September 14

Date:14 Sep, 2017

September 14

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 14

                                          தேசிய செய்திகள்

 

 

 • தெலுங்கானா மாநில பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக்க முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

 

 • இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான ‘கிரீமி லேயர்’ வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • இரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்கிறவர்கள் அடையாள அட்டையாக மொபைல் ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான ‘யுஐடிஏஐ’, ‘எம் ஆதார்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டும் 1222 தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய வங்கி கணக்குகளை சட்டப்படி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

 • தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் மற்றும் பாடம் நடத்தாமல் சம்பளம் வாங்குவதைத் தடுக்க ‘டிஜிட்டல்’ விபர பதிவு அமலுக்கு வருகிறது.

 

 • இந்தியாவிலேயே ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மருத்துவப் பணியாளர் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

 

 • தமிழகத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக தனுஷ்கோடி உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனுஷ்கோடி வருகின்றனர்

 

 • ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 30 கோடி குடும்பங்கள் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது துணை உதவியாளராகவும், தகவல் தொடர்புத் துறை துணை செயலராகவும் “ராஜ் ஷா”(இந்திய வம்சாவளி) நியமித்துள்ளார்.

 

 • சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக அந்நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர் “ஹலீமா யாக்கோப்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • உலகின் மிக உயரமான மணல் கோட்டை அமைத்து ஜெர்மன் மணல் சிற்பக் கலைஞர்கள் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர். (இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது).

 

 • பச்சைக்குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இங்க் நச்சு துகள்கள் கொண்டுள்ளதால் அது உடலின் உள்ளே சென்று நிணநீர் முடிச்சுகளை பெரிதாக்கி நோய் எதிப்பு சக்தியை கடுமையாகப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • இந்தியா – ஜப்பான் இடையோன 12வது வருடாந்திர மாநாடு இன்று(செப்டம்பர் 14) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

 

 • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரி சீர்த்திருத்த சட்டப்படி அதிக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் அதிகமான வரியை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

 

 • அமெரிக்காவில் வெளிநாட்டு அகதிகள் நுழைவதற்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • சிட்னி(ஆஸ்திரேலியா) நகரில் உள்ள கடற்கரையில் ஒபேரா ஹவுஸ் உள்ளது. இங்கு செயற்கை கடற்பாறைகளை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர். செயற்கை பாறை அமைப்பதால் அப்பகுதியில் வளங்களை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. தற்போது உள்ள மக்கள் தொகையை காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் கங்காரு இனம் உள்ளது

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • வாஸ்கடுவாவில்(இலங்கை) 2வது மேற்காசிய அளவிலான செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா என்ற சிறுவன் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் பிளிட்ஸ் முறையில் 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

 

 • ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான 63வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பார்சிலோனாவில் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் இத்தொடரில் 32 அணிகள் பங்கு பெறுகின்றன.

 

 • 57வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 70வது வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

 

 • கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் (தென்கொரியா தலைநகர் சியோ) இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா – கனடா இடையிலான “உலக குரூப் பிளே ஆஃப் சுற்று” செப்டம்பர் 15 முதல் 17 வரை எட்மான்டனில்(கனடா) நடைபெறவுள்ளது.

 

 • அஞ்சல் துறை சார்ப்பில் நடைபெறுகிற 31வது அகில இந்திய கபடி போட்டியில் தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • வலைதளத்தில் மின்னணு பரிவத்தனைகளுக்கு மட்டும் பயன்படும் ‘டிஜிட்டல்’ முறையை சட்டப்பூர்வ மதிப்புடன் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 

 • வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டும் அந்த சேவைக் கட்டணத்தை வருமான வரிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

 • திவால் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு(12) வருமானவரி மற்றும் குறைந்த பட்ச மாற்று வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி சேவைகள் துறைக்கு ‘அசோசெம்’ வலியுறுத்தியுள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரிக்கு பிறகு தொழில் துறையில் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் என்று ஜப்பானை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான நொமுரா தெரிவித்துள்ளது.

 

 • பங்குச் சந்தையில் வர்த்தக நேரத்தை உயர்த்தும் திட்டம் ஏதுவும் இல்லை. தற்போது போல 9.15am – 3.30pm அ வரை பங்கு சந்தைகள் செயல்படும் என்று பிஎஸ்இ தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் கூறியுள்ளார்.

 

 • கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்கள் ரூ.62000 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கின்றனர். நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடி மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர் என்று இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனமான ஆம்பி தெரிவித்துள்ளது.

 

 • உலக புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் தனது புதிய தயாரிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு(2017) முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்ட ‘ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்’ என்ற புதிய 2 ஐபோன்களை வெளியிட உள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

 • PM Modi and PM of Japan Shinzo Abe hold grand road show in Ahmadabad

 

 • The Ministry for electronics and Information Technology has launched a nationwide hackathon ‘Open GOV Data Hack’ to support and showcase potential ideas for inner idea

 

 • Maharashtra govt planning to ban plastic carry bags from next year

 

 • French Ambassador Alexandre Ziegler in Maheshwari village in Haridwar District opens Power Plant

 

 

 

International News

 

 • London Retains its crown as world’s Top financial centre

 

 

Banking and Economy

 

 • Paytm Payments Bank partner with NPCI(National Payment Corporation India) to launch a RuPay powered digital debit card

 

 • India has been placed at 103 Rank on the world Economic Forum’s Global Human Capital Index. Which is topped by Norway

 

 • The 2600 crore high – speed rail training centre for the first bullet train project will be set up in Vadodara

 

 • TCS(Tata Consultancy Services) become the country’s second most valuable firm

 

 

Sports

 

 • Maharashtra has won the Chief Minister’s Cup with 45 Gold  medal at National Kickboxing Championship held at Raipur

 

 • Sumit Nagal of India win’s S.R .SUBRAMANIAM memorial ITF futures men’s tennis championship

 

 

Appointments

 

 • Halimah Yacob has become the first women and 8th president of Singapore

Call Now
Message us on Whatsapp