September 13

Date:13 Sep, 2017

September 13

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 13

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • உயர் கல்வி நிறுவனங்களில் மிகவும் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்

 

 • இந்தியா – ஜப்பான் கூட்டணியில் இந்தியாவில் அமைக்கப்பட உள்ள புல்லட் இரயில் திட்டத்தை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று இரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூபாய் நாணயங்கள் (ரூ.100 மற்றும் ரூ.5) வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • மத்திய பிரதேசத்தில் பள்ளிகளில் வருகை பதிவேட்டின் போது மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” என கூற வேண்டும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய்ஷா உத்தரவிட்டுள்ளார்.

 

 • கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 209032 போலி நிறுவனங்களின் பதிவை மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் ரத்து செய்தது. ஆனால் தற்போது பதிவு நீக்கம் செய்யப்பட்ட ஒரு லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • 144 ஆண்டுகளுக்கு பிறகு (தமிழகம்) மயிலாடுத்துறையில் காவிரி மகாபுஷ்கார விழா நேற்று (செப்டம்பர் 12) கொண்டாடப்பட்டது.

 

 • ஜாக்டோ – ஜியோ அமைப்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்து ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளனர்.

 

 • நீலத் திமிங்கல விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • புதிய வாகனங்கள் வாங்க லைசென்ஸ் கட்டாயம் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

 • உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது என்று சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, சதீஷ்லோகிதாசன் கூறியுள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் ஷெஃபீல்ட் மற்றும் பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிப பிழம்பை பற்றிய ஆய்வு (1996) தொடங்கியது முதல் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய பிழம்புகளில் இது 8வது மிகப் பெரிய பிழம்பாகும். இத்தகைய வெடிப்பு 100 கோடி ஹைட்ரஜன் வெடிகுண்டுகளின் ஆற்றலுக்கு சமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • இந்தியா – பெலாரஸ் இடையே இராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் தங்குவதற்குத் முகாம் அமைக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.

 

 • ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்சிட்’ மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய அமைப்பிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறுகிறது.

 

 • வடகொரியாவிற்கு கச்சா எண்ணெய், எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, ஜவுளி இறக்குமதிக்கு தடை, வெளிநாடுகளில் உள்ள வடகொரிய தொழிலாளர்களுக்கு புதிய விசா வழங்கப்பட மாட்டாது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதிய தடையை விதித்தது.

 

 • அமெரிக்க வெளியுறவுத் துறையில் பொருளாதார துறைக்கான ராஜ்ய பொறுப்பாளராக “மனிஷா சிங்கை”(இந்திய வம்சாவளி) ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

 

 • லண்டனில், உலகின் மிகப் பெரிய ஆயுதக் கண்காட்சியை சர்வதேச பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான அமைப்பு நடத்தியது

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்திய அஞ்சல் துறையின் 31வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் (செப்டம்பர் 12) நேற்று தொடங்கியது இதில் 10 மாநிலங்களை சேர்ந்த அஞ்சலக அணிகள் கலந்து கொள்கின்றன. இத்தொடர் செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 • பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி டிரா செய்தது.

 

 • கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப் முன்னேறியுள்ளார்.

 

 • தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் “டு பிளெஸ்ஸிஸ்” கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • குளிர்க்கால ஒலிம்பிக் போட்டி 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை பியோங்சங்(தென் கொரியா) நடைபெறவுள்ளது.

 

 • கிரிக்கெட்டில் தற்போது உள்ள விக்கெட் கீப்பர்களில் “டோனியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்று இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

 

 • லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணிக்காகாக 38 முறை ஹாட்ரிக் அடித்து மெஸ்சி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ஜப்பானில் ஓட்டுநர் அல்லாத கார்களை இயக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது

 

 • பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களை(டவர்களை) நிர்வகிக்க தனி நிறுவனம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

 • எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஒ) செபி அனுமதி வழங்கியுள்ளது.

 

 • தனியார் வங்கிகளுக்கான சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்திலும், ஹெச்டிஎப்சி 2வது இடத்திலும் டிசிஎஸ் 3வது இடத்திலும் உள்ளது.

 

 • வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பன்முக பயன்பாட்டுக்கான என்ஜின்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • நாட்டின் சில்லறை பணவீக்கம் 5மாத இடைவெளிக்கு பிறகு சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

 

Current Affairs

National News

 

 • India and Belarus have released a postage stamp to make 25 years of diplomatic ties between the sides

 

 • MOU between India and Morocco in the areas of drug regulation and pharmaceutical quality control and communicable disease among other

 

 • MOU between Central Silk boards (CSI). India and National Institute of Agro biological Science (NIAS) Japan for collaborative research in the field of Silkworm and Silk

 

 • MOU between India and Armenia on Co-operation in the field of Disaster management

 

 • Approved a “Dairy Processing & Infrastructure Development Fund” with an Outlay of Rs.10,881 crore during period from 2017-18 to 2022-29

 

 • Dr. Harshavardhan inaugurated  the conference on “Sustainable Landscapes & Forest Ecosystem : Theory to practice” in New Delhi

 

 • The union minister of State for Ayush Shripad Yesso Naik inaugurated India’s first state of art virology lab at Dr.Anjali Chatterjee Regional research institute for Homeoopathy

 

 • To bring the food safety Inspection and Sampling the food regulatory FSSAI has launched a online platform ‘FOSCORIS’

 

International News

 

 • The government has imposed a countervailing duty for 5 years on imports of certain flat steel products from China to guard domestic players

 

Economy

 

 • Project Insightlikely to be launched in Oct 2017 will big data analytics to match information from social media sites to deduce mismatches between spending pattern and Income declaration

 

 • India’s first bullet train between Ahmadabad and Mumbai is likely to be completed by 2022  the year marking 75 years of India’s Independence

 

 • National Pension System(NPS)  entry age limit raised to 65 years

 

Science

 

 • Two mountain ranges on Pluto have been named after Tenzing Torgay and Edmund Hillary

 

Sports

 • Asian games gold medalist Priyanka Panwar banned for Eight years by National Anti – Doping Agency(NADA)

 

 • India continued to be at the top of the ICC test rankings but Australia Slipped one rung to fifth in the latest list

 

 • Rafael Nadal won 2017 US Open Title for his 16th Grand Slam Title 

   

   

   

Call Now
Message us on Whatsapp