September 12

Date:12 Sep, 2017

September 12

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 12

                                          தேசிய செய்திகள்

 

 

 • சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125வது ஆண்டு தினம் மற்றும் பண்டித தீனதயாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் (செப்டம்பர் 11)நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 • தேசிய அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதி வன தியாகிகள் தினம்(வனத்தை பாதுகாக்க உயிர் நீர்த்த வனத்துறை ஊழியர்களை நினைவு கூறும் வகையில்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று கோவையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 • தமிழகத்தில் ஆதி திராவிட மாணவிகளுக்கு என உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் “கிருஷ்ணன் பால் குர்ஜர்” தெரிவித்துள்ளார்.

 

 • தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு 60 தில் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஓய்வூதிய ஒழுங்காற்றல் மற்றும் மேம்பாட்டு ஆணையம்(பிஎஃப்ஆர்டிஏ) தெரிவித்துள்ளது.

 

 • கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவு மையங்களை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • ஆதார் விவரங்களைச் சமர்பிக்காவிட்டால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

 • கணினி விளையாட்டுகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு ‘லேப் – டாப்’களில் விளையாட்டை தடை செய்யவும், பதிவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 2030ம் ஆண்டுக்குள் காச நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

 • சிங்கப்பூரில் உள்ள உணவு, கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் விதமாக சிங்கப்பூர் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியம் இணைந்து ‘ஆர்வம் நிறைவேறும்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளது.

 

 • பொதுவாக ஒட்டுண்ணிகள் தாம் தங்கி வாழும் பிராணிகளுக்கு தீமை விளைவிப்பதாக இருக்கும். ஆனால் மனித உடலில் உள்ளவை நோய்த் தாக்கங்களை கட்டுபடுத்தக் கூடியதாக இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

 • அமெரிக்காவில் இர்மா புயலின் தாக்கத்தால் பஹாமாஸ் கடற்கரையில் அதிகபடியான கடல் நீர் உள்வாங்கியுள்ளதால்(மையப்பகுதிக்கு சென்றுள்ளதால்)சுனாமி வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியவற்றை வட கொரியாவிற்கு ஏற்றுமதி செய்யவதை தடை விதிக்க ஐ.நா முடிவு செய்துள்ளது

 

 • மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் புகலிடம் தேடியுள்ள அகதிகளின் எண்ணிக்கை 3.31 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

 • வர்த்தகத்தை மேம்படுத்துவது, முதலீட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 16வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • சர்வதேச ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் ரஃபேல் நடால் முதலிடத்தில் உள்ளார். ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 2வது இடத்தில் உள்ளார்.

 

 • பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்) சார்பில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • சியோலில்(கொரியா) கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று (செப்டம்பர் 12) தொடங்குகிறது. இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்

 

 • லீலே இன்விடேஷனல் ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை “பிரியங்கா பன்வார்” ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது.

 

 • 3 ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பெயர் புறக்கணிக்கப்பட்டது.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பான் எண்ணுடன், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதங்களில் நேரடி வரி வசூல் 2.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • 2030 ஆண்டிற்குள் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி பேட்டரி கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

 • விளம்பரதாரர்களிடமிருந்து பயனாளர் தகவல்களை பாதுகாக்க தவறிய பேஸ்புக் நிறுவனத்திற்க்கு தகவல் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ரூ.9.2 கோடி அபாரதம் விதித்துள்ளது

 

 • உள் நாட்டில் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்துர் தெரிவித்துள்ளார்

 

 • நிதி நெருக்கடி காரணமாக திவால் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள ஜேபி இன்பிராடெக் நிறுவனம் முதல் கட்டமாக ரூ.2000 கோடியை டெபாசிட் செய்யுமாறு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Current Affairs

 

National News

 

 • The government will undertake school Chalo Abhiyan from next year to enroll  70-80 lakh Students in the Country who are out of Schools

 

 • Vice president M.Venkaiah Naidu laid the foundation Stone for Ranchi Smart City coming up on the Heavy Engineering Corporation. This would be Country’s first green – field smart city

 

 • Maharashtra government has announced plans to launch 112 as a single integrated helpline number for police, Fire brigade and ambulance service

 

 • An eight feet bronze statue of Netaji Subash Chandra Bose was unveiled at the Naval Base INS Netaji Subase in Kolkata

 

 • The second world congress of Optometry began in Hyderabad, Telangana to discuss new ideas and share research and knowledge about various Facets of  optometry

 

 • Kochi will host the fifth edition of the ‘Coastal Shipping and In water Transportation Business summit 2017’ on sep 22

 

 • Japan PM Shinzo Abe will begin a two day visit on 13th sep during which he and Modi will had the 12th Indian – Japan  summit in Gandhi Nagar in Gujarat

 

 • President of Balarus AG Lukashenko has arrived in New Delhi on a two day visit of India

 

 

International News

 

 • UN has said that the security operation targeting Rohingya Muslims in Myanmar   ‘Seems a textbook example of ethnic cleansing’ urging the country to end the ‘Cruel Military Operation’ in its Rakhine State

 

 • Prince Charles becomes longest – serving prince  of Wales in history

 

 

Banking & Finance

 

 • Banks without Aadhaar enrolment Centers of face Rs.20000 fine from October

 

 • Bharat Financial, Induslnd Bank sign exclusive Merger talk deal

 

 

Sports

 

 • India has won 2nd South Asian Basket ball, SABA, under 16 championship India remained unbeaten in its all four Matches and accumulated 8 points

 

 • The Renowned Indian Badminton legend Prakash  Padukone has selected for the first life time award by Badminton Association of India

 

 • The world Senior Badminton championship begin in Kochi

 

 

Book Launch

 

 • Microsoft CEO’s first book ‘Hit Refresh’

Call Now
Message us on Whatsapp