September 07

Date:07 Sep, 2017

September 07

                                                                                                                                                                                             

   We Shine Daily News

தமிழ்

   செப்டம்பர் 07
 தேசிய செய்திகள்

 

 • இந்திரா காந்திக்கு பின்(2 பெண்) பாதுகாப்புத்துறை அமைச்சராக சீதாராமன் பொறுப்பேற்றார்.

 

 • ஜெர்மன் குடியுரிமை வைத்திருந்த தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • சர்வதேச ஆராய்ச்சிக்காக பயன்படும் 20 மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 

 • சென்னையில் ஐ.டி நிறுவனங்களை இணைக்கும் வகையில் 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு 104 இரயில் நிலையங்களுடன் புதிய மெட்ரோ இரயில் பாதை அமைக்க மெட்ரோ இரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 • வாணியம் பாடி(வேலூர்) பாலாற்றில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

 • உலக தரம் வாய்ந்த ஆயிரம் பல்கலைக் கழகங்களுக்கான (டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்) தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 30 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.(கடந்த ஆண்டு 31 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது)

 

 • ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டங்களில் பேரிடர் கால பல்நோக்கு மையங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • இந்தியாவிற்கு வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இந்தியா இலவச விசா வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • Tunisian National Heritage Institute மற்றும் இத்தாலியில் உள்ள Sassari பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக கடலுக்குள் மூழ்கிய நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்

 

 • வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதற்கும் அந்நாட்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஐ.நா சபையில் கோரிக்கை வைத்தது.

 

 • சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போரின் போது அந்நாட்டு அரசு “சரின் விஷ வாயு” தாக்குதல் நடத்தியுள்ளது என்று ஐ.நா. குழு ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளது.

 

 • ஸ்வீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், உயரமாக இருப்பவர்களுக்கு நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக் தெரிவித்துள்ளனர்.

 

 • இந்தியா மற்றும் மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது)

 

 • குழந்தைகளாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு அந்நாட்டிலேயே வேலை செய்ய உரிமம் அளித்த டாகா எனப்படும் Deferred Action for Children Arrival திட்டத்தை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் முழுமையாக நீக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 • இலங்கை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச் சட்ட வரையில் திருத்தங்கள் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

 • ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை கையைழுத்திட்டுள்ளன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தியது.

 

 • இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்(54 பந்துகளில் 82 ரன்கள்)

 

 • செப்டம்பர் 17ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒரு நாள் போட்டிகள் தொடங்குகிறது.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்ட்ரே ருப்லேவை (ரஷ்யா) வீழ்த்தி, நடால் அரையிறுதிக்கு முன்னெறியுள்ளார்.

 

 • காமன் வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது நாளில் இந்தியாவிற்கு 3 தங்கம் உட்பட 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

 

 • ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் விக்ரம் மல்ஹோத்ரா, ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோர் காலியிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • 3500 அரசு திட்ட பலன்களை நேரடி மானியம் மூலம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளை 15 ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • சுங்க அதிகாரிகள் மேற்பார்வையின்றி, ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு அந்நிறுவனங்களே சீல் வைக்கும் முறை அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

 • நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக உள்ளது என “மோர்கன் ஸ்டான்லி” ஆய்வு மூலம் தெரிவித்துள்ளது.

 

 • 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

 

 • ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்தது.

 

 

Current Affairs

 

National

 

 • Baijendra Kumar to take charge as National Mineral Development Corporation

 

 • Vice president Venkaiah Naidu honors 219 teachers with National award

 

 • India and Nepal have begun their joint military Exercise in the western part of Nepal focusing on counter terrorism and forest fighting operation

 

 • Odisha got its first state run medical college, SLNMCH in 54 years

 

 • Gauri Lankesh a noted won journalist shot dead for raising anti – establishment voice in Karnataka

 

 • DIKSHA is the new portal launched to provide world class digital infrastructure for teacher and make their task easier

 

International

 

 • National Highway Authority of India (NHAI) awarded its first International project in Myanmar to Punj Lloyd – Varaha

 

 • India and Myanmar sign eleven MOU in a range of sector

 

 • India has handed over an off shore patrol vessel Varuna, to Sri Lanka

 

 • Seychelles has become the ninth member to ratify the International Solar Alliance (ISA) Framework Agreement

 

 • India has started exporting petroleum product to Myanmar by road, discovering a new market for its fast growing oil refining sector

 

 

Banking and Business

 

 • Sankara Narayanan takes charge as MD & CEO of Vijaya Bank

 

 • Karur Vysya Bank has announced the appointment of P. R Seshadri as its MD & CEO

 

 • SBI is currently beta testing its intelligence assistant called SIA – SBI Intelligent Assistance

 

 

Sports and Entertainment

 

 • India on 5th defeated Sri Lanka by Seven wickets in the one – off 720 International cricket match in Colombo

 

State

 

 • Union Minister Nitin Gadkari launched ‘Smart E’ a first fleet batch of 1000 E rickshaws from Huda City, Gurugram to provide cost effective and pollution free substitute in transport system

 

 • Mother Teresa declared as Co- patron of Archdiocese of Calcutta, 131 years after St.Francis Xavier was declared as first patron

 

 • Jharkhand governor gives asset to religious freedom bill 2017. Jharkhand becomes the Seventh state to have anti – conversion law.

 

 

 

“>

Call Now
Message us on Whatsapp