Daily Current Affairs 21 May 2021
Daily Current Affairs in Tamil
மே 21
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- குஜராத்தின் கிராமபுறங்களில் கோவிட்-19 பரவுவதை சரிபார்க்க குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி மே 1 முதல் 15 நாள் “Maur Gam – Corona Mukt Gam” அல்லது “My village – Corana Free Village” பிரச்சாரத்தை தொடங்கினார்.
- இந்த பிரச்சாரம் குஜராத் மாநிலம் உருவான மே 1 அன்று தொடங்கப்பட்டது.
- இந்த பிரச்சாரம் கிராம புறங்களில் போதுமான அளவு மருந்துகளை வழங்க வழி நடத்தும் மற்றும் கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.
- முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சமன்லால் குப்தா ஜம்மு காஷ்மீரில் காலமானார்.
ஜம்முவை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான சமன் லால் குப்தா, 50 ஆண்டுக்கும் மேலாக அரசியலில் இருந்தார்.- இருமுறை ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை உறுப்பினராகவும், 3 முறை ஜம்முவின் உதம்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
- 1999 முதல் 2004 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவராகவும் இரு முறை பொறுப்பு வகித்துள்ளார்.
- கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50000 நிவாரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அறிவித்துள்ளார்.
- வீட்டில் வருமானம் ஈட்டுபவர்கள் உயிரிழந்தால் மாதம் ரூ.2500 நிவாரணமாக வழங்கப்படும்.
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2500ம் கல்வி செலவுகளை அரசாங்கமே ஏற்கும் எனவும்Read More…