September 04

Date:04 Sep, 2017

September 04

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 04

                                          தேசிய செய்திகள்

 

 

 • தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நேற்று(03.09.2017) இராணுவ மந்திரியாக பதவியேற்றார். இந்திரா காந்திக்கு பிறகு இராணுவ மந்திரியாக பதவியேற்கும் இரண்டாவது பெண் – நிர்மரா சீதாராமன் ஆவார்.

 

 • விளையாட்டு துறை அமைச்சராக, துப்பாக்கி சுடுதல் வீரரான ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • கேரளாவைச் சேர்ந்த “அல்போன்ஸ் கன்னன்தானம்” நேற்று(03.09.2017) மத்திய மந்திரியாக பதவியேற்றார்.

 

 •  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், மின் ஆளுமை மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை, உள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறைகளில், பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் ‘ஆன்லைன்’ மூலம் வழங்கப்படுகிறது. அதிக சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கும் மாவட்டகளுக்கு மாதந்தோறும் “ரேங்க்’ வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.

 

 • மும்பையில் சைக்கிள்களுக்கு தனியாக பாதை அமைக்கப்படும் என மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

 

 • நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 800 பொறியியல் கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.இ முடிவு செய்துள்ளது.

 

 • திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள பஞ்செட்டியில், தமிழக அரசு சார்பில் நேற்று(03.09.2017) எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டனர். “பல்நோக்கு தொழில் நுட்ப பூங்கா” விரைவில் ஆவடியில் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் (எடப்பாடி பழனிச்சாமி) தெரிவித்துள்ளார்.

 

 • கேரள மாநில அரசு பொது விநியோக திட்டம் மூலமாக “மாடித் தோட்டம் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் காய்கறி உற்பத்தியில் மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான நாற்றுகள் மற்றும் இதர விதைகள் அனைத்தும் தமிழகத்திலிருந்து எடுத்து செல்லப்படுகிறது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • சீனாவின் ஷியாமென் நகரில் 9வது பிரிக்ஸ் மாநாடு இன்றும்(04.09.2017), நாளையும்(05.09.2015) நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

 • இலங்கையில் நேற்று(03.09.2017) 151வது “இலங்கை போலீஸ்த்துறை ஆரம்பிக்கப்பட்ட தினம்” கொண்டாடப்பட்டது.

 

 • விண்வெளியில் தங்கி இருந்த அமெரிக்க பெண் விஞ்ஞானி பெக்கி வில்சன், அமெரிக்க விண்வெளி வீரர் ஜாக் ஃபிஷர் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஃப்யூடோர் யூர்கிசின் ஆகியோர் இன்று(04.09.2017) தரையிறங்கினர். பெக்கி வில்சன், விண்வெளியில் நீண்ட நாட்களை கழித்த(665ம் அதிகமாக) பெண் மற்றும் முதல் அமெரிக்கர் என்ற சிறப்பையும், சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார். இவர் மூன்று முறை புவிவட்டப் பாதையை சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் இயங்கி வந்த ரஷ்ய தூதரகங்களை அமெரிக்க அரசு நேற்று(03.09.2017) மூடியது.

 

 • துனிசியா நாட்டுக்கு வடகிழக்கு கடற்கரையில், சுமார் 20 ஹெக்டர் பரப்பளவில் இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 • பல இலட்சம்(60 லட்சத்திற்கு) மனிதர்களின் மண்டை ஓடுகளால் உருவான குகை “கேட் ஆஃப் ஹெல்” – பாரிஸில் உள்ளது. இது உலகின் மிகப்பெரிய கல்லறை என்று அழைக்கப்படுகிறது.

 

 • பிரான்ஸில் 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது “அதிகமான கோடை கால வெப்பம்” இந்த (2017)ஆண்டில் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணு ஆயுத(ஹைட்ரஜன் குண்டு) சோதனை வெற்றியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

 

 • வடகொரியாவுடன் வணிக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா தடை செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடந்த 46 ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 100 பேரை ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்

 

 • ஆஸ்திரேலியா, வங்காள தேசம் இடையேயான கடைசி ஒருநாள் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று(04.09.2017) நடைபெறுகிறது.

 

 • இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • இந்திய அணியின் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்ன்ஸ் நீக்கம் செய்யப்பட்டார்.

 

 • இத்தாலி பார்மலா 1 கார் பந்தயம் 13வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தில் உள்ளார்.

 

 • மதுரையில் நேற்று(03.09.2017) நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் காஞ்சிபுரம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • டெஸ்லா நிறுவனம், அதிவேக சூப்பர் காரை தயாரித்ததோடு மட்டுமின்றி பந்தய களத்தில் வெற்றி பெறும் விதமாக புதிய பேட்டரிக் கார்களைத் தயாரித்து சாதனைப் படைத்தது

 

 • வங்கிகளின் கடன் வழங்கும் அளவு 2016 – 2017ம் நிதி ஆண்டில் 8.1 சரிந்துள்ளது என்றும், சேமிப்பு அளவு அதிகரித்துள்ளது என்றும் “டன் அண்ட் பிராட்ஸ்டிரீட்” நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

 

 • ஆதித்யா பிர்லா குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.42 லட்சம் கோடியாக உள்ளது.

 

 • நாராயணமூர்த்தி, நந்தன் நீலகேணி உள்ளிட்ட இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 1.77 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது.

 

 • பிரான்ஸை சேர்ந்த ரொனால்ட் நிறுவனம் சர்வதேச அளவில் விளங்கும் எஸ்யுவி மாடலான கேப்டுர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டின், ஏப்ரல் – ஜுன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த பொது கடன், 3.6 சதவீதம் அதிகரித்து 63.35 லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

 

 • 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் டி20 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் வென்றுள்ளது.

 

 

Current Affairs

 

 • Karnataka to merge health Schemes launch ‘Arogya Bhagya’ to cover all the 1.4 crore household

 

 • Ahmadabad’s walled city gets India’s first world heritage city. India now has a total of 36 world heritage Inscription : 25 Cultural, 7 natural and 1 mixed site

 

 • Nirmala Sitharaman is the first woman defence minister

 

 • Rajiv Kumar, assumed office as the new secretary , Department of financial services, Ministry of finance

 

 • Nuclear Scientist V. Kamachi Mudali has been appointed the chief Executive of the Heavy Water Board

 

 • Anita Karwal replaced Rajesh Kumar Chaturvedi as Central Board of Secondary Education chairperson

 

 • Chaturvedi was transferred to the National Skill Development Agency

 

 • Hyderabad International Airport Limited has bagged the National award for Excellence in energy management at a conference by the confederation of Indian Industry.

 

 • India gets its first Indigenous Sniper rifle from west Bengal 

   

   

   

   

Call Now
Message us on Whatsapp