Today TNPSC Current Affairs August 09 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
    • நாடாளுமன்ற இரு அவைகளிலும் அண்மையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
    • அந்த மசோதாவுக்கு அவர் தற்போது தனது ஒப்புதலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியாவுடனான சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
    • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சிறப்புப் பிரிவை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    • கடந்த 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1976 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் தேதி சம்ஜௌதா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில், இந்தியப் பகுதியில் தில்லியிலிருந்து அட்டாரி வரையிலும் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஐரோப்பிய மாஸ்டர்ஸ் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
    • இத்தாலியின் டுரின் நகரில் ஐரோப்பிய மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஜுலை 24-ஆம் தேதி தொடங்கி ஆக. 5-ஆம் தேதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    • இதன் மூலம் வரும் 2021-இல் ஜப்பான் கான்ஸாய் நகரில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கும் இந்திய மகளிரணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

  • உலக வில்வித்தை (WA) அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்திய வில்வித்தை சங்கத்தை இடைநீக்கப்பட்டுள்ளது.
    • இரண்டு இணையான அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் AAI, WA இன் வழிகாட்டுதல்களை மீறியது.
    • இடை நீக்க உத்தரவுப்படி, இந்திய வில்லாளர்கள் இந்தியக் கொடியின் கீழ் பங்கேற்கக்கூடிய கடைசி நிகழ்வு மாட்ரிட்டில் நடைபெறவுள்ள உலக வில்வித்தை இளையோர் சாம்பியன்ஷிப் ஆகும்.

 

 

விருதுகள்

 

  • குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
    • பாரத ரத்னா விருது, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அரசு கௌரவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • President Ram Nath Kovind has given his approval to National Medical Commission Bill 2019. 

    • The move came after Parliament passed the bill in the just-concluded session. The Bill seeks to repeal the Indian Medical Council Act, 1956. 

 

 

INTERNATIONAL NEWS

  • Pakistan on Thursday refused to send the Samjhauta Express to India, claiming that the train’s crew which is two drivers and a guard were scared of entering Indian territory. The action was a response to India stripping Jammu & Kashmir of its special status.
    • Attari international railway station superintendent A K Gupta said the Pakistani side informed them before the train’s scheduled arrival time of 12.30pm that the train crew had refused to enter India due to security concerns.

 

 

SPORTS

  • Our Indian Women’s hockey Team qualified for the world master Championship by winning  bronze medal in European master Hockey games  held at Dorin , Italy.
    • The World master Games will be held in kansai, Japan.

 

 

 

  • World Archery Suspended the faction-ridden Archery Association of India (AAI).In an earlier decision, the WA executive board had given a July 31 deadline to both AAI factions to resolve their disputes, including parallel elections. The matter is now in court.

 

 

AWARDS

  • Former President Pranab Mukherjee, Assamese singer-composer Bhupen Hazarika and social activist Nanaji Deshmukh will be awarded the country’s highest civilian award, Bharat Ratna, by President Ram Nath Kovind today. Bhupen Hazarika and Nanaji Deshmukh will be honoured posthumously.
    • The announcement for Bharat Ratna was made on January 25 in a statement issued by the Rashtrapati Bhavan.