Today TNPSC Current Affairs January 03 2020

We Shine Daily News

ஜனவரி  03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
    • வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், மாநில அரசுகளைக் கௌரவிப்பதற்காக, மத்திய வேளாண் துறை சார்பில் வேளாண் தொழிலாளர் விருது (கிருஷிகர்மான்) வழங்கப்படுகிறது.
    • கிருஷிகர்மான் விருது வழங்கும் விழா கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்றது.
    • செய்தி துளிகள் :
      • பிரதமரின் வேளாண் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் 6 கோடி விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
      • விழாவில் பிரதமர் மோடி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழகம், தெலுங்கானாவில் 30 தேசிய விதை மையங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
      • மீனவர்களின் நலனுக்காகவும், மீன் விவசாயிகளுக்காகவும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
      • வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்திற்கு 5-வது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது.

 

 

  • நாட்டின் முதலாவது தேசிய தீயணைப்புச் சேவைகள் கல்லூரி மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் தொடங்கப்பட்டது.
    • தேசிய தீயணைப்பு சேவைகள் கல்லூரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
    • மேலும் நாக்பூரில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என் டி ஆர் எஃப்) அகாடெமிக்கான அடிக்கல்லையும் மத்திய உள்துறை அமைச்சர் நாட்டினார்.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2005-ம் ஆண்டு இந்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில் பிரதமரை தலைமையாக கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
      • தேசிய பேரிடர் மீட்பு படை தமிழகத்தின் அரக்கோணம் உள்பட 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் உள்ளன.
      • தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குநர் எஸ்.என்.பிரதான் ஆவார்.

 

 

  • அயோத்தி விவகாரங்களை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு.
    • மத்திய உள்துறை அமைச்சகம் அயோத்தி தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான விவகாரங்களை கூடுதல் செயலர் ஞானேஷ்குமார் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ஞானேஷ் குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் விவகாரங்களை கவனித்து வருகிறார்.
    • செய்தி துளிகள் :
      • உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலத்தின் அளவு77 ஏக்கர் ஆகும்.
      • அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதி மன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
      • தீர்ப்பு குறித்த விவரங்களை அமல்படுத்த மூவர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

 

 

சர்வதேச செய்திகள்

 

  • ஆஸ்திரியாவின் பிரதமராக செபாஸ்டியன் கர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
    • ஆஸ்திரியா மத்திய ஐரோப்பிய நாடாகும்.
    • செபாஸ்டியன் கர்ஸ் ஆஸ்திரிய மக்கள் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • ஆஸ்திரியா நாட்டு தலைநகர் வியன்னா.
      • ஆஸ்திரியா நாட்டு நாணயம் யூரோ.
      • ஆஸ்திரியா நாடு ஒரு குடியரசு நாடாகும்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஏடிபி கோப்பை அறிமுக போட்டிகள் பிரிஸ்பேனில் இன்று தொடங்குகின்றன.
    • அமெச்சூர் டென்னிஸ் வீரர்கள் சங்கம் சார்பில் முதன்முறையாக ஏடிபி கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.
    • டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பும் ஏடிபி-யும் இணைந்து புதிய ஏடிபி கோப்பை போட்டிகளை நடத்துகின்றன.
    • செய்தி துளிகள் :
      • 2020-ம் ஆண்டு அறிமுக போட்டியாக நடைபெற உள்ள இதில் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
      • ஆஸ்திரேலியாவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடைபெறும்.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • ஒருங்கிணைந்த விமானப் பாதுகாப்புப் பிரிவை உருவாக்க அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க முப்படை தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் முப்படைத் தளபதி” பதவியை உருவாக்கியது.
    • ராணுவம், கடற்படை ஆகியவற்றில் தனித்தனி விமானப் பிரிவுகள் உள்ளன.
    • செய்தி துளிகள் :
      • ஒருங்கிணைந்த விமானப் பாதுகாப்பு பிரிவை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
      • இந்தியாவின் முதல் முப்படைகளுக்கான தலைமை தளபதியாக விபின் ராவத் நியமிக்கப்பட்டார்.
      • பாதுகாப்பு துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராக விபின் ராவத் செயல்படுவார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 66

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : மக்கட்பேறு

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

விளக்கம் : தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு மகிழாதவர், குழல் ஓசையும் யாழ் ஓசையும் இனியவை எனக்கூறுவர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • India for the first time ranks among the top ten in the Climate Change Performance Index, CCPI, which goes further to prove that all efforts and activities being currently undertaken by the government are setting a tone of vast improvements.
    • Government aims to increase the share of non-fossil fuels to 175 GigaWatt by 2022 and further take it to 450 GW.
    • Related Keys
      • Climate Change Performance Index (CCPI) is an instrument designed by the German environmental and development organisation Germanwatch e.V. to enhance transparency in international climate politics.

 

 

  • The University of Agricultural Sciences in Bengaluru is all set to host the 107th Indian Science Congress from 3rd till 7th of this month. Prime Minister Narendra Modi will inaugurate the conference to be attended by over 15,000 delegates .
    • The General President of the Indian Science Congress Association, Prof. K S Rangappa has informed that 1500 scientific papers and 5700 posters will be laid in 14 scientific disciplines.
    • Related Keys
      • University of Agricultural Sciences in Bengaluru Established – 1964
      • University of Agricultural Sciences in Bengaluru Vice-Chancellor S. Rajendra Prasad

 

 

INTERNATIONAL NEWS

  • Palau’s pioneering ban on “reef-toxic” sunscreens takes effect. The tiny Pacific island nation introduced strict environmental measures.
    • Palau is renowned for its marine life and is regarded as one of the world’s best diving destinations. But, the government is concerned this poses an environmental cost.
    • Related Keys
      • Palau Capitals: Ngerulmud, Melekeok
      • Palau Currency: United States Dollar

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The Indian Space Research Organisation (ISRO) said the training of astronauts for India’s ambitious ‘Gaganyaan’ manned space mission will start from the third week of January in Russia. Four astronauts have been identified for the mission.
    • Sivan also reported the work related to Chandrayaan-3 and Gaganyaan was going on simultaneously.
    • Related Keys
      • ISRO Founded: 15 August 1969
      • ISRO Headquarters: Bengaluru

 

 

APPOINTMENTS

  • Vinod Kumar Yadav has assumed the charge of Chairman, Railway Board after being reappointed.
    • The Appointments Committee of the Cabinet has approved the reappointment of Vinod Kumar Yadav as Chairman, Railway Board for a period of one year.
    • Related Keys
      • Railway Board Founded 16 April 1853
      • Railway Board Headquarters New Delhi, India

 

 

WORDS OF THE DAY

  • Bemused – puzzled or
    • Similar Words – perplexed , baffled.
    • Antonyms – thoughtless, stable.

 

  • Benevolent – well meaning and kindly.
    • Similar Words – warm-hearted , good-natured.
    • Antonyms – unkind , tight-fist.