Today TNPSC Current Affairs December 06 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப்பிரிவுக்கு, ‘கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கென தனியாக 2 IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இத்திட்டத்தின் இயக்குநராக டி. ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

  • சாகித்ய அகாதெமி விருதுக்கு தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இது அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

  • ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) பொதுக்குழு கூட்டத்தில், 4 துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மகன் ரணிந்தர் சிங், துணைத்தலைவராக தேர்வானார். இதன்மூலம் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பில் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
    • 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவராக ரணிந்தர் சிங் இருந்து வருகிறார்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்தியாவின் முதல் ‘ஆந்தை விழா’ புனேவின் புரந்தார் வட்டத்திலுள்ள பிங்கோரி கிராமத்தில் நவம்பர் 29 அன்று நடந்தது. எலா அறக்கட்டளையால் (இயற்கைக் கல்வி மற்றும் பாதுகாப்புக்காக இயங்கும் ஓர் அரசுசாரா அமைப்பு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டு நாள் விழாவானது, ஆந்தைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்களை வழங்கியது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(CII), (வேளாண் தொழில்நுட்ப இந்தியா-2018) 13ஆவது கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டிசம்பர் 01 அன்று சண்டிகரில் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியின் கருப்பொருள், ‘Technology in Agriculture: Increasing Farmer’s Income’ என்பதாகும். 4 நாள் நடக்கும் இந்த சர்வதேச வேளாண் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(CII) ஏற்பாடு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திராவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரங்களை இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட இரயில்பாதை பாலமான போகிபல் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
    • அருணாச்சல பிரதேச எல்லையில் உள்ள தண்டவாளங்களை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களில் போகிபல் பாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • பாலத்தின் நீளம் 4.94 கி.மீ ஆகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • நீர்வள ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி புதுடெல்லி இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்த மாநாடு தேசிய தூய்மை கங்கை திட்டம் மற்றும் கங்கை நதி படுகை மேலாண்மை மற்றும் ஆய்வு மையம் சார்பில் தொடங்கப்பட்டது.
    • இந்த மாநாடு நாடு முழுவதும் உள்ள மிகபெரிய நீர்பாசன பிரச்சனைகளை மாநாட்டில் ஆலோசித்து அதற்கான மாதிரி தீர்வுகளை வழங்குவர்.
    • கங்கை நதிதூய்மை திட்டம் தொடங்கிய ஆண்டு 1985 என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • முழு கடலோர பாதுகாப்பு கருவியின் வலிமையை சோதிக்க இந்திய கடற்படை அடுத்த மாதத்தில் ஒரு பெரிய அளவிலான கடலோர பாதுகாப்பு பயிற்சியை நடத்த உள்ளது. – “Tropex” என்று கூறுவர்.
    • இதனை இந்திய கடற்படையின் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லன்பா அறிவித்தார்.
    • இது ஜனவரி முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இஸ்ரோவின் ஜிசாட் – 11 (GSAT – 11) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
    • இது இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்ட அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இதன் எடை – 5854 kg.
    • இது பிரெஞ்ச் கயானாவின் கௌரவ் விண்வெளி ஏவு தளத்திலிருந்து ஏரியன் 5விஏ – 246 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • UNFCCC (காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு அவை), தரப்புகளின் 24ஆவது மாநாடு (COP 24) ஆனது டிசம்பர் 3-14 வரை போலந்தின் கடோவிஸ் நகரத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்த செயல் திட்டத்தின் கீழ், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • ‘ஆதரவற்றோரை கடத்தி வியாபாரம் செய்தலை – Orphanage Trafficking’ நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக குழந்தைகளை வேண்டுமென்றே ஆதரவற்றோர் இல்லத்தில் புகுத்தும் செயலை ஆஸ்திரேலியா குற்றமாக அறிவித்துள்ளது. உலகளவில் இது முதல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • மியான்மரில் வாழும் ரோஹிங்கிய சிறுபான்மையினரின் மீதான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதில் தோல்லியடைந்ததால், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாதைக்குரிய தலைவர் ஆங் சான் சூகீயிடமிருந்து பாரிஸ் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது.
    • இதனால், பிரெஞ்சு தலைநகரின் சிறப்பான இந்தப் பாரிஸ் சுதந்திர விருதை இழக்கும் முதல் நபராக ஆங் சான் சூகீ மாறியுள்ளார். இது தவிர ‘Amnesty International’ எனும் பன்னாட்டுப் பொதுமன்னிப்பு அமைப்பானது சூகீக்கு தான் வழங்கிய ‘நம்பிக்கைக்கான அடையாளம் – Ambassador of Conscience’ என்ற விருதினையும், கைப்பற்றியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பின், அர்ஜென்டீனாவின் பியூனஸ் ஏர்சில் 2ஆவது ரஷ்யா – இந்தியா – சீனா (RIC) முத்தரப்பு பேச்சுவார்த்தை பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் ஆகியோரிடையே நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • கேம்பிரிட்ஜ் அகராதி ‘நோமோபோபியா’ என்ற சொல்லை, 2018ஆம் ஆண்டின் ‘மக்களின் சொல்’(People’s World) என அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி இல்லாமலோ, அதைப் பயன்படுத்த முடியாமலோ இருக்கும்போது ஏற்படும் படபடப்பு, கவலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ‘Nomophobia – No Mobile Phobia’. அகராதியின் ஆசிரியர்கள், ‘Nomophobia’, ‘Gender gap’, ‘Ecocide’, ‘No-platforming’ ஆகிய சொற்களை முன்வைத்தனர். அவற்றில் ‘Nomophobia’ என்ற சொல் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய – ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு (UAE) இடையேயான கூட்டுக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
    • இதில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

நியமனங்கள்

 

  • மாற்றுத்திறனாளிகளுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்காக UNESCO/எமிர் ஜபீர் அல்-அஹ்மத் அல் ஜபீர் அல் சபா பரிசுக்கு வங்கதேச மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் வழக்குரைஞரான வஷ்கர் பட்டாச்சார்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்வை, அச்சு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ள வங்கதேச மக்களுக்காக ஒரு முன்மாதிரி அகராதியை பட்டாச்சார்ஜி உருவாக்கியுள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகள் தங்களின் சொந்த வியாபாரத்தை தொடங்குவதற்காக ஒரு சிறப்பு சிறுகடன் (e-micro) திட்டத்தையும் அவர் வடிவமைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

  • முன்னாள் சர்வதேச தடகள மற்றும் தொழிலதிபரான ஜான் ரிட்ஜென், IAAF – யின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 215வது கவுன்சில் கூட்டத்தின் முதல் நாளில் இவரது நியமனம் ஒப்புதல் கையெழுத்தானது.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Indian Space Research Organisation (ISRO) successfully launched its heaviest and most-advanced high throughput communication satellite, GSAT-11, from the Spaceport in French Guiana.
    • The launch vehicle, Ariane 5 VA-246, lifted off from Kourou Launch Base carrying India’s GSAT-11 and South Korea’s GEO-KOMPSAT-2A satellites.
    • The 5854-kg satellite will provide high data rate connectivity.

 

  • Union Minister of Science & Technology and Earth Sciences, Dr. Harsh Vardhan, called upon the scientific community in India and ASEAN member states to intensify collaborative research in science, technology and innovation.
    • The first India-ASEAN InnoTech Summit in New Delhi is organised by FICCI in association with the Department of Science & Technology (DST) and the Ministry of External Affairs.

 

  • The Centre has included Gangotri and Yamunotri in Uttrarakhand, Amarkantak in Madhya Pradesh and Parasnath in Jharkhand under a central scheme to develop pilgrimage and heritage destinations in the country.
    • The number of sites under the Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASAD) launched by the ministry in 2014-15 has now become 41 in 25 states.

 

  • Haryana’s prestigious International Gita Mahotsav-2018 will be organised from December 7 to 23 in Kurukshetra. Artists and artisans of national and international repute will participate in the International Crafts and Saras Mela, which will simultaneously be organised from December 7-23.
    • Mauritius would be the partner country and Gujarat would be the partner state in the celebrations of the festival.

 

  • Water Resources, River Development and Ganga Rejuvenation Minister Nitin Gadkari inaugurated India Water Impact Summit 2018 in New Delhi. The three days summit is jointly organized by the National Mission for Clean Ganga and the Centre for Ganga River Basin Management and Studies.

 

  • Water Resources, River Development and Ganga Rejuvenation Minister Nitin Gadkari has inaugurated India Water Impact Summit 2018 in New Delhi.
    • Organized by the National Mission for Clean Ganga and the Centre for Ganga River Basin Management and Studies.

 

  • India’s most-advanced high-throughput communication satellite GSAT-11 was successfully launched from Spaceport in French Guiana. The satellite weighs 5854-kg GSAT-11 and is the heaviest satellite ever built by the Indian Space Research Organization (ISRO). It has a mission life of 15 years.

 

INTERNATIONAL NEWS

 

  • UAE and India has inked a currency swap agreement, which means businesses can now can do trade using local currencies of rupee and dirham, instead of dollar. Both leaders also agreed to boost cooperation in trade, security and defence.
    • The leaders also decided to strengthen their resolve to combat extremism and terrorism in all its forms, regardless of the perpetrators and their intent.

 

ECONOMY

 

  • On the basis of an assessment of the current and evolving macroeconomic situation at its meeting, the Monetary Policy Committee (MPC) decided to: keep the policy repo rate under the liquidity adjustment facility (LAF) unchanged at 6.5 per cent and the marginal standing facility (MSF) rate and the Bank Rate at 75 per cent.

 

  • CRISIL cut India’s growth forecast for current fiscal to 4 per cent on the back of weakening global GDP and trade growth. India’s growth in the July-September quarter slipped to 7.1 per cent from 8.2 per cent in the April-June quarter.

 

AWARDS

 

  • The Indian cricket team captain Virat Kohli has received a special honour as a signed Jersey that he donated after scoring his hundred in the fourth Test at the Sydney Cricket Ground (SCG) during India’s tour of Australia in 2014-15 has been placed next to Sachin Tendulkar’s portrait at the Bradman Museum.
    • The Museum is also known as ‘The Home of Cricket Memories.’

 

APPOINTMENTS

 

  • Expenditure Secretary Ajay Narayan Jha was appointed the new Finance Secretary. Jha, a 1982-batch IAS officer of Manipur Tripura cadre, succeeds Hasmukh Adhia who retired on November 30.

 

SPORTS

 

  • State Bank of India has roped in Asian Games gold medalist Swapna Barman as brand ambassador for its digital app YONO. YONO (You Only Need One), the bank’s digital platform that makes both lifestyle and banking available through a single app, was launched exactly a year back.
    • Swapna won gold medal in Heptathlon in Jakarta Asian Games.

 

BOOKS & AUTHORS

 

  • Admiral Sunil Lanba, PVSM, AVSM, ADC Chief of the Naval Staff, released a book titled ‘Blue Waters Ahoy!’ – chronicling the Indian Navy’s History from 2001-10.
    • The book has been authored by Vice Admiral Anup Singh, who retired as the Flag Officer Commanding-in-Chief of Eastern Naval Command in 2011.