September 03

Date:03 Sep, 2017

September 03

                                                                                                                                                                                             

                                       We Shine Daily News

                                                  தமிழ்

                                              செப்டம்பர் 03

                                          தேசிய செய்திகள்

                                                                             

 

 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக இன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

 

 •  மும்பை நகரில் சைக்கிள் பாதையை அமைக்க மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொள்ளையளவில் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

 

 •  மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி செப்படம்பர் 3ல் விரிவாக்கம் செய்யவுள்ளார். இந்த விரிவாக்கத்தின் போது 9 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

 

 •  நாடெங்கும் போதிய மாணவர்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில் கல்வி பேரவை (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.

 

 •  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 3 அன்று சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளன. உலக மக்கள் தொகையில் 42 சதவீதத்தையும், உலக வளர்ச்சியில் 23 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 17 சதவீதத்தையும் பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன.

 

 •  பிரபல இலக்கிய படைப்புகளின் பெயர்களை ரயில்களுக்குச் சூட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

 •  மேற்கு வங்காளத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மேற்குவங்க மாநிலக் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.

 

 •  ஹரியாணா மாநிலம், சண்டீகர், ஹிமாச்சலப் பிரதேசம், சிம்லா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெர் நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் பதவி வகித்தார்.

 

 •  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்ப வெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு காய்ச்சலுக்கான வைரஸ் பரவுவதைக் கண்டறிவதற்கு புதிய தொழில்நுட்ப முறையை பிரிட்டன் ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

 

 •  அமெரிக்காவில் ‘ஹார்வி’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்றத் திட்டம் ரூ 91000 கோடி நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

 

 •  கென்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவை கென்யா உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அதிபர் பதவிக்கான புதிய தேர்தலை 60 நாட்களுக்குள் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

 

 •  முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் புனித யாத்திரை. ஹஜ் பயணம் என்பது மெக்கா மாநாகரில் மூன்று புனித தலங்கள் சென்றபின் பூர்த்தியடைகிறது. ஹஜ் யாத்திரையின் இறுதி முக்கியச் சடங்கான சாத்தான் மீது கல்வீசும் நிகழ்வு மினா அருகில் நேற்று நடைபெற்றது.

 

 •  சிங்கப்பூரின் இடைக்கால அதிபராக தமிழர் ஜோசப் பிள்ளை (83) நேற்று பதவியேற்றார். சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. சிங்கப்பூரின் 23ம் அதிபர் தேர்தல் அடுத்து நடைபெற உள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

                                                                                   

 

 • இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பதவியேற்றார்.

 

 •  5வது சீசன் புரோ கபடி போட்டியின் 57வது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

 •  அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸீக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

 •  அகில இந்திய புச்சி பாபு இன்விடேஷன் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடென்ட்ஸ் லெவன் அணி கேரள அணியை வீழ்த்தியது.

 

 •  32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பைக்கு தகுதி பெற்ற 5வது அணி மெக்சிகோ ஆகும்.

 

 •  ஜார்ஜியாவில் நடைபெறவுள்ள ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார். 5 முறை உலக சாம்பியனான ஆனந்த் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்கிறார். இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆனந்த் தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

                                                                                                              

 

 • வங்கிகளின் கடன் வழங்கும் அளவு 2016-17ம் நிதியாண்டில் 8.1 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 10.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வங்கிகளின் சேமிப்பு அளவு அதிகரித்துள்ளது.

 

 •  சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு வருவதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

 

 •  வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் தொழில் மேம்பாட்டுக்காக ரூ. 50000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக வேதாந்த நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

 •  இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 15.7 சதவீதம் அதிகரித்தது.

 

 •  இந்தியன் வங்கி, எப்சிஎன்ஆர் (பி) எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் டாலரில் மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்துள்ளது.

 

 •  ஏற்றுமதியாளர்களுக்கு ‘இ-வாலட்’ எனப்படும் மின்னணு பணப்பை வசதியை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

 

 

Current Affairs

 

 • India and China have called for eliminating trade- distorting agricultural subsidies given by developed countries in a countries in a joint proposal to the WTO

 

 • Union minster for social justice and empowerment Thawar Chand Gehlot has launched a scheme that provides for physical aids and assisted living device for senior citizens to BPL category under the scheme Rashtriya Vayoshri

 

 • The sports ministry has approved constitution of a 13 member Empowered Steering Committee(ESC)

 

 • The Environment Ministry will launch an environment awareness initiative an online quiz competition “Prakriti Khoj”

 

 • Swedish defense giant Saab and Indian Congiomerate Adani group have announced collaboration in defense manufacturing.

 

 • The world’s most powerful X-ray laser has begu operating at a facility where scientistist will attempt to recreate the condition deep inside the sun

 

 • The Reliance Foundation was rewarded the prestigious Rashtriya Khel Protsation of sports

 

 • Saina and Srikanth climb up in the latest BWF world ranking

Call Now
Message us on Whatsapp