தைக்கு மகன் செய்யும் பதில் உதவி என்னவென்றால், இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடத்தலாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Madhya Pradesh govt. has decided to start MP Mukhyamantri Karamchari Swasthya Bima Yojana 2020. Around 12 lakh 55 thousand staff personnels and functionaries would be benefited from MP Chief Minister Employees Health Insurance Scheme.
    • This decision is taken in the state cabinet meeting held on 4 January 2020 led by CM Kamal Nath.
    • Related Keys
      • Madhya Pradesh Capital: Bhopal
      • Madhya Pradesh Chief minister: Kamal Nath

 

 

  • UJALA and Street Lighting National Programme (SLNP) of the central government completed five successful years of illuminating the country today. Over 13 crore LED bulbs have been distributed across the country through the UJALA initiative.
    • This has resulted in estimated energy savings of 92 billion kilowatt-hour per year.
    • Related Keys
      • UJALA Launched: 1 May 2015; 4 years ago
      • UJALA developed to address India’s high cost of electrification and high emissions from inefficient lighting.

 

 

  • On January 6, 2020, the fifth Asia Pacific Drosophila Research Conference was held at It was organized by the Indian Institute of Science Education and Research. The conference is held twice a year.
    • The conference is to be held between January 6, 2020 and January 10, 2020. It aims at promoting interaction between the Drosophila researchers in the region of Asia-Pacific.
    • Related Keys
      • Fourth Asia Pacific Drosophila Research Conference took place May 8-11, 2017, at the Osaka University Suita Campus Convention Center in Osaka, Japan.

 

 

  • On January 6, 2020, two Oman ships arrived in Goa to participate in “Naseem-Al-Bahr”, the Indo-Oman bilateral naval exercise. RNOV are Royal Navy of Oman Vessels. RNOV al Rasikh and RNOV Khassab arrived at Goa. Along with these ships, Indian Naval Ships Shubhadra and Beas will also participate in the exercise.
    • Related Keys
      • The Indo-Oman Naval Exercises are being conducted since 1993.
      • The countries conduct regular biennial exercises between all three services namely army, navy and air force.
      • Oman Currency: Omani rial

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On January 6, 2020, the ISRO proposed 2,700 crores of infrastructure plan to construct Human Space Flight Infrastructure Centre. The facility is to be set up at Challakere, Chitradurga district of Karnataka and is expected to become operational in three years.
    • ISRO aims to establish a self-contained training facility here.
    • Related Keys
      • If ISRO succeeds in the Gaganyaan mission, India will become the fourth country after US, Russia and China to send humans to space.
      • Challakere is called the science city as it accommodated facilities of ISRO.

 

 

WORDS OF THE DAY

  • Enigma – a person or thing that is mysterious or difficult to understand.
    • Similar Words – mystery, puzzle , riddle.
    • Antonyms – explanation, proposition

 

  • Enthrall – capture the fascinated attention of.
    • Similar Words- enchant , bewitch
    • Antonyms – bore , repel.