Today TNPSC Current Affairs December 31 2019

We Shine Daily News

டிசம்பர் 31

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகமானது இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் நதிகள் சீரமைத்தல் கழகத்தின் தலைவர் சத்யகோபால் அளித்தார். தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதுடன், நதிகளையும் சீரமைப்பதற்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகமானது அமைக்கப்பட்டு, அதன் நிர்வாக இயக்குநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.சத்யகோபால் நியமிக்கப்பட்டார்.
  • செய்தி துளிகள்:
   • இந்திய நிறுமங்கள் சட்டம்-1956 என்பது, இந்தியாவில் நிறுமங்களை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.
   • நிறுமம் என்பது சில நபர்கள், தாமாகவே முன்வந்து கூட்டாக இணைந்து ஏதேனும் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டு அதில் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் அமைப்பு.
   • இந்திய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற இத்தகைய கூட்டமைப்புகள், நிறுமம் என்ற அந்தஸ்தை பெறுகின்றன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே டிசம்பர்.31 அன்று பொறுப்பேற்கிறார்.
  • ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.
  • செய்தி துளிகள்:
   • கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்
   • 1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

 • நாட்டின் முதல் ‘முப்படைத் தளபதியாக ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • தற்போது, ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு 62 வயது பூர்த்தியாகவில்லை என்றாலும், அவர் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், செவ்வாய்க்கிழமையுடன் அப்பதவியிலிருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.
  • எனவே, 65 வயது வரை முப்படைத் தளபதி பதவியில் அவர் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • செய்தி துளிகள்:
   • பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியால், 1776ம் ஆண்டு, கொல்கத்தாவில், ராணுவப் படை தொடங்கப்பட்டது. இது தான், தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப் புள்ளி.
   • இதனைத் தொடர்ந்து, 1833ம் ஆண்டு, வங்காளம், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ராணுவப் படை விரிவுபடுத்தப்பட்டது. இவை இந்திய ராணுவமாக உதயமானது

 

 

 • ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முழுவதும் பதற்றம் மிகுந்த பகுதி’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நாகாலாந்து மாநிலம் முழுவதும் அச்சுறுத்தல்கள் அதிக அளவில் நிலவுவதால், அங்கு ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை தொடர வேண்டிய அவசியம் உள்ளது.
  • செய்தி துளிகள்:
   • 1958-ஆம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது.
   • ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நாகாலாந்தில் பல ஆண்டுகளாக இந்த சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • மகளிர் டென்னிசில் கடந்த 10 ஆண்டுகளின் தலைசிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த 10 ஆண்டுகளில் அவர் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன், டபுள்யுடிஏ ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதை கவுரவிக்கும் வகையில் அசோசியேட்டட் பிரெஸ் சார்பில் செரீனாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
  • செய்தி துளிகள்:
   • கடினமான கோர்ட்டில் 13 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வில்லியம்ஸ் வென்றுள்ளார்.
   • ஆஸ்திரேலிய ஓபனில் வென்ற பெரும்பாலான பட்டங்களுக்கான திறந்த சகாப்த சாதனையை வில்லியம்ஸ் வைத்திருக்கிறார்
   • மேஜர்களில் 349 போட்டிகளில் வென்ற பெண்கள் மகளிர் ஒற்றையர் போட்டிகளிலும் அவர் சாதனை படைத்துள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 63

குறள்பால்: அறத்துப்பால்

குறள்இயல்: இல்லறவியல்

குறள்அதிகாரம்: மக்கட்பேறு

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

விளக்கம்: தம் பிள்ளைகளைப் பெறுதலாகிய அச்செல்வம், அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Prime Minister Narendra Modi has said that ISRO is planning to launch a satellite called Aditya to study the sun. The aim of the mission is to keep a permanent eye on the sun without any disturbance.
  • Aditya-L1 is meant to observe the solar corona. In his ‘Mann ki Baat’ programme of AIR, Mr Modi said, India is quite advanced in the field of astronomy and ISRO has taken path-breaking initiatives in this field.
  • Related News
   • ISRO Founder: Vikram Sarabhai
   • ISRO Director: Kailasavadivoo Sivan

 

 

 • On 30th December 2019, the Union Environment Forest and Climate Change Minister Prakash Javadekar has released State of Forests Report, 2019. India State of Forest Report is released every two years and it provides comprehensive information about the forest cover, forest vegetation density, tree cover, progress of plantation outside the designated forests etc. for India as well as States.
  • Related News
   • The total forest cover of the country is 7,12,249 sq km which is 21.67% of the geographical area of the country.
   • The top five States in terms of increase in forest cover are Karnataka, Andhra Pradesh, Kerala, Jammu & Kashmir and Himachal Pradesh.

 

 

INTERNATIONAL NEWS

 • Fausta, a female black rhino, who was believed to be the world’s oldest rhino has died at the age of 57 in a Tanzanian conservation area. Fausta died of natural causes in captivity in Ngorongoro Crater, which lies in Ngorongoro Conservation Area of Tanzania.
  • Rhinos’ life expectancy is around 40 years in wild but they can live an extra decade in captivity.
  • Related News
   • Tanzania Capital: Dodoma
   • Tanzania Currency: Tanzanian shilling

 

 

BANKING NEWS

 • Finance Minister Nirmala Sitharaman has said that no Merchant Discount Rate (MDR) will be applicable on transactions through homegrown RuPay and UPI platforms beginning 1st of January next year. Ms Sitharaman announced this in New Delhi after meeting Chiefs of Public Sector Banks (PSBs), Chief executive of Indian Banks’ Association and representatives of leading private sector banks to discuss banking issues.
  • Related News
   • The merchant discount rate is the rate charged to a merchant for payment processing services on debit and credit card transactions.

 

 

ECONOMY

 • India will overtake Germany to become fourth-largest economy in the world by the year 2026. According to a report by the UK-based Centre for Economics and Business Research (CEBR), India is all set to overtake Japan to become the third-largest economy by 2034.
  • The report titled ‘World Economic League Table 2020’ said that India is also set to become a 5 trillion dollar economy by 2026, 2 years later than the government’s target of 2024.
  • Related News
   • Germany Capital: Berlin
   • Germany Currency: Euro

 

 

WORDS OF THE DAY

 • Umbrage – offence or annoyance.
  • Similar Words – bridle , be aggrieved
  • Antonyms – complacency, gratification.

 

 • Vagary – an unexpected and inexplicable change in a situation or in someone’s behavior.
  • Similar Words – quirk , peculiarity.
  • Antonyms – purpose, determination.

 

 


FaceBook Updates

Call Us