Today TNPSC Current Affairs February 14 2019

TNPSC Current Affairs: February 2019 – National News Image

We Shine Daily News

பிப்ரவரி 14

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நாகர்கோவில், ஓசூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, வேலூர் என மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது ஓசூர், நாகர்கோவில் சேர்த்து மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • 13வது ஐக்கிய நாடுகளவையின் “இடம் பெயரும் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டின்” (conference of parties (cop) of the UN convention on the conservation of migratory species), இலச்சனையாக “கிரேட் இந்தியன் பஸ்டார்ட்” (GIB) பறவை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இக்கூடுகையானது 2020ம் ஆண்டு பிப்ரவரி 15 – 22 தினங்களில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • இமாலய பிராந்தியத்தில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மேக வெடிப்பு நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹெக்ரி கர்வால் மாவட்டத்தில் (Tehri Garhwal) மேக கண்காணிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. (Himalayan Cloud Observatory) இது நாட்டின் 2வது மேக கண்காணிப்பகம் ஆகும்.
    • இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் IIT-கான்பூர் ஆகிய அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
  • குறிப்பு:
    • நாட்டின் முதலாவது மேக கண்காணிப்பகம், கேரளாவின் மூணாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • பேரிடர் நிவாரணப் பயிற்சியான “ரகாத் பயிற்சி” (Rahat Exercise) ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கோட்டா ஆல்வார் ஆகிய பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டது.
    • இந்திய இராணுவத்தின் உதவியுடன், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சப்த சக்தி பிரிவு ஒரு மனிதாபிமான கூட்டு உதவிப் பயிற்சியும் பேரிடர் நிவாரணப் பயிற்சியையும் நடத்தியது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • மணப் பெண்களுக்கு இலவசமாக தங்கத்தை வழங்கும் வகையில் அசாம் மாநில அரசானது “அருந்ததி” எனப்படும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், அசாமின் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் திருமணத்தின் போது 10 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது.
  • குறிப்பு:
    • தமிழகத்தில், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் – 1989-ன் கீழ் ஏழை பெண்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பாகிஸ்தானின் கராச்சி கடற்படை கப்பல் கட்டும் தளத்தில், “அமைதிக்காக ஒன்றுபடுதல்” (Together For Peace) என்ற கருத்துருவுடன் உலகம் முழுவதிலும் 46 நாடுகள் பங்குபெறும் பன்னாட்டு கடற்படை பயிற்சியான “அமான் – 19” (AMAN – 19) பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சியானது கடலில் பொதுவான ஆபத்துகளை எதிர் கொள்வதில் இருக்கும் செயல்முறைகளை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

நியமனங்கள்

 

  • உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் (David MalPass) என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
    • உலக வங்கியானது ஜூலை 1945ல் உருவாக்கப்பட்டது.
    • இதன் தலைமையகம் வாசிங்டன் டிசி-யில் உள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

புத்தகங்கள்

 

  • “சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் – நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை” (Law, Justice and Judicial Power – Justice P.N. Bhagwati’s Approach) என்ற புத்தகத்தை பேராசிரியர் “மூல் சந்த் சர்மா” (Mool Chand Sharma) எழுதி அண்மையில் வெளியிடப்பட்டது.

 

TNPSC Current Affairs: February 2019 – New Books News Image

 

 

English Current Affairs

 

National News

 

  • Bureau of Police Research and Development, BPRD will organize the 2nd National Conference of Micro Missions of National Police Mission in New Delhi.
    • The two day Conference will discuss the issues of Skills and Competence at the grass-root level, Attitudinal Changes in Police, Gender Sensitization, harnessing technology and Community Policing.

 

  • The International Conference on Unani Medicine was held in New Delhi. It was organised by Central Council for Research in Unani Medicine (CCRUM), under Ministry of AYUSH is organizing as part of celebration of Unani Day (February 11).
    • The theme of the conference was Integration of Unani System of Medicine in main stream healthcare.

 

  • LAWASIA, in association with the Bar Association of India, hosted its 1st LAWASIA Human Rights Conference in New Delhi with a motive to explore a broad range of human rights issues of relevance in the Asia Pacific region.
    • The theme of the conference was “State Power, Business and Human Rights: Contemporary Challenges”.

 

  • The 5th International Dam Safety Conference–2019 will be held in Bhubaneswar. The two-day event, a joint initiative of the Government of India, Government of Odisha and the World Bank, will conclude on February 14.
    • Dam Safety Conferences are being organized as an annual event in different DRIP States in collaboration with the Implementing Agencies.

 

  • The Centre has decided to set up a national law university in Uttarakhand. This is a big step toward making Uttarakhand a quality education hub. India has 21 national law universities, admissions to which are held through a Common Law Admission Test (CLAT).

 

  • Tamil Nadu Chief Minister K. Palaniswami said a multi-disciplinary animal husbandry park will be set up in Salem district.
    • The proposed park will have an advanced veterinary hospital and modern cattle, poultry, domestic dog, bull breeds, sheep, goat farms to explain to the farmers about their scientific rearing.

 

International News

 

  • Ending a long running dispute with Greece, the Republic of Macedonia has officially changed its name to North Macedonia.
    • Greece had been blocking Macedonia’s entry into the European Union (EU) and North Atlantic Treaty Organization (NATO), as it disapproved of the name of the country, as the Greek province of Macedonia adjoining it has been associated with Alexander the Great.

 

Economics

 

  • National Film Development Corporation of India (NFDC) was announced as the winner under the Miniratna Category by Ministry of Micro, Small and Medium Enterprises (MSME) in its campaign to felicitate CPSEs in recognition for their work in promoting SC/ST entrepreneurs.

 

Appointment

 

  • Ashwani Lohani, a retired bureaucrat, has been appointed the Chairman and Managing Director (CMD) of national carrier Air India in New Delhi.
    • The government appointed Air India CMD Pradeep Singh Kharola as the new Civil Aviation Secretary.

 

Awards

 

  • Siddhartha Lal, MD & CEO of Eicher Motors has won the EY Entrepreneur of the year 2018 after transforming Eicher Motors and helping the company resurrect the Royal Enfield motorcycle brand in India and making it a global brand icon.

 

Science & Technology

 

  • Minister of State (IC) for AYUSH, Shripad Yesso Naik launched the e-AUSHADHI portal for online licensing of Ayurveda, Siddha, Unani and Homoeopathy drugs and related matters. The portal’s objective is increasing transparency and accountability and improving information management facility and data usability.
    • The new e-portal is an acronym for Ayurveda, Unani, Siddha and Homeopathy Automated Drug Help Initiative.

 

Books & Authors

 

  • Former Vice President Hamid Ansari on 8th Feb. 2019, launched the new book of former Finance Minister P Chidambaram named “Undaunted: Saving the Idea of India” at Nehru Memorial Museum, New Delhi.
    • The book is a collection of essays on the country’s atmosphere of fear and how the constitutional values are being threatened.