Today TNPSC Current Affairs December 27 2019

We Shine Daily News

டிசம்பர் 27

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நல்லாட்சி மாநிலம் : தமிழகம் முதலிடம்
    • இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
    • தரவரிசைப் பட்டியலில் தமிழகத்திற்கு62 புள்ளிகள் வழங்கியுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
      • பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்க கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
      • சட்டம், ஒழுங்கு, பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் முதலிடமும், சுற்றுச்சூழல் துறையில் 3-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தை கௌரவித்து நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது.
    • நாட்டின் பாதுகாப்பிற்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் செய்துள்ள பங்களிப்பை நினைவு கூறும் பொருட்டு மத்திய நிதியமைச்சர் தபால் தலையை வெளியிட்டார்.
    • கடத்தலை தடுக்கவும், நாட்டிலுள்ள கலாச்சார பாரம்பரியங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகம் செயல்படுகிறது.
    • செய்தி துளிகள் :
      • வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
      • கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை மத்திய வாரியத்தின் கீழ் இப்பிரிவு உருவாக்கப்பட்டது.
      • கள்ள நோட்டுகள், போதைப் பொருட்கள், தங்கம், ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் முதன்மை புலனாய்வு அமைப்பாக இது உள்ளது.

 

 

  • மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
    • மூத்த குடிமக்களுக்கு பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
    • மத்திய நிதி அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம் 2017–18 நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டது.
      • இந்த திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அமல்படுத்தி வருகிறது.
      • இந்த திட்டத்தில் சேருவோருக்கு உறுதியளிக்கப்பட்ட 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • விஸ்டன் சிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக ஆடிய 5 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், டேல் ஸ்டெயின், டிவில்லியர்ஸ், எல்ஸி பெர்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    • இவர்களில் எல்ஸி பெர்ரி ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஆவர்.
    • செய்தி துளிகள் :
      • இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வகையான போட்டிகளிலும் சராசரி 50 வைத்துள்ள ஒரே வீரர் ஆவார்.
      • 2019 ஆம் ஆண்டு மட்டும் 2370 ரன்களை விளாசியுள்ளார்.
      • விஸ்டன் ஒருநாள் அணியில் தோனி, ரோகித், கோலி இடம்பெற்றுள்ளனர்.

 

 

நியமனங்கள்

 

  • தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு.
    • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
    • தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்க தலைவராக இருந்த சோமநாதன் தில்லி பணிக்கு சென்றதால் பதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • இதே போன்று செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

தரவரிசைப்பட்டியல்

 

  • சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
    • நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்ட மாநிலப் பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2-ம் இடத்திலும், கர்நாடகம் 3-ம் இடத்திலும் உள்ளன.
    • பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன
    • செய்தி துளிகள் :
      • வடகிழக்கு, மலைப்பகுதி மாநிலங்களின் பட்டியலில் ஹிமாச்சலப் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது.
      • சிறந்த நிர்வாகம் உள்ள யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.
      • வேளாண்மை, அது சார்ந்த துறைகள் சிறப்பாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடம்.
      • நீதி மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு உள்ள மாநிலம் பட்டியலில் தமிழகம் முதலிடம்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 59

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

குறள் :

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

விளக்கம் : கற்பினால் உண்டாகும் புகழுடைய மனைவி பெறாதவர், தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் பெருமிதமாக நடக்க முடியாது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On December 26, 2019, the Union Ministry of Human Resource Development released five documents that were developed by UGC covering five verticals of quality mandate. The documents covered eco-friendly and sustainable university campuses, evaluation reforms, human values and professional ethics, academic research integrity and faculty induction.
    • Related News
      • Ministry of Human Resource Development Founded: 26 September 1985
      • Ministry of Human Resource Development Headquarters: New Delhi

 

 

  • The locusts, known as tiddis locally arriving from desert areas of Pakistan, descended in and around 20 talukas in the state Gujarat. It includes Banaskantha, Mehsana, Kutch, Patan and Sabarkantha districts over the last few days and wreaked havoc on standing crops of mustard, fennel, castor, cumin, cotton, potato, and fodder grass.
    • Related News
      • Gujarat Capital: Gandhinagar
      • Gujarat Chief minister: Vijay Rupani

 

 

  • Finance Minister Nirmala Sitharaman released a postage stamp here on Thursday to commemorate the distinguished service and glorious contribution by the Directorate of Revenue Intelligence (DRI) in protecting the nation
    • The finance minister congratulated all officers and staff of DRI on their commitment to duty and determined and collaborative efforts to counter smuggling activities in the country.
    • Related News
      • Finance ministry Founded: 29 October 1946
      • Finance ministry Headquarters: New Delhi

 

 

  • Vice President M Venkaiah Naidu is scheduled to visit Balangir district of Odisha today to inaugurate an LPG bottling plant of Bharat Petroleum Corporation Limited and to attend the platinum jubilee function of Rajendra College in Balangir.
    • The bottling plant has been established at an expenditure of 103 crore rupees and has capacity of manufacturing 42 lakh cylinders annually. The bottling plant will benefit residents of 14 western Odisha districts.
    • Related News
      • Odisha Capital: Bhubaneswar
      • Odisha Governor: Ganeshi Lal

 

 

SPORTS

  • Indian skipper Virat Kohli has been named in the Cricketers of the decade list alongside four others by the Wisden Cricketers’.
    • Kohli, who has scored 5,775 more international runs than anyone else in the last 10 years, has arguably been the best batsman over the last decade.

 

 

WORDS OF THE DAY

  • Quantum – the smallest discrete quantity of some physical property.
    • Similar Words – portion , unit
    • Antonyms – whole

 

  • Ramification – a consequence, especially one that causes complications.
    • Similar Words- result , outcome , effect
    • Antonyms – prosecution, indivision.