Today TNPSC Current Affairs December 07 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன், டிசம்பர் 06 அன்று காலமானார். அவருக்கு வயது 50.
    • திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடுவில் 1968ல் பிறந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடியவர் நெல் ஜெயராமன். 174 அரியவகை நெல்விதைகளை சேகரித்ததுடன் மரபணு மாற்ற விதை திட்டங்களை எதிர்த்தவர் ஜெயராமன்.
    • பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் அமைப்பை நடத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 12 ஆண்டாக நெல் திருவிழாவை நடத்திய ஜெயராமனுக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
    • தமிழ்நாடு வேளாண்மை துறையிலிருந்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிறந்த கரிம விவசாயி விருதினை ஜெயராம் பெற்றுள்ளார்.
    • 2013இல் அவர் தேசிய நேஷன் அறக்கட்டளை (NIF) இன் சிறந்த மரபணு இரட்சகராக விருதினைப் பெற்றார். இவ்விருதினை அவர் இந்திய ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

  • இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.
    • இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.
    • இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
    • சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
    • இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.
    • தீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங் (ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன் (ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • டிசம்பர் 2 அன்று ராஜஸ்தானின் கோட்டா-சவாய் மாதோபூர் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது, இந்தியாவின் முதல் தொடர்வண்டிப் பொறி அற்ற தொடர்வண்டி (Locomotive less train) டிரெயின் 18 ஆனது மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை எட்டியது. மணிக்கு 200 கி.மீ., வேகம் வரை செல்லக் கூடியது இந்த அதிவிரைவு தொடர்வண்டி.
    • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தத் தொடர்வண்டி, செயல்பாட்டிற்கு வந்தபிறகு இதுவே நாட்டின் முதல் அதிவேக தொடர்வண்டியாக திகழும். 16 பெட்டிகளைக் கொண்ட, முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்தத் தொடர்வண்டியானது ஜனவரி மாதம் முதல் பயணிகள் போக்குவரத்திற்கு அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது.

 

 

  • 2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
    • அர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன.
    • உலக மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் அளவிற்கு இந்த ஜி20 நாடுகளின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் 80 சதவீதம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மற்றும் உலகின் நில பரப்பில் 50 சதவீதம் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன.
    • வருகிற 2022ம் ஆண்டில் இந்த சர்வதேச மாநாட்டை இத்தாலி நாடு நடத்த இருந்தது.
    • இந்த நிலையில், இந்தியாவுக்கு இந்த வாய்ப்பினை இத்தாலி வழங்கியுள்ளது.
    • அந்த வருடத்தில் இந்தியா தனது 75வது வருட சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • மகாராஷ்டிரா முதல்வர் பத்னாவிஸ், விவசாயத் தொழில், கிராமப்புற உருமாற்றத்திற்கான SMART முன்முயற்சியை தொடங்கியுள்ளார்.
    • வேர்ல்ட் பேங்க் உதவி திட்டம், வேளாண் மதிப்பீட்டு சங்கிலிகளை மறுசீரமைக்க, 1,000 கிராமங்கள் முழுவதும் குறு விவசாயிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
    • மகாராஷ்டிரா தலைநகரம் : மும்பை
    • மகாராஷ்டிரா கவர்னர் சி.வித்தியாசாகர் ராவ்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • பல்வேறு அரசு திட்டங்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடனும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிஷா ஊக்கத் தொகையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான மக்கள் மேம்பாடு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
    • People Empowerment Enabling Transparency and Accountability of Odisha Initiatives (PEETHA)

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார்.
    • உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.
    • வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் வாக்கர் புஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.
    • பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.
    • இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
    • நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. மாநாடு போலந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
    • உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
    • எனவே இதனை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
    • சுமார் 200 நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே இந்த மாநாடு தொடங்கியுள்ளது.
    • வரும் 14ம் தேதி வரை இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த பருவநிலை மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

நியமனங்கள்

 

  • முன்னனி முதலீட்டு வங்கியான ஆக்ஸிஸ் கேப்பிடல் அதன் MD மற்றும் CEO வான தர்மேஷ் மேதா பதவி விலகியுள்ளார் என்பதை தெரிவித்துள்ளது.
    • அவருக்கு பதிலாக சில்லில் பட்டேல் மற்றும் சிராக் நேக்ண்டி ஆகியோரை கூட்டு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கூட்டு தலைமை நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்த்தியுள்ளனர்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

 விருதுகள்

 

  • எலியட் கிபோகெஜ் மற்றும் காத்ரின் இபார்குன் ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களாக IAAF ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • IAAF – International Association of Athletics Federation
    • தொடங்கப்பட்ட ஆண்டு – 11 ஜுலை, 1912
    • தலைமையகம் : மொனாகோ.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • டிசம்பர் 6 – அம்பேத்கர் அவர்களது நினைவு நாள் ஆகும்.
    • இதனை அம்பேத்கர் மகாபரிநிர்வான் திவாஸ் ஆக அனுசரிக்கின்றனர்.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

  • டிசம்பர் 5 – சர்வதேச தன்னார்வளர்கள் தினம் (IVD)
    • இது ஐ.நா. பொதுசபையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சமூகம், அரசு சாரா நிறுவனங்கள் (NGO), ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் (ம) தனியார் துறைகளில் பணியை மேம்படுத்துவதற்காக இது கொண்டாடப்படுகிறது.
    • IVD – International Volunteer Day
    • மையகரு (Theme) : தன்னார்வளர்கள் குடியேறிய சமூகங்களை உருவாக்குகின்றன என்பதுதான்.“Volunteers build Resilient Communities”

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Department of Industrial Policy and Promotion (DIPP) in the Ministry of Commerce and Industry and the Government of Goa, is hosting the annual Start-up India Venture Capital Summit in Goa.
    • The key objectives of the Summit will be to showcase the India opportunity, increase capital flow for Indian start-ups and further promote ease of doing business.
    • The theme of the Summit is ‘Mobilizing Global Capital for Innovation in India.’

 

  • To transform rural Maharashtra, Chief Minister Devendra Fadnavis has launched a unique initiative called “SMART”, which stands for State of Maharashtra’s Agribusiness and Rural Transformation.
    • The project will entail an investment of 300 million US dollars of which World Bank would contribute 210 million US dollars.

 

  • India is the fourth highest emitter of carbon dioxide in the world, accounting for 7 per cent of global emissions in 2017, a study by the Global Carbon Project released recently.
    • The top four emitters in 2017, which covered 58 per cent of global emissions, were China (27 per cent), the US (15 per cent), the European Union (10 per cent) and India (7 per cent), according to the projection by the Global Carbon Project.

 

  • The Indian Coast Guard has conducted the Regional Level Marine Oil Pollution Response Exercise titled ‘Clean Sea – 2018’ at sea off Port Blair.
    • The preparedness of all agencies during the exercise was conducted under observation of Inspector General Maneesh V Pathak, Commander Coast Guard Region (Andaman and Nicobar Islands).

 

  • To bring transparency to cash transactions, the Pune district court administration is starting an e-payment facility in the Shivajinager district and sessions court. This is the first time in India that practising lawyers and litigants in various cases will be able to make payments online.

 

  • The Delhi government launched the ‘Mukhyamantri Tirth Yatra Yojana’ which offers free travel packages on five religious circuits for senior citizens from the national capital. The scheme, approved by the Cabinet in July, was launched by Chief Minister Arvind Kejriwal at the Delhi Secretariat.

 

INTERNATIONAL NEWS

 

  • The UAE now has the world’s most powerful passport, achieving the top ranking in an achievement hailed as a tribute to the legacy of the Founding Father, Sheikh Zayed, and the country’s diplomacy.
    • The number 1 spot in the global Passport Index was achieved just as the UAE celebrates it 47th National Day and its achievements since 1971.

 

  • India has signed an agreement with Peru for co-operation and mutual assistance in Customs Matters. It provides a legal framework for the sharing of information and intelligence between the Customs authorities of the two countries.
    • It is also expected to facilitate trade and ensure efficient clearance of goods traded between the two sides.

 

  • The Slovak company Kinazo has released the world’s first ever 3D printed bike, which was introduced at the conference “The Current Evolution of 3D Printing” in Volkswagen Slovakia, Stupava.

 

ECONOMY

 

  • Fitch Ratings slashed India’s GDP growth forecast to 7.2 per cent for current fiscal, from 7.8 per cent projected in September, citing higher financing cost and reduced credit availability.
    • In its Global Economic Outlook released, Fitch estimated India’s GDP growth to be 7 per cent and 7.1 per cent in financial years 2019-20 and 2020-21 respectively.

 

AWARDS

 

  • Centenarian lexicographer G. Venkatasubbaiah has been chosen for the Sahitya Akademi’s Bhasha Samman for South (2017). The award has been given in recognition of his contribution in the field of classical and medieval literature.
    • The akademi also announced an award for Kannada writer K.G. Nagarajappa for his work on literary criticism, Anushreni-Yajamanike, for 2018.

 

APPOINTMENTS

 

  • Former senior Indian diplomat Preeti Saran has been elected to the Asia Pacific seat on the Committee on Economic, Social and Cultural Rights (CESCR) of the UN for 4 The appointment would be effective from January 1, 2019 and she would replace 3 time elected former Indian diplomat, Chandrashekhar Dasgupta.
    • CESCR was set up in 1985 by the ECOSOC to monitor on its behalf the implementation of the International Covenant on Economic, Social and Cultural Rights, which has been ratified by 169

 

  • The Government announced that Atul Sahai will be appointed as Chairman and Managing Director (CMD) of New India Assurance (NIA) for a five year period.
    • The post has been vacant since July 2018 after former CMD G Srinivasan retired.

 

SPORTS

 

  • Kenya’s marathon world record holder Eliud Kipchoge and Colombian jumper Caterine Ibarguen were honoured as IAAF athletes of the year at athletics’ annual awards ceremony in Monaco.

 

  • Breaking an 82-year-old record, Pakistan leg-spinner Yasir Shah became the fastest bowler in the world to reach the milestone of scalping 200 Test wickets.
    • Earlier, the record was held by former Australian leg-spinner Clarrie Grimmett who had scalped 200 wickets in 36 Tests. Shah, on the flip side, did the same in just 33 Test matches.