September 11

Date:11 Sep, 2017

September 11

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 11

                                          தேசிய செய்திகள்

 

 

 • காஷ்மீர் போலீஸாருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராம்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • 108 ஆம்புலன்ஸ்களை தொடர்பு கொள்ளும் அழைப்பாளரின் இடத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்டுபிடிக்கும் வசதியை(குறிப்பிட்ட காலத்திற்குள் போய் சேரும் ஜிபிஎஸ் வரைபடம் ஓட்டுநரின் முன் உள்ள மொபைல் போனுக்கு அனுப்பப்படும்) தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) அறிமுகம் செய்துள்ளது.

 

 • மேற்கு வங்கத்தின் பெயரை “பங்களா” மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • செப்டம்பர் 11 இன்று பாரதியாரின் 96வது நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு பாரதியாரின் பாடல்ளை தேசிய உடமையாக்கிள்ளது மற்றும் பாரதியாரை தேசிய கவிஞராகவும் அறிவித்துள்ளது.

 

 • ஆதார் விவரத்தை இணைக்காத சிம்கார்டுகளின் சேவைகள்  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள சின்னாறு அணை 12 ஆண்டுகள் கழித்து தற்போது நிரம்பியுள்ளது.

 

 • “ஸ்வச்சதா” செயலி மூலம் பொது மக்கள் அனுப்பும் புகார்கள் (குப்பைகள் அகற்றாதது, பொது கழிவறைகள் அசுத்தமாக இருப்பது) மீது நடவடிக்கை எடுக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை 23வது(4041 நகரங்களில்) இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ளது.

 

 • தெற்கு ரயில்வே சார்பில் 162 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீராவி ரயில் இன்ஜின் சென்னை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரையில் நேற்று(செப்டம்பர் 10) இயக்கப்பட்டது.

 

 • நோயாளிகளுக்கு பிராண வாயுவை எளிதாக செலுத்துவதற்கான ‘தொன்டைக்குழி சுவாசம்’ என்னும் புதிய சுவாச முறையை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் எம். பெரியசாமி கண்டுபிடித்துள்ளார்.

 

 • திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கான ‘ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்’ விருது மத்திய மனித வள மேம்பாட்ட துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • பொது நுழைவுத் தேர்வுகளுக்கான வினா-விடைகள் செல்போன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • பிரிட்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எழுத்து முறை தேர்வை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.(மாணவர்களின் கையெழுத்து சரியில்லாத காரணத்தினால்)

 

 • அமெரிக்காவில் இன்று(செப்டம்பர் 11) இரட்டை கோபுரம்(உலக வர்த்தக மையம்) தகர்க்கப்பட்ட 16வது ஆண்டு நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 • சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் கார்களை உற்பத்தி செய்வதில் சீனா முதலிடத்தில் உள்ளது.

 

 • ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36வது கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 11) தொடங்கி செப்டம்பர் 29ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறுகிறது.

 

 • புற்று நோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் காணும் வகையில் “மாஸ்பெக் பேனா” என்ற தொழில்நுட்பத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டபிடித்துள்ளனர்.

 

 • இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகள் அரசுமயமாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஏதென்ஸில்(கிரீஸ்) இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம்(முதல் கிராண்ட்ஸ்லாம்) வென்றார்.

 

 • உக்ரைன் நாட்டில் நடைபெற்ற கார்கிவ் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நந்தகோபால் – ரோஹன் கபூர் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் நந்தகோபால் – மஹிமா அகர்வால் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றனர்.

 

 • இந்திய தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அந்தோனி அமல்ராஜ் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 2வது இடத்திலும், அஸ்வின் 3வது இடத்திலும் உள்ளனர்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் www.pgportal.gov.in என்ற வலைத்தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.

 

 • கணினி திரை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான சரக்கு – சேவை வரி ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது.

 

 • ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிடு (ஐபிஓ) மூலம் ரூ.5,700 கோடியைத் திரட்ட முடிவெடுத்திருக்கிறது.

 

 • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அடுத்த இரு ஆண்டுகளில் 6000 பணியாளர்களுக்கு பணி வழங்க முடிவு செய்திருப்பதாக நிறுவனத்தின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி யூபி பிரவீண் ராவ் தெரிவித்துள்ளார்.

 

 • கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் வரி ஏய்ப்பை தடுப்பதற்காகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திரட்ட வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான “புராஜெக்ட் இன் சைட்” என்ற திட்டத்தை அடுத்த மாதம்(அக்டோபர்) அறிமுகப்படுத்த உள்ளது

 

 • ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் “ஐ டூ, வாட் ஐ டூ” என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

 

 

 

Current Affairs

 

National News

 

 • The centre has issued a notice, stating all that all the SIM cards have to be linked to Aadhaar before Feb 2018 to avoid deactivation.

 

 • Amazon opened its largest fulfillment centre in India, Hyderabad. 

 

Sports

 

 • The 2017 US open is the 137th edition of tennis US open and final Grand slam event of the year.
  • Winners are
  • Men’s Singles            :  Rafael Nadal (Spain)
  • Women’s Singles       :  Sloane Stephens
  • Mixes Doubles           :  Martina Hingis (Switzerland) and Jamie Murray (British)

 

Awards

 

 • Sikkim CM Pawan Chamling was honoured for his pioneering work in the field of organic farming during a ceremony at Germany’s Lagau on the occasion of the one world festival.

Call Now
Message us on Whatsapp