Today TNPSC Current Affairs December 11 2019

We Shine Daily News

டிசம்பர் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பிராந்திய இணைப்புத் திட்டமான உதான் (UDAN (Ude Desh Ka Aam Naagrik) இன் கீழ் கோராபூட்டில் உள்ள ஜெய்பூர், சுந்தர்கரில் ரூர்கேலா மற்றும் ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள உத்கேலா ஆகிய இடங்களில் தலா மூன்று விமான நிலையங்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
    • நாட்டின் பொது மக்களுக்கு விமான பயணத்தை அணுகும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் உதான் திட்டம் 27 ஏப்ரல் 2017 அன்று தொடங்கப்பட்டது.
    • செய்தி துளிகள்
      • சிறிய மற்றும் நடுத்தர நகரங்களை விமான வலையமைப்போடு இணைப்பதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (எம்.சி.ஏ), இந்திய அரசு (கோஐ) பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN (4.0) இன் 4 வது கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
      • இந்த கட்டம் என்.இ.ஆர் (வடகிழக்கு பிராந்தியம்), மலைப்பாங்கான மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் (ஜே & கே), லடாக் மற்றும் தீவுகள் போன்ற பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கும்.
      • சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பற்றி:
      • தலைமையகம் – புதுதில்லி
      • சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் (சுயாதீன பொறுப்பு) – ஹர்தீப் சிங் பூரி

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர் 1 செயற்கைக்கோளை தாங்கியபடி புதன்கிழமை (டிச.11) பிற்பகலில் விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட்.
    • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் இந்த செயற்கைக்கோள் 628 கிலோ எடைகொண்டதாகும். வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது.
    • செய்தி துளிகள்
      • முன்னதாக, 2009 இல் ரிசாட்-2;, 2012-இல் ரிசாட்-1 செயற்கைக்கோள்களையும், கடந்த மே 22-ஆம் தேதி ரிசாட்-2பி செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கூடுதல் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காக ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோளை தற்போது ஏவுகிறது.
      • ரிசாட் 2பி ஆர்1 செயற்கைக்கோளுடன் வர்த்தக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. இதில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களும், இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் அடங்கும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப் பதக்கங்களுடன், மொத்தம் 312 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது முந்தைய 2016 போட்டிகளைக் காட்டிலும் 3 பதக்கங்கள் கூடுதலாகும்.
    • நேபாளத் தலைநகர் காத்மாண்டு, பொக்ராவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், பூடான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 2700-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 27 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று போட்டியிட்டனர்.
    • செய்தி துளிகள்
      • இந்திய அணி தொடர்ந்து 13-ஆவது முறையாக தெற்காசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
      • சோனியா 57 கிலோ, பிங்கி ராணி 51 கிலோ, மஞ்சு 64 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவர் 69 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷண் தங்கம் வென்றார்.
      • சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் 91 கிலோ நரீந்தர், 52 கிலோ பிரிவில் ஸ்பர்ஸ் குமார் தங்கம் வென்றனர். எனினும் 60 கிலோ பிரிவில் வரீந்தர் சிங் தோல்வியுற்று வெள்ளி வென்றார்.

 

 

விருதுகள்

 

  • 2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
    • அபி அகமது அலிக்கு, நார்வே நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரைஸ் ஆண்டர்சன் நோபல் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். அமைதிக்காக வழங்கப்படும் 100-ஆவது நோபல் பரிசு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • செய்தி துளிகள்
      • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எத்தியோப்பிய பிரதமராகப் பொறுப்பேற்ற அபி அகமது அலி எரித்ரியாவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
    • இதன் காரணமாக, 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை சர்வதேச சமூகம் பாராட்டும் வகையில் அவர் இவ்வாண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நோபல் பதக்கமும் சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் டிசம்பர் 10 அன்று நடைபெற்றது.

 

 

நியமன ங்கள்

 

  • 78க்கும் மேற்பட்ட செய்தி சேனல்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய சங்கமான நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் கூட்டமைப்பு (என்.பி.எஃப்) குடியரசு தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • 25 மாநிலங்களைச் சேர்ந்த ஒளிபரப்பாளர்களைக் குறிக்கும் 14 மொழிகளில் 78 செய்தி சேனல்களின் அமைப்பு. உள்ளடக்கம் குறித்த வெளிப்படையான சுய கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்காக புதிய சுய ஒழுங்குமுறை அமைப்பு 2020 ஜனவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
      • செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கம்: ஜூலை

 

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச மலை தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் டிசம்பர் 11 அன்று நடத்தப்படுகிறது.
  • மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2022 ஆம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு இத்தினத்தை உருவாக்கியது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு அகில உலக மலைகள் ஆண்டு என்று ஐ.நா. சபை அறிவித்தது. அந்த ஆண்டை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு யுனஸ்கோ, டிசம்பர் 11 ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது. அன்று முதல், டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    • செய்தி துளிகள்
      • முதல் சர்வதேச நாள் முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
      • 2019 சர்வதேச மலை தினத்திற்கான தீம் “இளைஞர்களுக்கான மலைகள்” “Mountains Matter for Youth”

 

 

திருக்குறள்

 

குறள் எண்  : 44

அதிகாரம்  : இல்வாழ்க்கை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

பசியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

விளக்கம்: பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால் அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போது குறைவதில்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On December 10, 2019, External Affairs Minister Jaishankar introduced the Anti-Maritime bill in parliament. The bill was introduced in days after the kidnapping of 18 Indians aboard in Nigeria. It aims at ensuring safety and security of India’s maritime trade and the crew members.
    • The bill is framed in accordance with the UNCLOS (United Nations Convention on the Law of the Sea).
    • RELATED KEYS
      • The UNCOS or the Laws of the sea was framed at the third UN Conference that was held between 1973 and 1982.
      • As of 2016, 167 countries including the European Union have joined UNCLOS.

 

 

INTERNATIONAL NEWS

  • In order to secure the CPEC sea route, China and Pakistan have signed a deal to build drones with maximum payload of 480 kg, with top speed of 370 km per hour and can fly up to 20 hours. The drones are called Loong II. These drones are similar to the MQ-9 Reaper drones developed by the US.
    • RELATED KEYS
      • CPEC Established 22 May 2013
      • CPEC (China Pakistan Economic Corridor), a major part of China’s BRI project passes through the Pakistan Occupied Kashmir region.

 

 

  • Abu Dhabi has been selected as the world’s leading Sports tourism Destination at the 26th edition of the World Travel Awards (WTA) being held in Muscat. This is the seventh time in a row that Abu Dhabi has been selected for this coveted award.
    • RELATED KEYS
      • Abu Dhabi the second most populous city of the United Arab Emirates.
      • The World Travel Awards were founded in 1993.

 

 

BANKING NEWS

  • Country’s largest lender State Bank of India has announced the reduction in its marginal cost of fund based lending rate (MCLR) by 10 basis points across all one-year products. It will be effective from today.
    • This is the eighth consecutive cut in MCLR by the lender this fiscal. The new one-year MCLR has been cut to 7.90 per cent from 8 per cent.
    • RELATED KEYS
      • State Bank of India Chairperson: Rajnish Kumar
      • State Bank of India Headquarters: Mumbai

 

 

IMPORTANT DAYS

  • International Mountain Day is observed on December 11 every year since 2003. The same day is celebrated in US and Japan as well as National Mountain Day. The US began to mark mountain day even before the UN since 1877.
    • Theme: Mountains matter for youth

 

 

WORDS OF THE DAY

  • Jaded – bored or lacking enthusiasm, typically after having had too much of something.
    • Similar Words – satiated , exhausted.
    • Antonyms – fresh.

 

  • Jaunt – a short excursion or journey made for pleasure
    • Similar Words – outing , excursion
    • Antonyms – Stand in a place .